சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Apr 2015

ஐ.சி.சி தலைவர் பதவியில் இருந்து விலகல் ஏன்? - ஸ்ரீனிவாசனால் புலம்பும் முஸ்தபா கமால்!


விதிகளுக்கு புறம்பாக செயல்படுபவர்களால் கிரிக்கெட் அழிந்து விடும் என ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து விலகிய வங்கதேச அமைச்சர் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பின், டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ''ஐ.சி.சி. புதுப்பிக்கப்ட்ட விதியின் படி ஐ.சி.சி. தலைவர்தான் உலகக் கோப்பை¬யை வெற்றி பெற்ற அணிக்கு கொடுக்க வேண்டுமென்று விதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. இது போன்றவர்களால் கிரிக்கெட் அழிந்து விடும். இதுபோன்றவர்கள் கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் அழிந்து விடும். நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை ஐ.சி.சி. முழுமையாக ஆராய வேண்டும்'' என்றார். 

உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டம் முடிந்தபின் நடந்த பரிசளிப்பு விழாவில் ஐ.சி.சி. சேர்மன் ஸ்ரீநிவாசன் விதிகளுக்கு புறம்பாக உலகக் கோப்பையை வழங்கியதால் சர்ச்சை வெடித்தது. அதோடு இந்தியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசம் தோல்வியடைய நடுவர்களின் மோசமான தீர்ப்பே காரணம் எனவும் ஐ.சி.சி இந்திய கிரிக்கெட் கவுன்சிலாகவே செயல்படுகிறது என்றும் முஸ்தபா கமால் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது வெடித்த இந்த சர்ச்சை தற்போது ராஜினாமாவில் முடிந்துள்ளது. 

ஐ.சி.சி.யின் புதிய தலைவராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜிம் சேத்தி தேர்வு செய்யப்படுகிறார்.



No comments:

Post a Comment