சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Apr 2015

ஐ.பி.எல்-லில் இருந்து விலகுவோம்- கொல்கத்தா அணி மிரட்டல்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பி.சி.சி.ஐ நீக்கவில்லையெனில் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகப்போவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் பந்துவீச்சு சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது எனக் கூறி பி.சி.சி.ஐ அவருக்கு தடை விதித்தது. இதனால் பி.சி.சி.ஐ. நடத்தும் போட்டிகளில் சுனில் நரைன் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பெற்றிருந்த சுனில் நரைன் அணியில் இருந்து வாபஸ் பெறப்பட்டார்.


இந்த நிலையில் சுனில் நரைனின் பந்துவீச்சு இங்கிலாந்தில் உள்ள லாங்பாரோவில் உள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் ஐ.சி.சி. சார்பாக ஆராயப்பட்டது. அதனடிப்படையில் சுனில் நரைனின் பந்துவீச்சில் எந்த குறைபாடும் இல்லை எனக் கூறி சுனில் நரைனுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐ.சி.சி. நேற்று நீக்கியது. ஆனால் இதனை ஏற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது. சென்னையில் உள்ள ராமச்சந்திரா பல்கலைக்கழக வளாகத்தில் பி.சி.சி.ஐ மையத்தில் சுனில் நரைன் பந்துவீச்சை ஆராய்ந்த பின்னரே தடையை நீக்க முடியும் என்று பதிலளித்துவிட்டது. 

பி.சி.சி.ஐ செயல்பாட்டால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பலவீனப்படுத்தும் முடிவில் பி.சி.சி.ஐ இது போன்று செயல்படுவதாகவும் ஐ.பி.எல். தொடரில் 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள சுனில் நரைனை குறி வைத்து ஒதுக்க முனைவதாகவும் கொல்கத்தா அணி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சுனில் நரைன் மற்றாரு சோதனைக்கு அனுப்பப்படுவதை கொல்கத்தா அணி நிர்வாகம் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தற்போதைய பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா நல்ல முடிவு எடுப்பார் என்று கருதுகிறது. அல்லது ஐ.பி.எல். தொடரை புறக்கணிக்கும் முடிவில் கொல்கத்தா அணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. . நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல். தொடர் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்குகிறது.



No comments:

Post a Comment