சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Apr 2015

கிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதிலும் வல்லவர்கள்...!

லகக் கோப்பை கைவிட்டு போனாலும் போனது, இந்திய கிரிக்கெட் வீரர்களின் மீதான கோபம் ஒட்டு மொத்தமும் விரட் கோஹ்லி- அனுஷ்கா ஷர்மா மீது திரும்பிவிட்டது. "உலகத்தில் நாங்கள் மட்டும் தான் காதலிக்கிறோமா? ஏன் எங்க காதல் பத்தி மட்டும் எழுதுறீங்க? என்று ஏகத்துக்கும் புலம்பி தீர்த்து விட்டார்கள். 

அவர்கள் ஆசைக்காக மற்ற ப்ளேயர்களின் காதல் கதைகளை கொஞ்சம் அறிந்து பொது அறிவை வளர்த்துக் கொள்வோமாக. இன்று கல்யாணம் நடக்கயிருப்பதால் சுரேஷ் ரெய்னாவை மட்டும் ஆட்டத்தில் விட்டு விடுவோம்.

தவான்- ஆயிஷா முகர்ஜி: எனக்கு 20 உனக்கு 30

ஒருநாள் சக வீரர் ஹர்பஜன் சிங்கின் ஃபேஸ்புக் கணக்கில், அவரது நண்பர்களின் பட்டியலை அலசியிருக்கிறார் தவான். ஒவ்வொரு நண்பராக அலசி கொண்டிருந்த தவானை, அழகான ஒரு பெண் குத்து சண்டை கையுறைகளை அணிந்தபடி நிற்கும் புகைப்படம் மிகவும் கவர்ந்துள்ளது. அடுத்த கனமே அந்த பெண்ணுக்கு எனது ஃபேஸ்புக் தோழியாக இருப்பாயா? என்று குறுந்தகவல் அனுப்பினார் தவான். அந்த பெண்ணுக்கோ விளையாட்டு என்றால் ரொம்ப இஷ்டம். அவர் ஒரு குத்து சண்டை வீராங்கனைக்கூட. 

தவானும் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் அவருக்கு அந்த பெண்ணின் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் சேருவது எளிதாக இருந்தது. அந்த பெண் பெயர் ஆயிஷா. ஆஸ்திரேலியா அம்மாவுக்கும் பெங்கால் தந்தைக்கும் பிறந்தவர். ஆயிஷா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். முதல் திருமணத்தின் பயனாய் ரியா, அலியா என இரு பெண் பிள்ளைகளும் உண்டு. இந்த விஷயங்கள் தவானையும் அவரது குடும்பத்தையும் பெரிதாக பாதிக்கவில்லை. தவானின் பெற்றோருக்கு ஆயிஷா அவரைவிட  பத்து வயது மூத்தவர் என்பது மட்டும் கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்தது.
ஆனாலும் வழக்கம்போல் காதல் ஜெயித்துவிட்டது. 2009ல் நிச்சயத்தார்த்தம் முடிய, “கிரிக்கெட்டில் சாதித்த பிறகுதான் திருமணம் செய்வேன்” என சபதம் எடுத்து ஆயிஷாவை இரண்டு வருடங்கள் காக்க வைத்து 2012ல் கரம் பிடித்தார். இப்போது அவர்களுக்கு ஜோரவர் தவான் என்று ஒரு ஆண் பிள்ளை உண்டு. தென் ஆப்ரிக்காவிற்கு மெல்போர்னில் சதம் அடித்தபோது "இது என் மனைவியின் சொந்த ஊர். இங்கு சதம் அடித்தது எனது மிகவும் ஸ்பெஷல். இந்த சதத்தை என் காதல் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்" என சிலிர்த்தார் தவான். 

"என் பொண்ணுங்ககிட்ட முன்ன பின்ன தெரியாத ஆளுங்ககிட்டயிருந்து ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்தா ஏத்துக் காதீங்க, அப்பறம் இவனை மாதிரி ஆளைத்தான் கல்யாணம் செஞ்சிக்க வேண்டி வரும் என்று எச்சரித்து வளர்க்கிறேன் என்று தவானுடன் ஏற்பட்ட காதல் பற்றி  கிண்டலாக கூறுகிறார் ஆயிஷா.

ஸ்டூவார்ட் பின்னி- மாயந்தி லங்கர்:  கால்பந்தும் கிரிக்கெட் பந்தும்

நமக்கு ஸ்டூவர்ட் பின்னி அறிமுகமாவதற்கு முன்னரே மாயந்தி லங்கர் பரிச்சயமாகிவிட்டார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பும் போட்டிகளுக்கு தொகுப்பாளினியாக ஒரு பெண் வருவாரே அவரே ஸ்டூ வார்ட் பின்னியின் மனைவி மாயந்தி. அப்பா சஞ்சீவ் லங்கர் அமேரிக்கா ராணுவத்தில் மேஜர். அம்மா பிரேமின்டா லங்கர் சிறந்த ஆசிரியருக்கான பல விருதுகளை பெற்றவர். கால்பந்து ஆட்டத்தின் மேல் காதல் ஏற்பட படிப்பை நிறுத்திவிட்டு, கடற்கரை கால்பந்து போட்டிகளுக்கு சிறப்பு தொகுப்பாளராக வேலைப் பார்த்தார். அதன் பிறகு அவரது அழகில் மயங்கி பல பேர் அவரது ரசிகர்கள் ஆகிவிட இப்போது ஐபிஎல், ஐஎச்எல் வரை வளர்ந்து நிற்கிறார்.
ஸ்டூவார்ட் பின்னியுடனான திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கபட்ட திருமணமாகவே சொல்லப்படு கிறது. ஸ்டூவார்ட் பின்னியின் அப்பா ரோஜர் பின்னிதான் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். இருவரும் ஒரு மதத்தவர். ஒரே ஃபீல்ட் அதுதான் என்கிறது ஒரு தரப்பு. 

ஆனால் இன்றுவரை அது காதல் திருமணமா, நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதற்கு விடையில்லை. இதைப் பற்றி மாயந்தியிடம் கேட்டால், "நான் வீட்டில்தான் அவரது மனைவி. வெளியில் வந்து எங்கள் காதல் கதைகளைப் பற்றி பேசி அதன் மூலம் பப்ளிசிட்டி அடைய ஆசைப்படுபவள் நானில்லை. இனி மேல் அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று சீறுகிறார். ஸ்டூவர்ட் பின்னியின் அப்பாவோ “என் பைய னுக்கு திருமணம் ஆன பிறகுதான் பொறுப்பே வந்திருக்கிறது. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ் கிறார்கள். அப்பாவாக என் கடமை முடிந்தது” என்கிறார்.

மோகமத் ஷமி- ஹாசின் ஜஹான்: 
 டேட்டிங் முதல் காதல் வரை

எல்லா வீரர்களைப் போல் நானும் எனக்கு பிடித்த பெண்ணுடன் டேட்டிங் போக ஆசைப்பட்டேன். ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் பெரிய பார்ட்டிகள் நடக்கும். நிறைய மாடல்கள் வருவார்கள். அப்படியான ஒரு பார்ட்டியில்தான் முதன்முதலில் ஹாசினைச் சந்தித்தேன். இருவரும் டேட்டிங் சென்றோம். இருவருக்கும் பிடித்துபோனது. இரண்டு வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டோம். அவளுக்கும் எனக்கும் ஒரே அலைவரிசை. நானும் அவளும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் ஈர்ப்பு ஏற்பட காரணம் என்கிறார் ஷமி. ஷமியின் திருமணத்துக்கு எந்த சக வீரர்களுக்கும் அழைப்புகள் போகவில்லை. மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தவே, எல்லா ப்ளேயர்களையும் அழைத்து ஒரு ரிசப்ஷன் வைத்துவிட்டார் ஷமி.

அஸ்வின்-ப்ரீத்தி நாராயணன்: காதல் பாதி கல்லுாரி மீதி

நானும் ப்ரீத்தியும் படித்தது சென்னைப் பால வித்யா மந்திர் பள்ளியில்தான். அப்ப இருந்தே நானும் அவளும் நண்பர்கள். நாங்க மட்டுமில்லாம எங்க இரண்டு பேர் வீட்டுலயும் நல்ல பழக்கம் இருந்துச்சு. பள்ளி படிப்பு முடிஞ்சு இரண்டு பேரும் எஸ்.எஸ்.என் காலேஜ்ல சேர்ந்தோம். காலேஜ் போன பிறகு அவ மேல எனக்கும், என் மேல அவளுக்கும் காதல் தீவிரமாகிடுச்சு. ஒட்டு மொத்த காலேஜ்க்கே நாங்க காதலர்கள்னு தெரியும். தினமும் ரொமான்ஸ்தான். அப்ப ஒரு பக்கம் கிரிகெட், ஒரு பக்கம் ப்ரீத்தி. இப்படிதான் என் கல்லூரி காலம் முழுக்க கழிஞ்சுது. கல்லூரி முடிச்சு ஒரளவு கிரிக்கெட்ல நல்ல பேர் எடுத்த பிறகு எங்க இரண்டு பேர் வீட்டுலயும் பேசி திருமணம் செஞ்சி வெச்சிட்டாங்க என்று புன்னகைக்கிறார் அஸ்வின்.

உமேஷ் யாதவ்- தன்ய வாத்தா: தனிமையை விரட்டிய காதல்
உமேஷ் யாதவ் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். 2010ல் டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கும் போது ஒரு பொதுநண்பரின் மூலம் தன்யவை சந்தித்திருக்கிறார். இருவரும் நண்பர்களாக பழக தொடங்கியிருக்கிறார்கள். தன்ய இளகிய மனம் கொண்டவர். பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையானவர். இரண்டு வருடங்கள் நண்பர்களாகவே பழகினார்கள். உமேஷ் யாதவின் அம்மா இறந்து போன நேரத்தில் தனிமையில் மனமுடைந்து போனார் உமேஷ். 

அப்போது டன்யாதான் அவரைத் தேத்தி தோழியாக உடனிருந்து தட்டிக்கொடுத்திருக்கிறார். அப்போதே தன்ய மீது காதல் வயப்பட்ட உமேஷ், பயத்தால் ஒரு வருடம் கழித்தே தன்யவிடம் சொன்னார் என்கிறார்கள் உமேஷ் யாதவின் நண்பர்கள். தன்யவுக்கு உமேஷ் யாதவ்வை பிடித்தாலும் அவரது வீட்டில் உமேஷூம், தன்யவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பயங்கர பிரச்னை. நீண்ட போராட்டத்துக்குப் பின் தன்ய வீட்டில் சம்மதம் வாங்கி கெட்டி மேளம் கொட்டியிருக்கிறார்கள்.

ரவீந்திர ஜடேஜா- சேட்னா ஜா:
 எனக்கென யாருமில்லையே

ஜடேஜாவின் தந்தை இரவுக் காவலராக பணிபுரிந்தவர். சிறுவயதிலேயே ஒரு விபத்தில் தாயை இழந்தவர். வீட்டில் பயங்கர வறுமை. இளம் வயதிலே கடுமையாக போராட வேண்டியிருந்தது. "எனக்கென யாருமில் லையே" என்ற உணர்வு ஜடேஜாவுக்கு எப்போதும் இருக்கும். ஆனால் சேட்னா வந்த பிறகு அவர் முழுவதும் மாறிவிட்டார் என்கிறார்கள் ஜடேஜாவின் நண்பர்கள். 

அவரது காதலி சேட்னா ஜாவும் ஒரு எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவரே. சேட்னாவின் அப்பா ஒரு அரசு அதிகாரி, அம்மா ஹோம் மெக்கர். ஐபிஎல் போட்டிகளின் போது இருவரும் ஒன்றாக வெளியில் செல்ல ஆரம்பித்த பிறகுதான் அவர்கள் காதலில் இருப்பதே மீடியாக்களுக்கு தெரிந்தது. ஆனால் இதைப் பற்றி ஜடேஜாவும், சேட்னாவும் அமைதி காத்தே வருகிறார்கள்.

ரகானே- ராதிகா:
 கூச்ச சுபாவியின் காதல்

ரகானேவிற்கும் ராதிகாவுக்கும் கடந்த வருடம்தான் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது. ரகானேவுக்கு பார்ட்டிகளுக்கு செல்லும் பழக்கமில்லை என்பதால் அவர் எந்த பெண்ணுடனும் டேட்டிங் கிற்கு அழைத்து செல்ல வாய்ப்பில்லாமலே போனது. ரகானேவோ காதல் பற்றி கேட்டால் 'நான் பயங்கர கூச்ச சுபாவி. பெண்களிடம் பேசுவது என்றாலே பயம்' என்கிறார்.
தோனி- சாக்ஷி: கண்டதும் காதல்


ஒட்டு மொத்த இந்திய பெண்களும் தோனி போல் கணவன் வேண்டும் என்று ஏங்கிய போது அவரை ஒரே ஒரு சிரிப்பில் காதல் வயப்பட வைத்துவிட்டார் சாக்ஷி. கொல்கத்தாவின் தாஜ் ஹோட்டலில் சாக்ஷி கேட்டரிங் படித்துகொண்டே வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கிரிக்கெட் போட்டிகளுக் காக சென்ற தோனி, சாக்ஷியைச் சந்தித்திருக்கிறார். பார்த்தவுடனேயே தோனிக்கு சாக்ஷியைப் பிடித்துவிட்டது. 

இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதோடு இருவர் குடும்பங்களும் நண்பர்கள் என்பது ஆச்சர்யம். ஆனால்  அப்போதெல்லாம் இருவருக்குமிடையே அழமான பிணைப்பு இல்லை. ஏனோ சாக்ஷி தோனிக்கு அன்று மட்டும் வித்தியாசமாக தெரிந்திருக்கிறார். உடனே தோனி தனது சகோதரர் முலம் சாக்ஷி போன் நம்பரை வாங்கி குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார். 

முதலில் சாக்ஷியால் அதை நம்பவே முடியவில்லையாம். பிறகு தன் பிறந்த நாளுக்கு சாக்ஷியை மும் பைக்கு அழைத்த தோனி, அங்கே வைத்து தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்டுயிருக்கிறார். இப்போது இருவருக்கும் ஜிபா (பெர்ஷியன் மொழியில் அழகு) என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

No comments:

Post a Comment