சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Apr 2015

சூப்பர் ஓவரில் விளையாட இந்திய வீரர்களுக்கு 'தில்' இல்லையா?

ஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் முதல் முறையாக சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தோல்வி முடிவு செய்யப்பட்டது. இதில் சூப்பர் ஓவரில் ஒரு இந்தியர் கூட விளையாடாதது இந்திய ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அகமதாபாத் நகரில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில், முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. சேஸ் செய்த பஞ்சாப் அணியும் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்ததால் வெற்றி தோல்வியை முடிவு செய்ய சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த ஐ.பி.எல். தொடரில் அரங்கேறிய முதல் சூப்பர் ஓவர் இது.

இதில் முதலில் பஞ்சாப் அணி தரப்பில் டேவிட் மில்லர், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங் செய்தனர்.  ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ் மொரிஸ் பந்துவீசினார். இதிலும் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.

பின்னர் ராஜஸ்தான் அணியின் ஷேன் வாட்சன், ஃபாக்னர் ஆகியோர் பேட்டிங் செயய களமிறங்கினர். பஞ்சாப் அணி வீரர் மிட்செல் ஜான்சன் பந்து வீசினார். முதல் பந்தில் ஷேன் வாட்சன் போல்டு ஆனார். அடுத்து ஸ்டீவன் சுமித் களம் இறங்கினார். ஆக ராஜஸ்தான் அணியிலும் சூப்பர் ஓவரில் இந்திய வீரர்களின் பங்களிப்பு என்று இல்லை.

சூப்பர் ஓவர் போன்ற இக்கட்டான தருணங்களில் விளையாட இந்திய வீரர்களுக்கு தில் இல்லையா? அல்லது பயிற்சியாளர்கள் இந்திய வீரர்களை நம்பவில்லையா? இதுபோன்ற தருணங்களில் இந்திய வீரர்களை ஆடவிட்டால்தானே தேசிய அணிக்காகவும் இக்கட்டான தருணங்களை எதிர்கொள்ளும் அனுபவம் கிடைக்கும்.


No comments:

Post a Comment