சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Apr 2015

ரசிகர்களின் இதயத்தை நொறுங்க செய்த தோனியின் கண்ணீர் படம்!

விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியடையும் வீரர்கள் அழுவது ரசிகர்களையும் பலமாக தாக்கிவிடும். அண்மை காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் இதுபோன்று இதயத்தை நொறுங்க செய்யும் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இப்போது பார்க்கலாம்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சீனாவுக்காக 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் லீயூ ஜியாங் முதல் தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் பிற விளையாட்டுகளில் சீனா ஆதிக்கத்த் செலுத்தினாலும் தடகளத்தில் தங்கம் என்பது அந்த நாட்டுக்கு ஒரு கனவாகவே இருந்தது. அந்த கனவை நனவாக்கியவர் லீயூ ஜியாங் என்பதால் அவர் சீனத்தின் 'நேஷனல் ஹீரோ' ஆனார். தொடர்ந்து 2008ஆம் ஆண்டு பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. சொந்த ரசிகர்கள் முன்னிலையில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் லீயூ ஜியாங் மீண்டும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. களத்தில் லீயூ ஜியாங் ஓடத் தயாராக இருந்தார். அப்போது அவருக்கு குதிகாலில் தசை நார்கிழிந்து ஓட முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் அவர் போட்டியில் இருந்து விலக நேரிட்டது. இதனை தொடர்ந்து லீயூ ஜியாங் அவரது குடும்பத்தினர், சீன மக்கள்  அழுதது ரசிகர்களின் நெஞ்சை பிசைந்தது.

கடந்த ஆசிய போட்டியின் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சரிதா தேவி தென்கொரியாவின் ஜினா பார்க்குடன் மோதினார். இதில் சரிதா தேவி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சரிதாதேவி வெண்கல பதக்கத்தை வாங்க மறுத்து பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அழுதது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு ஆண்டு தடையுடன் சரிதா தேவி தப்பினார்.
கடந்த 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டம் டோர்ட்மண்ட் நகரில் நடந்தது. போட்டியை நடத்திய ஜெர்மனி அணி  80 ஆயிரம் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் இத்தாலி அணியை எதிர்கொண்டது. ஃபேபியோ கிராஸ்சோ, அலெசான்ட்ரோ டெல்பியரோ ஆகியோர் அடித்த கோல்களால் இத்தாலி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த தொடரில் ஜெர்மனி அணிக்கு புகழ்பெற்ற ஜெர்மனி வீரர் கிளின்ஸ்மேன் பயிற்சியாளராக இருந்தார். கிளின்ஸ்மேன் உலகக் கோப்பையை வென்று தருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஜெர்மனி மக்கள் இந்த தோல்வியால் மனம் நொறுங்கிப் போனார்கள்
கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி பிரேசில் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது பிரேசில் ரசிகர்களை கண்ணீரில் குளிக்க வைத்தது. சொந்த நாட்டில் நடந்த போட்டியில் பிரேசில் அணி இவ்வளவு மோசமாக இதுவரை விளையாடியது இல்லை. இந்த தோல்வி உலகம் முழுக்க இருந்த பிரேசில் ரசிகர்களையும் கண்ணீர் விட வைத்தது
சிட்னியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பவுன்சர் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபில் கியூஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின் ஃபில் கியூஸ் மரணம் அடைந்தார். கிரிக்கெட் ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் இது. தற்போது உலகக் கோப்பையை 5வது முறையாக வென்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை ஃபில் கியூசுக்கே அர்ப்பணித்துள்ளது.

மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய வீரர் சச்சின் கண்ணீர் சிந்த பிரியா விடை பெற்றது இந்திய ரசிகர்களை உருக்கியது. இது சச்சினின் 200வது டெஸ்ட் போட்டி ஆகும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தென்ஆப்ரிக்க அணி போராடி தோற்றது. இந்த போட்டி முடிந்ததும் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், மோர்கல், ஸ்டெயின், ஆம்லா, இம்ரான் தாகீர் போன்றோர் குழந்தை போல அழுததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மழை காரணமாக தென்ஆப்ரிக்க அணி தொடர்ந்து தோல்விகளை சந்திப்பது ரசிகர்களிடையே அந்த அணி மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது.


அண்மையில் முடிவடைந்த கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியடைந்தது. இந்த போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் தோனியின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகியிருந்தது. தோனியின் கண்களில் கண்ணீர் தேங்கியிருப்பது போன்ற வெளியிடப்பட்ட அந்த படம் இந்திய ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
                      
2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஃபிரான்ஸ் கேப்டன் சிடேன் ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடி கொடுத்தார். இத்தாலி வீரர் மார்கோ மாட்டரசி 19வது நிமிடத்தில் அடித்த கோலால் ஆட்டம் சமன் கண்டது. இந்த சமயத்தில் மார்கோ மாட்டரசிக்கும் சிடேனுக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது மார்கோ மாட்டரசியை சிடேன் முட்டித்தள்ள அவர் சிவப்பு அட்டைக் காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இறுதியில்  ஃபிரான்ஸ் அணி தோல்வி கண்டது. மைதானத்தில் இருந்து தன்னை நொந்தபடி சிடேன் வெளியேறும் காட்சி ரசிகர்களை பெரிதும் வேதனைக்குள்ளாக்கியது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பையை வென்றார். ஸ்பெயின் வீரர் ஒருவர் ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பையை வெல்வதும் இதுவே முதல் முறை. ரஃபேல் நடால் கோப்பையை வாங்கும் போது ரோஜர் ஃபெடரர் தன்னை அறியாமல் அழுதது அரங்கத்தில் இருந்தவர்களை நெகிழச்செய்தது.



No comments:

Post a Comment