சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Apr 2015

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் 9வது அணி

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்துவிட்ட நிலையில் வீரர்கள், மைதானங்கள், ரசிகர்கள் என ஒரு பக்கம் கூட்டம் அலை மோத துவங்கிவிட்ட நிலையில் 8 அணிகளும் வெற்றிக்காக போராடும் போது ஒன்பதாவது அணி எளிமையான வெற்றிக்கான திட்டத்தை தீட்டியுள்ளது. அந்த ஒன்பதாவது அணியாக களமிறங்கி உள்ளவை  தான் டிஜிட்டல் விளம்பரங்கள். இந்த போட்டிகளுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளதை பயன்படுத்தி நிறுவனங்கள் டிஜிட்டல் போரில் குதித்துள்ளன. அவற்றில் சில..

இ-காமர்ஸ் நிறுவனங்கள்!
ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஒளிபரப்பின் போது தங்கள் விளம்பரங்களை ஒளிபரப்ப திட்டமிட்டு ஒப்பந்தங்களை செய்துள்ளன. உலகக் கோப்பை போட்டியில் கூட இந்தியா ஆடும் ஆட்டத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களுக்குமே பார்வையாளர் எண்ணிக்கை அதிகம் என்பதால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிகளை மையப்படுத்திய ஆஃபர்களிலும் குதித்துள்ளன.

 
பெரிய திரைகள்!
ஐபிஎல் போட்டிகள் நகரங்களில் உள்ளவர்களை தொலைகாட்சி வழியாக சென்றடைந்தாலும் அதிக மக்களை சென்றடையும் நோக்கில் ஐபிஎல் நிர்வாகம் சிறு மற்றும் பெரிய நகரங்களில் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் பெரிய திரையை அமைத்து போட்டிகளை ஒளிபரப்புகிறது இதன் மூலம் அதிக மக்களை சென்றடைய முயற்சி செய்து வருகிறது. இதற்கான விளம்பரங்கள் மூலமாகவும் வருமானத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
 
பல மொழிகளில் ஒளிபரப்பு!
ஆங்கிலம் மொழி தவிர தமிழ், த்லுங்கு, கன்னடம் இந்தி உட்பட்ட மொழிகளில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது சோனி நிறுவனம். இதனால் பிராந்திய மொழி பார்வையாளர்களையும், பிராந்திய நிறுவனங்களும் விளம்பரம் செய்ய முடியும் என்பதால் சோனிநிறுவனம் தனது பிராந்திய மொழி சேனல்களில் வர்ணைனையுடன் கிரிக்கெட்டை ஒளிபரப்புகிறது. 
 
 
 
சமூக வலைதள மார்க்கெட்!
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் உடனடி அப்டேட்டுகளை அளித்து வருவது மட்டுமின்றி இணையதளங்களில் வீரர்களை பற்றிய விவரங்களை அதிகம் ரசிகர்கள் தேடுவதால் ஆன்லைன் விளம்பரதாரர்கள் அதிக ஆர்வத்துடன் விளம்பரங்களுக்கு செலவழித்து வருகின்றனர். இதன் மூலம் போட்டி , குறிப்பிட்ட பிராண்டு மற்றும் அதன் போட்டிகள் தொடர்ந்து மக்களிடம் சென்று சேருவதால் இந்த மார்க்கெட்டையும் நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன.
 
ஆப்ஸ் மார்க்கெட்!

ஐபிஎல் போட்டிகளுக்காக சமூக வலைதள ஆப்ஸ்களும், கிரிக்கெட் ஸ்கோர்களை சொல்லும் ஆப்ஸ்களும் புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர் விகிதத்தை அதிகப்படுத்துகின்றன. ஆப்ஸ் டவுன்லோடு மட்டும் இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளை காண அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இப்படி தொடர்ந்து நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிகளை குறிவைத்து விளம்பரம் செய்கின்றன. இந்த விளம்பரங்கள் மூலம் நல்ல வருமானம் நிச்சயம் கிடைக்கும் என்பது மட்டுமின்றி, ஒரு அணி வெற்றி பெற்றாலும் தோற்றாலும் வணிக ரீதியாக வெற்றியடைகின்றன என்பதால் இந்த போட்டியில் தோற்காத ஒன்பதாவது அணியாக இந்த ஆன்லைன் விளம்பரங்கள் திகழும் என்பதில் ஆச்சர்யமில்லை.


No comments:

Post a Comment