தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தாமரையுடன் திரும்ப வாழவும் விரும்பவில்லை என கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவரது வீட்டில் திரைப்படப் பாடலாசியர் தாமரை உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், உணமையாகவே தியாகு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாரா என தியாகுவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
‘’நான் ஏன் ஓடி ஒளியணும். பத்திரிகைகளுக்கு தாமரை கொடுத்த கடித்தைப் பாத்தேன்.எவ்ளோ தான் மோசமான கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரிவுதான் இதுக்கு நிரந்த தீர்வா இருக்கும். நான் வேளச்சேரியிலதான் இருக்கேன். நான் எங்கயும் ஓடி ஒளியலை. ஒரு நாள் என்னோட போன் ஸ்விட்ச் ஆப் ஆனதுக்காக எப்பவுமே இப்படிதான்னு முடிவு பண்ணா என்ன அர்த்தம்.
நான் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துட்டுதான் இருக்கேன்.களப்பணியிலயும் இயங்கிட்டுதான் இருக்கேன். தொடர்ந்து 5 வருஷமா எங்களுக்குள்ள ஒத்து வரலைனு அவங்களே சொல்றாங்க. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு யோசிக்கிற பொண்ணும் அவங்க இல்ல...அப்படி இருக்க எதுக்காக இப்படி யோசிக்கணும்.
என் மகனோட நான் தொடர்ந்து ஈமெயில் மூலமா பேசிட்டுதான் இருந்தேன். அவனும் எனக்கு பதில் அனுப் பியிருக்கான்.மகனுக்கும் எனக்குமான உறவு சுமூமாக இருந்த நிலையில், அவனோட மெயிலையும் முடக் கிட்டாங்க.ஒரு கட்டத்துல மகனை பிரியிற சக்தி எனக்கில்லைனாலும் என் மேல பாசத்தோட இருக்குற மகனுக்கு கஷ்டத்தை கொடுக்க வேணாம்னு கொஞ்சம் கொஞ்சமா அவனைவிட்டும் வேற வழியில்லாம அவனை தொடர்பு கொள்ள முடியாம பிரிஞ்சிட்டேன்.ஒரு பையனுக்காக ரெண்டு பேர் சண்டை போட் டுக்குறதை விட, அவன் அம்மாகிட்டயே அவன் இருக்கட்டும்னு விலகிட்டேன்.
குடும்பத்துல இருக்குறதால களப்பணியில ஈடுபட முடியாதுனு எதுவும் இல்ல. இதுக்கு முன்னாடி என் னோட சமுதாயப் பணிகளை ஏத்துக்கிட்டவங்க இப்ப ஏத்துக்க மறுக்குறாங்க...அவ்வளவுதான்.இனி அவங்க என்னை அழைத்தாலும் அவங்களோட சேர்ந்து வாழற எண்ணம் எதுவும் எனக்கு இல்ல. அவங்களோட உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனா சேர்ந்து வாழ விருப்பம் இல்ல.
எனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லை. அதனால அவங்களா விவாகரத்து கேக்காம நானாவும் நீதிமன்றத்தை அணுக மாட்டேன். அவங்க விவகாரத்து கேட்டாலும் மனசு ஒத்து கொடுக்க தயாரா இருக்கேன்.அதே நேரத்துல என் மகனிடம் மனப்பூர்வமா மன்னிப்பு கேக்குறேன்.
விகடன் மூலமா அவன்கிட்ட ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்.’’என்றவர் சற்று இடைவெளியுடன் சொன்னார்.
‘’மகனே சமரா...நீ ரொம்ப புத்திசாலி..நல்லா படிக்கணும்.நல்லா வளர்ந்து வாழ்ந்து காட்டணும்.அப்பா உன்கிட்ட மானசீகமா மன்னிப்பு கேட்டுக்கிறேன் ‘’!
உலகக் கோப்பை போட்டி தொடங்கும் தருவாயில், இந்திய அணியின் கேப்டன் தோனியின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்த தோனிக்கு இந்திய அணியின் யோகா மாஸ்டர் அமித் ஷா என்பவர்தான் மனதை கட்டுப்படுத்தும் மந்திரத்தை கற்றுக் கொடுத்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்லும் நோக்குடன் இந்திய அணி, 4 மாதங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா மண்ணுக்கு புறப்பட்டு விட்டது. நீண்ட காலம் தாய்நாட்டை பிரிந்து இருக்கும் வீரர்களை வீட்டு நினைவு வாட்டி விடக்கூடாது என்பதற்காக இந்திய அணியின் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள் ரொம்பவே மெனக்கெடுகின்றனர்.
குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் தோனி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அவரது மனைவி சாக்ஷி இங்கே நிறைமாத கர்ப்பிணி. கேப்டன் தோனியின் மன நிலை எப்படி இருந்திருக்கும்? கொஞ்சம் யோசித்து பார்த்தால் தந்தையாகப் போகும் எந்த ஆண் மகனும் விரும்பாத நிகழ்வு இது. குழந்தை பிறக்க போகும் சமயத்தில் எந்த ஆணும் மனைவியின் அருகில்தான் இருக்க விரும்புவார். ஆனால் தோனி விஷயத்தில் இது நடககவில்லை.
எனினும் இந்த சூழ்நிலையை தோனி எப்படி சமாளித்தார்? அதற்கு உதவியாக இருந்தது இந்திய அணியின் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள்தான். குறிப்பாக யோகா மாஸ்டர் அமித் ஷா, இந்த தருணத்தில் தோனிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அவர் மனதை இலகுவாக வைத்துக் கொள்ள உதவியாக இருந்துள்ளார். இதன் காரணமாகத்தான் குழந்தை பிறந்த பின்னர் கூட தோனி இன்னும் வரை குழந்தையை பார்க்க தாய்நாட்டுக்கு வரவும் இல்லை. தோனி விரும்பியிருந்தால் ஒருநாளில் இந்தியா வந்து குழந்தையை நேரில் பார்த்து விட்டு திரும்பி விட முடியும். யோகா கொடுத்த தெம்பால் மனிதர் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்.
தோனி மட்டுமல்ல அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் யோகா மாஸ்டர் அமித் ஷா, பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் மனநல மருத்துவர் வி.பி.சுதர்ஷனன் ஆகியோரின் ஆலோசனைகள், அறிவுரைகள் மிகுந்த உதவியாக இருந்துள்ளது. வீரர்களின் மனநிலையை கண்காணித்து அவர்களை ஹோம் சிக்கில் இருந்து விடுவிப்பதுதான் இவர்களது முக்கிய வேலையும் கூட.
இந்த உலகக் கோப்பையை பொறுத்த வரை ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு 10 சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள் உள்ளனர். இந்தியாவுக்கு 15 சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள் இருக்கின்றனர். ஆக மைதானத்தில் 11 ஜோடி கால்கள் வெற்றி பெற களத்திற்கு வெளியே 15 பேர் கொண்ட குழு தன்னை மறந்து உழைத்து கொண்டிருக்கிறது. அவர்கள் யார்? யார்?
''இந்தப் படத்துக்காக 25 டைட்டில் யோசிச்சுவெச்சிருந்தோம். அதுல எதை வெச்சுக்கலாம் 'அதுவா... இதுவா?’னு நைட்டு பத்து மணிக்கு உட்கார்ந்தோம். பேசிப் பேசி 'எலி’னு ஃபிக்ஸ் பண்ணப்ப, அதிகாலை 3 மணி. நல்லவன் கூட்டத்துல இருக்கிற கெட்டவனை 'கறுப்பு ஆடு’னு சொல்வாங்க. அதுவே கெட்டவன் கும்பல்ல இருக்கிற நல்லவனை எப்படிச் சொல்வாங்க? 'உள்ளுக்குள்ள எங்கேயோ ஒரு எலி உருட்டிட்டு இருக்கு. அதைப் பொறி வெச்சுப் புடிங்கடா’னுதானே? அப்படி ஒரு நல்ல எலிதான் நம்ம வடிவேலு சார். பிள்ளையாருக்கு உதவுற வாகனம், 'டாம் அண்ட் ஜெர்ரி’யில சேட்டை பண்ற செல்லம்னு எலி கேரக்டர் எப்பவுமே மக்களுக்கு ஸ்பெஷல்தான்'' - இரண்டே எழுத்தில் தலைப்புப் பிடித்த கதையை உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். வடிவேலுவின் 'ரீஎன்ட்ரி’ ஆன 'தெனாலிராமன்’ படத்தை இயக்கியவர், வடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸிலும் தொடர்கிறார்.
''அது என்னங்க... உங்களுக்கும் வடிவேலுவுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி?''
''எல்லாம் தானா அமையுது. 'தெனாலிராமன்’ ஷூட்டிங் முடிச்சவுடனே, 'தம்பி, அடுத்த படத்துக்குக் கதை ரெடி பண்ணிடுப்பா’னு சொன்னார் வடிவேலு சார். அப்புறம் ரெண்டு பேரும் வேற எதுவுமே பேசிக்கலை. கதையை ரெடி பண்ணிட்டுப் போய் சொன்னேன். அவருக்கும் பிடிக்கவும், உடனே தடதடனு ஷூட்டிங் போயிட்டோம். வடிவேலு சார் திருடனா, போலீஸா பண்ணின சேட்டைகளைப் பார்த்திருக்கோம். ஆனா, ஓர் உளவாளியா அவர் என்ன பண்ணுவார்னு த்ரில்லிங் காமெடியா 'எலி’ படத்துல சொல்லியிருக்கோம். எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர் மாதிரி இவரும் ஒரு கொள்ளைக்கூட்டத்தைக் கண்டுபிடிக்க உளவாளியா உள்ளே நுழையுறார். அங்கே அவர் படுற அவஸ்தைகளும், சைடு கேப்ல பண்ற சாகசங்களும்தான் கதை!''
''உளவாளின்னா ஜேம்ஸ் பாண்ட் மாதிரி எக்கச்சக்க காதலிகளோட ரொமான்ஸ், டூயட் எல்லாம் பாடுவாரா?''
''ஏங்க இப்படிக் கொளுத்திப்போடுறீங்க? படத்துல அவருக்கு ஒரே ஒரு ஹீரோயின்தான். அவரைத்தான் காதலிப்பார். அந்தக் காதல்லயும் காமெடிதான் தெறிக்கும். முன்னாடியே அசின், நயன்தாராவை எல்லாம் ஜாலியா காதலிச்சிருப்பார்ல. அதே மாதிரி இந்தப் படத்துலயும் ஜாலியான காதல் அத்தியாயங்களைப் பார்க்கலாம். படத்தில் கொஞ்சமா ரொமான்ஸும் இருக்கு. 'உங்களை டீல் பண்றது ரொம்ப டிஃபிக்கல்ட்டால இருக்கு’னு இங்கிலீஷ், தமிழ்னு கலந்துகட்டி கலகலனு பன்ச் டயலாக் பேசி அசத்தியிருக்கார். ரொம்ப நாளைக்குப் பிறகு வடிவேல் சாரை இந்தப் படத்தில் முழு ஃபோர்ஸோட பார்ப்பீங்க. தயாரிப்பாளர் சதீஷ்குமார் இந்தப் படத்தை சீக்கிரமே ரிலீஸ் பண்ண ரொம்ப ஆர்வமா இருக்கார்!''
''வடிவேலுக்கு ரீஎன்ட்ரி கொடுத்த 'தெனாலி ராமன்’ பட ரிசல்ட், நீங்க எதிர்பார்த்த அளவுக்கு இருந்துச்சா?''
''வடிவேலு சார் ஏற்கெனவே 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துலயே வரலாற்று சப்ஜெக்ட் பண்ணிட்டார். அவர் நடிச்ச முதல் வரலாற்றுப் படம் என்பதால், அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் வேற லெவல்ல இருந்துச்சு. ஆனா 'தெனாலிராமன்’, வடிவேல் சார் நடிச்ச மூணாவது வரலாற்றுப் படம். அதனால எதிர்பார்ப்பு லெவல் கொஞ்சம் குறைஞ்சிருக்கலாமே தவிர, படம் பார்த்த எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. எங்களுக்கும் சந்தோஷம்தான்.''
கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது.
கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு திருமணமாகவில்லை என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.
இந்த மாணவியும், இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். எல்லை மீறிய நிலையில் கர்ப்பமடைந்தார். கர்ப்பத்தை எப்படி கலைப்பது என தெரியாமல் விட, கழிப்பறையில் பிரசவிக்கும் நிலையை எட்டி விட்டார். கர்ப்பம் தரித்து உடலில் மாற்றங்கள் தெரிய துவங்கிய போது, 'எனக்கு வயிறு வலிக்கிறது. வயிற்றில் கட்டி இருப்பதாக டாக்டர் சொன்னார். சில மாதங்களில் சரியாகி விடும்' என சொல்லியிருக்கிறார் அந்த மாணவி.
இதை அப்போது நம்பிய மாணவியின் பெற்றோர், திருமணமாகாத நிலையில் மகளுக்கு குழந்தை பிறந்ததால் கதறி அழுதனர். கோவை அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் இது. இது ஏதோ ஒரு மாணவிக்கு மட்டும் நிகழ்ந்தது என்று கருத முடியாது. அந்தளவுக்கு சமீப காலங்களாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம்பெண்கள் கர்ப்பம் அடைவது மிகவும் அதிகரித்துள்ளது. உடலுறவு மற்றும் அதன் பின்விளைவுகள் என எதுவும் தெரியாமலேயே இவர்கள் பாலுறவில் ஈடுபட்டு, சங்கடங் களை அனுபவித்து வருவது சமூகத்தின் முன் பல கேள்விகளை முன் வைக்கிறது. பாலியல் கல்வியின் தேவையை அதிர்ச்சியுடன் சொல்கிறது.
இளம் வயது கர்ப்பம் காரணங்கள்
"கருக்கலைப்பு செய்ய முன்வருபவர்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் 13 வயது முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவிகளும் இருக்கின்றனர். பல நேரங்களில் தங்கள் காதலர்களுடன் வந்து கருக்கலைப்பு செய்ய வருகின்றனர். ஆனால் அது முடியாதபோது இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன," என்கின்றனர் மருத்துவர்கள்.
இது போன்ற இளம் கர்ப்பங்களுக்கு இதுதான் காரணம் என ஒன்றை மட்டும் நாம் சொல்லி விட முடியாதபடி காரணங்கள் பரவி கிடப்பதாக சொல்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். "எதிர்பாலினருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள், இணையத்தின் ஊடாக பாலியல் சார்ந்த எழுத்துக்களையும், காட்சிகளையும் எளிதாக அணுகும் வாய்ப்பு, பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை செலவழிக்காதது என இளம் கர்ப்பங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது பாலியல் சார்ந்த கல்வி இல்லாதது தான்.
ஆபாச தளங்களுக்கு முக்கிய பங்கு
தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிவேக வளர்ச்சியால் இளம் வயதிலேயே வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. அவர்களின் வாழ்க்கைமுறைகளும் அதிகரிக்கும் இளம் கர்ப்பங்களுக்குக் காரணம். ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு சில வசதிகளை செய்து கொடுக்கிறது. அதே வசதியை நாம் தவ றான திசையிலும் பயன்படுத்தும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. அதில் ஒன்றுதான் இணையத்தில் பாலியல் சார்ந்த தேடல்கள். இணையத்தை பயன்படுத்துவோரில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாலி யல் காட்சிகள், எழுத்துகளை கொண்ட இணைய தளங்களை பார்வையிடுவதாக சொல்கிறது புள்ளி விவரங் கள்.
இணையதளங்களில் பாலியல் குறித்து தவறான பல விஷயங்கள் விரவிக் கிடக்கின்றன. பதின் பருவத்தினரை தூண்டி, அவர்களது வேட்கையை திருப்திப்படுத்தவே இந்த தளங்கள் உதவுகிறது. முதலில் இது போன்ற படங்களை பார்ப்பது என்றால் உங்களுக்கு அதற்கான கருவிகள் தேவைப்பட்டன. பின்னாளில் இன்டர்நெட் சென்டர்களுக்கு சென்றால் பார்க்க முடியும் என்ற நிலை உருவானது. பின்னர் இது வீடுகளுக்கு பரவி, இப்போது கையில் வைத்திருக்கும் செல்போன்களிலேயே பார்த்துக்கொள்ளும் சூழலை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்கள் மட்டுமல்ல.. குழந்தைகள் கூட இந்த படத்தை பார்க்க வாய்ப்புகள் உள்ளது.
இணைய தளங்களில் ஆபாச படங்களை பார்க்க துவங்கும் சராசரி வயது 11, 12 என வெளிவரும் புள்ளிவிவரங்கள் இதையே உணர்த்துகின்றன.
இதனால் அதிக லாபம் சம்பாதிக்கும் வலை தளங்களாக இது போன்ற தளங்களே உள்ளன. இந்த காட்சி களை பார்க்கும் பதின்பருவத்தினர் அதை நோக்கி தூண்டப்படுகின்றனர். அதுதான் மேற்சொன்ன சம்பவங் களுக்கு காரணமாகிறது. இணையத்தை எந்த நாட்டிலும் தடை செய்து விட முடியாது. இதற்கு அடிமையா வதன் தீங்குகளை இளைஞர்களிடம் விளக்கினாலே போதுமானது. பாலியல் தொடர்பான போதுமான கல்வியையும் வழங்குவதன் மூலம், இது போன்ற தளங்களின் தீயவிளைவுகளை உணர்த்தி, அதை தவிர்க்க செய்ய முடியும். பாலியல் கல்வி தீர்வை தரும்?
2007 ஆம் ஆண்டு மத்திய அரசு பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால் சரியாக முன்வைக்கப்படாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. எய்ட்ஸ் நோய் பரவலாக பரவி வந்த கால கட்டத்தில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக பாலியல் கல்வி அவசியம் என முன்வைக்கப்பட்டது. இளம் கர்ப்பங்களைத் தடுப்பதும் கூட இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
ஆனால் பாலியல் கல்வியை பள்ளிகளில் அறிமுகப்படுத்த கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால் மேற் கத்திய கலாச்சாரத்தை கொண்டு வந்து விடும் என பழமைவாத அமைப்பு கள் குரல் எழுப்பின. 'இது விழிப்புணர்வை ஏற்படுத்தாது. மாறாக பாலியல் உணர்வுக்கு வடிகாலாக மாறி விடும்' என எச்சரித்தன. இதனால் துவங்கிய வேகத்தில் கிடப்பில் போடப்பட்டது பாலியல் கல்வி திட்டம்.
'உண்மையில் பாலியல் கல்வி என்பது அறிமுகப்படுத்தப்பட்டால், இளம் வயது கர்ப்பங்களை பெருமளவில் குறைக்க முடியும். பதின் பருவத்தினருக்கு பாலியல் கல்வி தொடர்பாக பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால் அவர்களின் பிரச்னைகள், சந்தேகங்கள் குறித்து பேச அவர்களுக்கு யாரும் இல்லை. இதனால்தான் பாலி யல் சார்ந்த எதுவும் தெரியாமல், சில காட்சிகளின் மூலமாக தூண்டப்பட்டு சிறு வயதிலேயே சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.
பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டால், பதின் பருவத்தினர் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது குறையும். பாலியல் உறவில் ஈடுபடும் குறைந்த அளவிலான பதின்பருவத்தினரும் போதுமான அறிவுடன் அதில் ஈடுபடுவார்கள். எனவே பாலியல் கல்வி ஒன்றுதான் இது போன்ற இளவயது கர்ப்பங்களை குறைக்கும். ஆனால் பாலியல் கல்வி முழுமையான கல்வியாக இருக்க வேண்டும்.
எங்களை பொறுத்தவரை 'பாலியல் கல்வி' என்பதே அவசியமற்றது என நினைக்கிறோம். அதுதான் எதிர்ப்புக்கு வித்திடுகிறது. இதை வேறு பெயரில் அறிமுகப்படுத்தினால் எதிர்ப்பும் இருக்காது," என்கின்றனர் மருத்துவர்கள்.
பெற்றோர் அலட்சியமும் ஒரு காரணம்
பெற்றோர்களின் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணம். மனிதனாய் பிறந்த யாருக்கும், இயற் கையின் உந்துதலில் ஒரு கட்டத்தில் உடல்ரீதியான ஈர்ப்பு உருவாகும். அதை மாற்ற முடியாது. அப்போது அவர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஆனால் பெற்றோர்கள் ஒன்று இதை கண்டுகொள்வதே இல்லை அல்லது பாலியல் விஷயங்கள் தொடர்பாக எதிர் மறையாக பேசுகின்றனர். இதில் எதுவாகினும் பெற்றோர்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கான வழிகளை குழந்தைகள் தேடத் தொடங்கிவிடுகின்றனர்.
இள வயது கர்ப்பம் என்பது அந்த சிறுமி அல்லது மாணவியின் உடல்நிலையையும் பெருமளவில் பாதிக்கும். "இளம் பருவத்தில் கர்ப்பம் அடைவதற்கு உடல் பக்குவமாக இருக்காது. வயது முதிர்ந்தவர்களே பிரசவத்தின் போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலையில், மாணவிகளும், சிறுமிகளும் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். குழந்தை பிறக்கும்போது இதனாலேயே பல சிக்கல்களும் ரத்தப்போக்கும் ஏற்படும். சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
இது மட்டுமில்லாமல் இளம் வயது கர்ப்பம் அதிகப் பதற்றம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச் னைகளையும் உருவாக்கும். புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்ப்புகளும் அதிகம்," என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
பதின்பருவ உடலுறவு என்பது நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இவற்றை பதின் பருவத்தினர் உணர்ந்து கொள்ளச் செய்திடல் வேண்டும்!
'புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’ என்று அஸ்தினாபுரத்து இளவரசன் துச்சாதனன், சான்றோர் நிறைந்த சபையில் கூறினான். அதேபோலத்தான் இருக்கிறது... 'நிலங்களைத்தானே எடுக்கிறோம். உங்கள் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இருக்காது விவசாயிகளே’ என்று இப்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு சொல்வதும்.
100 ஆண்டு காலத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு, வெள்ளைக்கார காலத்து அடிமை சட்டத்துக்குப் பதிலாக, கடந்த கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு புதிய சட்டம் பிறந்தது. அது, 100 சதவிகிதம் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் சட்டம் இல்லைதான். 'வெள்ளைக்காரனின் கொடுங்கோல் சட்டத்துக்கு, ஏதோ பரவாயில்லை’ என்றே ஏற்றுக் கொண்டனர் விவசாயிகள். ஆனால், 'சுத்தம் சுயம்பிரகாசம் நாங்கள், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் மட்டுமே கொண்டு சொல்வோம், வெள்ளைக்காரர்களை விரட்டியது போதாது... கொள்ளைக்காரர்களையும் நாட்டைவிட்டு விரட்டுவோம், விவசாயிகளுக்கு எங்களைவிட்டால் வேறு தோழர்களே கிடையாது’ என்றெல்லாம் பசப்பு மொழிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, வெள்ளைக்காரன் போட்ட சட்டத்தைவிட, மிகக்கொடுமையான ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து விவசாயிகளை ஒரேயடியாக கொல்லத் துடித்தால் எப்படி?
அடிமை இந்தியாவில், 1894-ம் ஆண்டில் 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்’ கொண்டு வந்தது, பிரிட்டிஷ் அரசு. வெள்ளைக்காரனுக்கு பிறந்ததால், அந்தச் சட்டத்துக்கு 1000 பற்கள். யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிட முடியாது. கடித்துக் குதறிவிடும். தனக்கோ, தன் ஆதரவு பெற்ற தொழில் அதிபர்களுக்கோ, நிலம் வேண்டும் என்றால், எந்தக் கேள்வியும் இல்லாமல் அரசாங்கத்தால் நிலத்தை பறித்துக்கொள்ள முடியும். ஏழை நில உரிமையாளர்களால் தடுக்க முடியாது. அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை போதவில்லை என்றால், நீதிமன்றத்தை மட்டுமே நாட முடியும். அங்கேயும் இழப்பீடு மட்டுமே கூட்டிக் கேட்க முடியும். நிலம் பறிபோவதை ஒருபோதும் தடுக்க முடியாது. யார் நிலமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட நிலமாக இருந்தாலும் சரி அரசு நினைத்தால்... அதிகாரிகள் புகுந்து விளையாடலாம்; வீட்டை இடிக்கலாம்; மரங்களைப் பிடுங்கி எறியலாம்; கரும்பு, நெல், பருத்தி வயல்களை அழிக்கலாம்; தடுத்தால், காவல் துறையை ஏவிவிட்டு மண்டையப் பிளக்கலாம்; கைது செய்து சிறையில் அடைக்கலாம்; அடிமை இந்திய சட்டத்துக்கு அவ்வளவு பலம்!
சுதந்திர நாட்டின் அடிமைகள்!
'ஆடுவோமே... பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே...’ என்று ஆட்டம் போட்டபோதும் கூட இந்தக் கொடுங்கோல் சட்டமே தொடர்ந்தது. ஆம், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாய சட்டமே அரக்கத்தனமாக சிரித்தது. இதில் சிக்கி சின்னாபின்னமான விவசாய ஜீவன்களும் பரலோகம் போய்விட்டன. இப்போது உயிர் உதாரணம்.... மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூரில் டாட்டா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலைக்காக, ஆயிரக்கணக்கான ஏக்கர் செழிப்பான நிலங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டன. எதிர்த்து நின்ற விவசாயிகளை, நாய்களைச் சுடுவதுபோல சுட்டுத்தள்ளியது, அன்றைக்கு அங்கே ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கம்.
தமிழகத்திலேயே மேற்குப் பகுதியில் இருக்கும் சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 'கெயில் இந்தியா நிறுவனம்’ எரிவாயு குழாய் பதித்ததைச் சொல்லலாம். விவசாயிகளிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், இஷ்டம்போல புகுந்து, பொக்லைன் இயந்திரங்களை வைத்து பயிர்களையும் மரங்களையும் அழித்து, வெறியாட்டம் போட்டனர். போலீஸை வைத்துக்கொண்டு விவசாயிகளை மிரட்டினர். இன்றைக்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதோ, டெல்டா பகுதியில் 'மீத்தேன்’ எடுக்கப்போகிறோம் என்றபடி செழிப்பான காவிரித்தாயின் மடியை குதறிப்போடுவதற்காக உறுமிக்கொண்டே இருக்கிறது இன்னொரு பூதம்!
ராஜ்நாத் சிங் ஆதரவு!
சுதந்திர இந்தியாவிலும் இத்தகைய கொடுமைகள் தொடர்கதையா? என்று விவசாயிகளின் இதயங்களில் கனன்றுகொண்டிருந்த அக்னி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டில் விஸ்வரூபம் எடுத்தது. விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படை எடுத்தனர். மௌனகுரு மன்மோகன் சிங் ஆடிப்போனார். ஆட்சியாளர்களை நகரவிடாமல், நங்கூரம் போட்டதுபோல, டெல்லி, ஜந்தர் மந்தரில் முற்றுகையிட்டனர் விவசாயிகள். நாள்தோறும் டெல்லி சுற்றுவட்டாரப் பிரதேசங்களான, உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாபில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், டிராக்டரில் வருவதும், போவதுமாக தொடர் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திலிருந்தும் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமையில் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
போராட்டம் சூடு பிடிக்கவே, அரசியல் கட்சிகள் அதிர்ந்துபோயின. 'விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லை என்றால், வாக்குக் கேட்டு... கிராமங்களுக்குள் நுழைய முடியாது’ என்று பயந்த அரசியல் கட்சிகள், ஓடோடி வந்து ஆதரவு கரம் நீட்டின. இதோ, இன்றைக்கு அவசர அவசரமாக சட்டம் போட்டு, விவசாயிகளை கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பத் துடிக்கும் பி.ஜே.பியிலிருந்து ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். ஆம், உள்துறை அமைச்சராக உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே.... அதே புண்ணியவான்தான். மேடையேறி ஒரு மணிநேரம் முழங்கினார் விவசாயிகளுக்கு ஆதரவாக!
பிறந்தது புதிய சட்டம்!
போராட்டம் நான்காவது நாளில் அடி எடுத்து வைத்தபோது, அன்றைய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தலைமையில் 6 அமைச்சர்கள் போராட்ட களத்துக்கே ஓடோடி வந்தனர். வேண்டா வெறுப்பாக. மூன்று மணிநேரம் பேச்சு வார்த்தை நடந்தது. பிறகு, விவசாயிகளை இணைத்து கமிட்டிகள் அமைத்தனர். விவசாயிகளின் ஆலோசனையோடும் பி.ஜே.பியின் ஒப்புதலோடும் வந்ததுதான் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013. இதற்கான விவசாயிகளின் குழுவில் நானும் ஒருவனாக இடம்பிடித்தேன்.
நிலம் கையகப்படுத்துதல், மறுகுடி அமர்வு, மறுவாழ்வுச் சட்டம்-2013 (Land Aquisition Rehabilitation and Resettlement act 2013) என்று புதுச் சட்டத்துக்குப் பெயர் சூட்டினர். இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு முழு திருப்தி இல்லை. அதேசமயம், 'இதுகாலம் வரை எதுவும் இல்லை என்ற நிலை நீடித்தது. இதுவாவது கிடைக்கிறது. இப்போதைக்கு ஏற்றுக்கொள்வோம். பிறகு போராடுவோம்’ என்று அரை மனதுடன் ஏற்றுக்கொண்டோம். நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பீடு சதுர அடியில் கணக்கிடப்படுகிறது. கிராமப்புறங்களிலோ ஏக்கர் கணக்கில் இருக்கிறது. இதனால் கிராமப்புற விவசாயிகளுக்குத்தான் பாதிப்பு அதிகம். இதனால், குறைந்தது அரசு மதிப்பீட்டுக்கு மேல் 10 மடங்காவது இருந்திருக்க வேண்டும் இழப்பீடு. புதிய சட்டம் இதைச் செய்யவில்லை.
'ஆடிட்டர் ஜெனரல், அரசு கணக்குகளைத் தணிக்கை செய்வதுபோல், தனிச் சுதந்திரம் பெற்ற அதிகாரி, கையகப்படுத்தப்படும் நிலங்களைக் கண்காணித்து கணக்குப் பார்க்க வேண்டும். பெரும்முதலாளிகள் தொழில் போர்வை போர்த்திக்கொண்டு, அடிமாட்டு விலையில் விவசாயிகள் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு, பிறகு ரியல் எஸ்டேட்களாக மாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளும் நிலுவையிலேயே உள்ளன.
குறைப்பிரசவம்... கொலை ஆயுதம்!
இப்படி குறைப்பிரசவமாக இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஏற்றுக்கொண்டோம். ஆனால், இந்த அரைகுறையிலும் ஆபரேஷன் என்கிற பெயரில், கொலை ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது மோடியின் அரசு. 70 சதவிகிதம் விவசாயிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்கிற ஷரத்தை நீக்கியதோடு, பாசன நிலங்களையும் கையகப்படுத்தலாம் என்று படுபாதகமாக சட்டத்திருத்தம் செய்திருக்கிறது. வெள்ளைக்காரன் சட்டம்கூட, ஆற்றுப்பாசனப் பகுதி, ஏரிப் பாசனப் பகுதி, வாய்க்கால் பாசனப் பகுதியை வேறு காரியங்களுக்குக் கையகப்படுத்த அனுமதித்தது இல்லை. ஆனால், மோடி அரசு, வெள்ளைக்கார அடிமை இந்திய சட்டத்தைவிட கொடூரமான சட்டத்தைப் போட்டு, 'பாதிப்பு இருக்காது’ என்று பசப்புகிறது. தேர்தல் நேரத்தில் மோடியே கொடுத்த பி.ஜே.பியின் வாக்குறுதிகளையும் குழி தோண்டி புதைக்கிறது இந்தப் புதியச் சட்டம்.
இப்படி ஒரு மாயத்திட்டத்தை கையில் வைத்துக்கொண்டுதான், 'மேக் இன் இண்டியா’ என்று கவர்ச்சி வலைவீசி, விவசாயிகளை ஒழிக்கத் துடிக்கிறார், 10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட் போடும் 'ஏழைப் பங்காளன்’ மோடி.
'விவசாய உற்பத்தி தேக்க நிலை அடைந்துவிட்டது... மேக் இன் இண்டியா கோஷத்துக்கு முன்பு குரோ இன் இண்டியா (Grow in India) கோஷத்தைதான் முன்னெடுக்க வேண்டும்’ என உணவுப் பொருளாதார நிபுணர் டாக்டர் தேவேந்திர சர்மா கூறுவதை மறுத்துவிட முடியாது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், 'மோடியின் இந்தப் பசப்பு வார்த்தைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது’ என்பதை உணர்ந்து, 'மேக் இன் இண்டியா, இருக்கட்டும். மேக் ஃபார் இண்டியா திட்டத்தை முன்னெடுங்கள்’ என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல கூறியிருக்கிறார்.
அளவுக்கு மிஞ்சினால், அன்னிய முதலீடும் ஆபத்தே!
மோடியின் தோழர்களாக இருக்கும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள்கூட இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கின்றன. தேர்தலில் தோள் கொடுத்த தோழர்களைவிட, கரன்ஸியை அள்ளிவிட்ட பகாசுர நிறுவனங்கள் உங்களுக்கு முக்கியமாகிவிட்டன அல்லவா மிஸ்டர் மோடி? ஆனால், சமீபத்திய டெல்லி தேர்தலில் விழுந்த மரண அடிக்குப் பிறகும் நீங்கள் பாடம் படிக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தால், உங்களைக் காப்பாற்ற எந்த ராமனாலும் முடியாது, மறந்துவிடாதீர்கள்!
தூரன் நம்பி
சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?
காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தின் முக்கியமான சில அம்சங்களும்... இதில் பி.ஜே.பி தற்போது செய்திருக்கும் தில்லுமுல்லு திருத்தங்களும் இதோ...! அடைப்புக்குறிக்குள் இருப்பவை இப்போது திருத்தப்பட்டவை.
1. அரசுப் பணிகளுக்காக என்றால்... அதாவது, ரயில், நெடுஞ்சாலை, மருத்துவமனை, ராணுவம் போன்ற காரியங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளின் ஒப்புதல் தேவை இல்லை.
(ஸ்மார்ட் சிட்டி மற்றும் வீட்டுவசதி திட்டத்துக்கும் ஒப்புதல் தேவையில்லை.)
2. தனியார் தொழில் என்றால் 80 சதவிகித விவசாயிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும். தனியார் அரசு கூட்டுத் தொழில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நகரங்கள் அமைப்பதென்றால் 70 சதவிகிதம் விவசாயிகளிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும்.
(எதற்கும் ஒப்புதல் பெறத் தேவையில்லை)
3. ஒட்டுமொத்தமாக நிலத்தை இழப்பதால் விவசாயிகள் மனது உடைந்துவிடக் கூடாது என்பதற்காக... இழப்பீடு, குடியிருப்பு, மாற்று வாழ்வாதார வசதிகள் செய்து தரவேண்டும். நிலத்தின் உரிமையாளருக்கு மட்டுமல்லாமல், அந்த நிலத்தை நம்பியே வாழும் கூலித் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு.
(உரிமையாளருக்கு மட்டுமே இழப்பீடு).
4. எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்தப் பணி, 5 வருடங்களில் தொடங்கப்பட வேண்டும். இல்லையெனில், நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பிக்கொடுத்துவிட வேண்டும்.
(திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை)
5. பாசன வசதி பெற்ற செழிப்பான நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது.
அடுத்தவர்கள் மீது பழிபோட ஜெயலலிதாவுக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும். மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஶ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் நேற்று மாலை ஶ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மு.க ஸ்டாலின், “ ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமில் லாமல், வாக்களிக்க தவறியவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். வாக்களிக்காதவர்கள் நிச்சயமாக வரும் காலகட்டத்தில் வாக்களிப்பார்கள் என்ற உணர்வோடு அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கடந்த தேர்தலை விட 600 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதிலிருந்து தமிழக மக்களிடம் மாற்றம் துவங்கியிருப்பது தெரிகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ இடைத்தேர்லில் வெற்றி பெற்றுவிட்டதாக கொக்கரிக்கும் அதிமுக, திமுக ஆட்சியில் நடைபெற்ற 5 இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பட்டுவாடா செய்யப்பட்டது. இதுதான் அதிமுக வெற்றிக்கு காரணம்.
ஜெயலலிதாவுக்கு சதி என்கிற வார்த்தை ரொம்ப பிடிக்கும் கடந்த இடைத்தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா ஶ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு சதி என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் கூட்டாக சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 66 கோடி சொத்து குவித்தது சதி. அதற்கு பெங்களூரு தனி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு விதி. ஜெயலலிதாவுக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் பற்றி ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் எனது பெருமைகளை பயன்படுத்தி, என்னை அவமானப்படுத்தி எம்ஜிஆர் சதி செய்கிறார் என அதில் குறிப்பிட்டார்.
அதேபோல் ஜானகி அம்மையார், நரசிம்மராவ் உள்ளிட்டோர் தனக்கு எதிராக சதி செய்வதாக கூறினார். மின்வாரியத்தில் திமுகவுக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் சதி செய்வதால்தான் சீரான மின்சாரம் வழங்க முடியவில்லை என்றார். இப்படி அடுத்தடுத்து அடுத்தவர்கள் மீது பழிபோட ஜெயலலிதாவுக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும்.
சட்டமன்றத்தில் தேமுதிகவை குடிமகன் என்று குறிப்பிட்டு அதிமுகவினர் பேசியதை அவைக் குறிப்பி லிருந்து நீக்க சபாநாயகர் மறுத்தார். ஆனால், தேமுதிக துணைத்தலைவர் மோகன்ராஜ் “குற்றவாளி முன் னாள் முதல்வர் ஜெயலலிதா” என்று பேசியதற்காக ஒட்டுமொத்தமாக தேமுதிக எம்எல்ஏக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இது தவறு என நான் வாதிட்டேன். மறுநாள் பத்திரிக்கையில் ஸ்டாலின் கேட்டதால் தேமுதிக எம்எல்ஏ சஸ்பெண்ட் ரத்து என செய்தி வெளிவந்ததை பார்த்து போயஸ்கார்டனில் ஜெயலலிதா கொதித்துவிட்டார். பிறகு மீண்டும் அனைவரும் சஸ்பெண்ட் என்று கூறினர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டபோது, நாங்கள் சஸ்பெண்ட் ரத்து என கூறவில்லையே என்றனர்.
ஒரு எம்எல்ஏ, குற்றவாளி என கூறியதால், ஒட்டுமொத்தமாக அந்த கட்சி எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம்? அப்படி பார்த்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற தால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக கெஜட்டில் அறிவித்து சபாநாயகர் தனபால், செயலாளர் கமாலுதீன் கையெழுத்திட்டுள்ளனர். அதற்காக சபாநாயகரை நீக்குவார்களா?
முதல்வர் ஓபிஎஸ், அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறு கிறார். அப்படி கூறுவதற்கு தகுதி இருக்கிறதா அவருக்கு. அதிமுக ஆட்சி வந்தால் உதவிக் குழுக்களுக்கு ரூ.10லட்சம் கடன் அளித்து, 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என உறுதிமொழி கொடுத்தார். அவர் கூறியபடி எந்த ஒரு மகளிர் குழுவுக்காவது கடன் வழங்கப்பட்டுள்ளதா.
கடந்த காலங்களில் ஜெயலலிதா 3 வருட ஆட்சியில் 110 விதியின் கீழ் ஏராளமான திட்டங்களை சட்டமன் றத்தில் அறிவித்தார். அந்த விதியின் கீழ் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான எந்த ஒரு முயற்சியும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. திருச்சியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிங்கப்பூர் போன்று தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றார். நடக்கவில்லை. திருச்சியில் மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 1,27,500.98 கோடி அளவிற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்த திட்டத்தை நிறைவேற்றினர். எதுவும் நடக்கவில்லை. நான் ஆதாரத் தோடுதான் பேசுகிறேன். தைரியமிருந்தால் இந்த மேடைக்கு பக்கத்தில் ஒரு மேடை போட்டு விவாதிக்க தயாரா?" என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “ தாது மணல் கொள்ளை குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டார். அந்த அதிகாரி நேர்மையானவர். அவர் விசாரணை அறிக்கையை ஜெயலலிதாவிடம் அளித்தார். அது மூடி மறைக்கப்பட்டது. ஓபிஎஸ் சட்டம், ஒழுங்கு பிரச்னையில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்கிறார். நாள் தோறும் கொலை கொள்ளை நடந்தால் அமைதி பூங்காவா ? என்றார்.
வூதியில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர் அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி) சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம்
1.ஆன்லைன் மூலம் முறை இடலாம்
2.தொழிலாளர் அமைச்சகம்(ministroy of labor)தொலைபேசி எண்மூலம் முறைஇடலாம்
3.இந்திய தூதரகத்தில் (embassy of india)முறை இடலாம்
4.இந்திய இனை தூதரகத்தில் (consulate of general of india)முறை இடலாம்
5.தொழிலாளர் நீதிமன்றம்(labor court)அனுகவும்
6.தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு இம் முறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்
1.ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தல ministry of் labor வெப்சைட்டிற்க்கு சென்று ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகளை முறை இடலாம் அவ்வாறு முறைஇடும்போது தங்களது பெயர்/முகவரி/இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆன்லைன் புகார் தெறிவிக்க http//portal.mot.gov.sa/en/pages/ complaints.aspx
2.தொழில் அமைச்சகம்(ministry of laber) தொலைபேசி மூலமும் 1.riyadh:01-4039857/kharj:01-4548231 duwadmi:01-6420920 majmaa:06-4321724 wadi addawasir:01-7840264 zulfi:06-4220235 sahqra:01-6221342 makkah:02-5420745 jeddah:02-6311687 taif:01-7461616 qun fudah:07-7320761 madinah:04-8654416 yanbu:04-3222688 al ula:04-8840380 onaizah:06-3640285 qassim(buraidah):06-3250387 al rass:04-3333502 hail:06-5321139 dammam:03-8261419 ahsa:03-5822801 hafralbatin:03-7220220 knobar:03-8641541 abqaqiq:03-5661324 jubail:03-3620150 khafji:03-7660380 ras tannurah:03-6670424 aseer(abha):07-2224128 bisha:07-6226718 baha:07-7253240 najran:07-5224995 jazan:07-3213671 jauf:04-6421108 qurrayat:04-6421108 tabuk:04-4221181 al wahj:04-4421970 arar:04-6627128 turaif:04-6521029
3.இந்திய தூதரகத்தில் மறைஇடலாம் தொழிலாளர்கள் தங்களது பிரட்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து வேலை நாட்களிலும் 9:00am லிருந்து12:30pm வரை கிழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும் labor-complain form http//www.scribd.com/mobile/ doc/227679439?width=320
4.இந்திய இனை தூதரகத்தில் முறை இடலாம் தொழிலாளர்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை தீர்வுகாண எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை அனுகவும் labor complaint-consulte http//www.scribd.com/mobile/doc/227681763?width=320
5.தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அனுகலாம் laber court கீழே உள்ள தொலைபேசி எண்னுக்கு தொடர்புகொண்டு தீர்வுகாணலாம் makkah:02-5420745 jeddah:02-6311687 taif:02-7495200 qunfudah:07-7321250 madina:04:8654417 yanbu:04-3222488 alula:04-8840830 abha:07:2242128 bishan:07-6226718 al bahan:07-7253240 najrah:07:5221431 jazan:07-3226446 tabuk:04-4421181 al wahj:04-4421970
அனைத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மேற்க்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும் நீங்கள் செல்லும் போது சரியான ஆவணங்களை அதாவது வேலை ஒப்பந்த நகல் பாஸ்போர்ட் நகல் இக்காமா நகல் கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேழும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் அரபியில் இருக்க வேண்டும்
6.தொழிலாளர் நலன் மற்றும் வழி நடத்தும் குழு தொழிலாளர்கள் நலன் காக்கவே புதிதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறை இடலாம் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைக்களும் சட்ட ரீதியாக தீர்வுகாண உதவிடுவர்
முகவரி:- office of the domestic workers committee the director of welfer&guidance consultant of training&social reserch near al harama(formerly sofitel) hotel jeddah tel:6616688 fax:6653238 cell:0504658803
ஒரு வழியாக சாதனை முடிவுக்கு வந்தது. 20 வருடங்கள் ஓடிய ’தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ இந்தித் திரைப்படம் 20-ம் தேதி காலை காட்சியுடன் தனது சாதனையை முடித்துக்கொண்டது. மொத்தம் 1,009 வாரங்கள். ரொமான்டிக் ஜோடிகளான ஷாரூக்கானும் கஜோலும் இணைந்து நடித்த இந்த மெகாஹிட் திரைப்படம் இந்தி சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டர். 20 வருடங்களாக ‘மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை 1,009 வாரங்கள் கழித்து படத்தை எடுத்துவிடுவதாக அறிவித்துவிட்டார்கள். சமீபத்தில் 1,000 வாரங்களைத் தாண்டி ஓடிய படம் என்ற மிகப்பெரிய சாதனையைப் படைத்ததற்காக விருந்து ஒன்றை வைத்திருந்தார் ஷாரூக்கான். இந்த நிலையில் திடீரென்று படத்தை தூக்கப்போவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவிக்க, அதிர்ச்சியான ஷாரூக் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்த்தனர். ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களிலும் படத்தை சிலாகித்தும், படம் பார்த்த அனுபவங்களையும் பலர் பகிர கடந்த வாரம் முழுவதும் வைரலில் இருந்தது ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ ம்ம்ம்... தமிழ் சினிமாவில் இப்போ 3 நாட்கள் ஓடினாலே வெற்றி விழாவாம்!
உலகக்கோப்பை கிரிக்கெட்தான் இந்த வார டாப் வைரல். ‘நாங்க திரும்பத் தர மாட்டோம்’ என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் வைரலில் இருக்க, நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்குல்லம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய போட்டியில் சவுத்தீயின் அபார பந்துவீச்சில் 33 ஓவரில் 123 ரன்களுக்கு இங்கிலாந்து சுருள, பின்னர் பேட் பிடித்த நியூசிலாந்து 12.2 ஓவரில் 123 ரன்களைக் கடந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லம் 25 பந்தில் 8 பவுண்டரி 7 சிக்ஸர் என 77 ரன்கள் விளாசினார். மொத்தப் போட்டியும் 45 ஓவரிலேயே முடிந்தது. மிக மிக மோசமான தோல்வியைப் பெற்ற இங்கிலாந்தை வறுத்து தள்ளினர் நெட்டிசன்ஸ். மெக்குல்லம் தாண்டவத்தை ஆ... ஆசம் என புகழ்ந்து தள்ளினர். இங்கிலாந்துக்கே இந்த நிலைமைனா இந்தியா என்னாகுமோ?
ஃபேஷன் டிசைனர், பாடகி, நடிகை என பன்முகத் திறமைகொண்ட பாப் பாடகி ரிஹான்னாவின் பிறந்தநாள் உலக அளவில் வைரலானது. செக்ஸியான குரலில் வளைந்து நெளிந்து குழைந்து இவர் பாடும் ஆல்பங்கள் எல்லாம் இளைஞர்கள் மத்தியில் ‘ஏ’ ஹிட். வெள்ளை தேகம், ஹிட்ஹாட் ரசிகைகள் என ஜஸ்டின் பெய்பர் ஏ கிளாஸ் ஹிட் என்றால், கருப்பு நிறம், அதிக டவுன்லோடு என ரிஹான்னா தரை டிக்கெட் ஹிட். கடந்த வாரம் 27-வது பிறந்தநாளை ஆஃப்லைனில் அமைதியாக ரிஹான்னா கொண்டாட, ஆன்லைனில் நெட் ஹிட் அடித்து தாரை தப்பட்டை கிழிய வைரலாக்கினார்கள் ரிஹான்னா ரசிகக் கண்மணிகள். தல-தளபதி ரசிகர்கள் கவனத்துக்கு!
சுடர்க்கொடி என்ற தமிழ்ப் பெண்மணி ஒருவர் #தமிழ் வாழ்க என்ற ஹாஷ்டேக்கை முன்னிலைப் படுத்தி ட்வீட் தட்ட, ஐ ‘தமிழ்’ ஐ யம் ப்ரவுட் டு பீ ‘தமிழன்’ என்ற ரீதியில் ஆங்கிலமும், தமிழும் கலந்து பலர் தமிழ் வாழ்க ஸ்டேட்டஸ் போட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங் கொண்டு வந்தனர். அதிரடியாக இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்தது #தமிழ்வாழ்க ஹாஷ்டேக். தி.மு.க தலைவர் கருணாநிதி தன் பாணியில் ‘உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பது தான் இந்த மண்ணுக்கே சொந்தமான பண்பாடு #தமிழ்வாழ்க’ என ட்ரெண்ட் பிடித்து ஸ்டேட்டஸ் அடிக்க தமிழ் வாழ்க எகிடுதகிடு ஹிட்டானது!
கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்....? அதை எப்படி கண்டு பிடிப்பது.....?
இதோ பட்டியல் பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும். சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும். ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும்.
இந்த ஏலக்காயில் மணமிருக்காது. மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும். மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிற முண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும். கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும் கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும் சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.
நெய்யில் மசித்த உருளக்கிழங்கு, வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.
வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும். ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும் பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும் பாலில்,நெய்யில் மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும்.
பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியா கலந்திருப்பதை உறுதி செய்யலாம். பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும் கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது உடனடி வழிந்து விடும்.
டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள். தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம் சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும். குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும்.
கலப்பட நார் எளிதில் முறிந்து விடும். ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும். நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை. தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும் "கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும். இலவங்கப்பட்டையுடன் (தால்சினி) தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும். சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.
தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும் கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய் கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ் நிறமுண்டாகும் . ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம். முட்டை யில் டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.
மாத்திரைகள் மருந்து பொருட்களில் போலி மருந்துகள் நிறைய புழக்கத்தில் உள்ளது நீங்கள் வாங்கும் மருத்தினைhttp://verifymymedicine.com/ என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா ,காலாவதியானதா என சோதிக்கலாம் விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் படைத்தாலும் படைத்தார் தற்போது அவர் மீதுள்ள எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது... 40 ஆண்டு கால உலகக் கோப்பை வராலற்றில் விழுந்த முதல் இரட்டை சதம் இது.
இரட்டை சதம் அடிப்பதற்கு முன்பே கிறிஸ் கெயில் மிகச்சிறந்த வீரர்தான். அவரது அதிரடியில் மயங்காதவர்கள் இல்லை.பொதுவாக இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அவ்வளவாக 'சான்ஸ்' இல்லை என்றே இப்போதும் நம்பப்படுகிறது. ஆனால் கெயிலுக்கென்று உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக கெயில் ஆடிய 19 ஆட்டங்களில் அவர் பெரியதாக ஒன்றும் ஜொலித்துவிடவில்லை. இதனால் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு கெயில் மீதும் எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இருந்தது. முதல் ஆட்டத்திலேயே அயர்லாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை விரட்டியடிக்க, இந்த உலகக் கோப்பையில் அந்த அணி வழக்கம் போலத்தான் என்ற கருத்தே ஏற்பட்டது.
ஆனால் அதற்கு பின் பாகிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி. தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பிரமாண்ட வெற்றி. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெயில் நடத்திய வானவேடிக்கையும் கூடவே அரங்கேறியது. ஆக இப்போதுதான் கெயில் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள மிகமுக்கிய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, தென்ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கெயில் சிறப்பாக ஆடி அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்பதே மேற்கிந்திய தீவுகள் அணி ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்புதான் இப்போது கெயிலுக்கு மிகப் பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். உண்மையில் இரட்டை சதமடிப்பதற்கு முன் இருந்த அழுத்தத்தை விட, 100 மடங்கு அழுத்தத்தில் இருக்கிராறாம் கெயில். தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொசுக்கென்று 'அவுட்'டாகி விட்டால் தனது' இமேஜ்' சுத்தமாக 'டேமேஜ்' ஆகிவிடும் என்பதை அவர் உணர்ந்துள்ளதாக சக வீரர்கள் கூறுகின்றனர்.
எனவே தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எண்ணத்தில் உள்ளாராம் கெயில். சட்டென்று கெயில் வீழ்ந்து விட்டால் மேற்கிந்திய தீவுகள் அணியும் பட்டென்று கடையை மூடி விடும் அபாயமும் இருக்கிறது.
அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மோகன் பகவத்தின் இந்த குற்றச்சாட்டு ஏற்புடையதா? இதுகுறித்த உங்களது கருத்தை முன்வைத்து விவாதிக்கலாம் என்று விவாதக்களம் பகுதியில் நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.
வந்து குவிந்த வாசகர்களின் காரசாரமான கருத்துகளில் இருந்து...
KUMAR: அன்னை தெரசா சார்ந்த இயக்கத்தின் நோக்கம் மத மாற்றம் மட்டுமே. என் மதத்துக்கு வா நன்மை செய்கிறேன் என்பது வியாபாரம். அதேபோல சில நன்மைகள் செய்துவிட்டு மத மாற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதும் வியாபாரமே! ஆனால் தொழுநோய் தழுவிய நோயாளிகளுக்கு அன்னை தெரசா செய்தது தாய்மை தொண்டு மட்டுமே. தாய்மை ஒருபோதும் வியாபாரம் ஆகாது. அதேபோல அன்னையின் சேவை ஒருபோதும் மதத்துடன் தொடர்பு உடையது அல்ல. இவர் சொல்வது 100% தவறு.
CHANDRA: டூ வீலர் வாகனம் போவதற்கே கஷ்டமான மலை கிராமங்கள். அங்குள்ள மக்கள் மருத்துவ வசதி வேண்டுமென்றால் நோயாளியை தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு பல மணி நேரம் நடந்து வந்துதான் மருத்துவ வசதி பெற முடியும். விஷ பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழியிலேயே மரணமடைந்ததும் நடப்பதுண்டு. அந்த கிராமங்களுக்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம் வருகிறது அங்கு சேவை செய்யும் கன்னிகாஸ்திரீகள், கிறிஸ்துவ மத்தத்தை சேர்ந்தவர்களுக்காக ஒரு சர்ச்சும் கட்டப்படுகிறது.
அந்த கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளில் வழிபடுவதை வேடிக்கையாக பார்க்கும் கிராம மக்கள் நாளடைவில் அவர்களின் சேவையால் கவரப்பட்டு தானாக மதம் மாறுகிறார்கள். கிறிஸ்தவ மிசனரிகள் ஆயிரக்கணக்கில் நீண்ட காலமாக செயல்படுகிறது. அவர்கள் கட்டடம் கட்டவும், உணவு மற்ற செலவுகளுக்காக வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பணம் பெறுவது உண்மைதான். மலை கிராம மக்கள் இப்படித்தான் மதம் மாறினார்கள். சமவெளி மக்கள் தீண்டாமை கொடுமையால் மதம் மாறுகிறார்கள். பணம் பதவிக்காக மதம் மாறுபவர்கள் மிகவும் குறைவு. ஆர்.எஸ்.எஸ் புளுகுவதை நிறுத்திவிட்டு இதுபோல சேவையில் ஈடுபடலாம்.
KIM: இவர்கள் தொண்டு செய்ய மாட்டார்கள் என்று எவரைச் சொல்கிறீர்கள்? ஆர்.எஸ்.எஸ், ராமகிருஷ்ண மடம், சங்கர மடம், அன்னை சாரதா மடம் இன்னும் கணக்கிலடங்கா ஹிந்து அமைப்புக்கள் செய்யும் சுயநலமற்ற தொண்டுகள் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் யார் என்ன செய்ய முடியும்? எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், மருத்துவ முகாம்கள் தன்னலமற்ற ஹிந்து இயக்கங்களால் நடத்தப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அல்லது தெரிந்தும் தெரியாதவர் போல் நடிக்கலாம்.
ARUN: அவரின் முக்கிய கொள்கை மத மாற்றம்தான் எனபதை ஓட்டு வங்கி அரசியலுக்காக வெளியில் சொல்லாமல் அமுக்கி வைத்து விட்டது காங்கிரஸ் அரசு ஆனால் உண்மை என்னும் பூனை குட்டி இப்போதுதான் வெளியில் வருகிறது. தெரசாவைவிட பலர் நம் நாட்டில் பல்வேறு சேவைகளை தெரசாவிற்கு முன்பும், பின்பும் செய்துகொண்டிருக்கின்றனர் விளம்பரம் இல்லாமல். ஆனால் மதம் மாற்றுவதை ஊக்குவிக்கவே இவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். போலி மதச்சார்பற்ற கட்சிகளும் இவரை தூக்கிவைத்து கொண்டாடின.
INDIAN : கிறித்துவர்கள் சேவை செய்கிறேன் என்று சொன்னாலே அதன் முக்கிய நோக்கம் மதமாற்றம் மட்டும்தான் அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு பணம்தான். பின்னர் ஏன் தமிழக பாதிரியார் அலெக்ஸ் முஸ்லீம் நாடான ஆப்கன் சென்று சேவை செய்கிறேன் என்று சொல்லி அங்குள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்? அவர் வேறு ஏதாவது கிறிஸ்தவ நாட்டிற்கு சென்று சேவை செய்து இருக்க கூடாதா?
KALAYAN: வெள்ளையர்கள் வரும்முன்பு இந்திய ஏழை நாடாக இருந்திருந்தால் இங்கு வியாபாரம் செய்ய வந்திருப்பானா? போரிட்டு காலனி ஆட்சியை அமைத்திருப்பானா? ஆக மொத்தம் ஏழையாக்கியதும் அவன்தான். அதனை பயன்படுத்தி மதமாற்றம் செய்பவனும் அவனே. NANBAN: மதர் தெரசாவின் மனித நேய சேவையால் வாழ்வு பெற்றவர்கள், ஆதரவு பெற்றவர்கள், அப்படி மதம் மாறி இருந்தால் ஆர்.எஸ். எஸுக்கு ஏன் வலிக்கிறது? இவர்கள், தொழுநோயாளிகளுக்கு, ஏழைகளுக்கு எதையும் செய்யவும் மாட்டார்கள், அடுத்தவர்கள் செய்தால் பொறாமையால் குறை சொல்வதே வேலை.
MANNAN0: சேவை மனப்பான்மைதான் நோக்கம் என்றால், மத மாற்ற தடை சட்டத்தை ஏன் எதிர்கிறார்கள் ?
DSAD: என்னமோ ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளால் இல்லாத வறுமை, நோய் இந்தியால இருக்கற மாதிரியும் அவங்களை காப்பாத்தறதுக்கு வந்த மாதிரியும்ல பேசறாங்க. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கால ஏற்கனவே மதம் மாற்றி முடிச்சுட்டாங்க. மிச்சம் இருக்கறது இந்தியா இங்க இருக்கிற ஏழ்மையை பயன்படுத்தி ஒரு கைல மருந்து இன்னொரு கைல பைபிள்.
STEPHEN: இங்க இருக்கிற ஏழ்மையை பயன்படுத்தி ஒரு கைல மருந்து இன்னொரு கைல கீதை குடுங்களேன் .
BALAJI: ஆப்ரிக்காவின் புகழ்பெற்ற ஒரு சொலவாடை... ”அவர்கள் அன்புடன் எங்கள் நிலத்திற்க்கு வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது... இப்போது எங்கள் கைகளில் பைபிள் அவர்களிடம் எங்கள் நிலம்.
VAIKUNDAMURTHY: தெரசாவின் சேவையை போற்றுபவர்கள். இஸ்லாமிய நாடுகளில் மிஷனரிகளை அனுமதிக்க சொல்லி கோரிக்கை வைக்கலாமே. ஏன் அங்கே ஏழைகள் இல்லையா?
HAJA MOIDEEN: தொழுநோய் தழுவிய நோயாளிகளுக்கு அன்னை தெரசா செய்தது தாய்மை தொண்டு மட்டுமே. தாய்மை ஒரு போதும் வியாபாரம் ஆகாது. அதேபோல அன்னையின் சேவை ஒரு போதும் மதத்துடன் தொடர்பு உடையது அல்ல.
IRUNGOVEL A P: மொரார்ஜி தேசாய் பாரத பிரதமராக இருந்தபோது, “மத மாற்ற தடைச் சட்டம்” கொண்டு வர ஆலோசனை செய்தார். உடனே இந்த பெண்மணி அவரை சந்தித்து கேட்ட கேள்வி என்ன? என்பதை அன்றைய ஊடகங்களை புரட்டிப்ப்பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். “அப்படியானால் எனக்கு இந்தியாவில் என்ன வேலை?”- இதுதான் இந்த பெண்மணியின் கேள்வி. மோகன் பாகவத் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.
JAMAL: அவர் செய்த சேவைகளைப் பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். இவ்வளவு காலம் அந்த பயனாளிகளெல்லாம் (நோயாளிகளெல்லாம்) எக்கேடு கெட்டும் போகட்டும் என்று இருந்து விட்டு, இப்பொழுது, திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் இப்படி பேசுவதற்கு காரணம் என்ன? அவ்வளவும் அரசியல். பதவி, அதிகாரம் படுத்தும்பாடு.
MADURAI BALA: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறி இருப்பது உண்மை என்பதை தெரசா அவர்கள் இருந்தால் அவர் கூட ஒப்புக்கொள்ளவே செய்வார். அவர் சேவை செய்தார் என்பதை எவரும் மறுக்கவில்லை. மத மாற்றமும் ஊக்குவிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.
CHANDRA :அன்னை தெரசா பற்றி பேச உங்களுக்குத் தகுதி உள்ளதா? நீங்கள் தொழுநோய் உள்ளவர்களை எல்லாம் தொடவேண்டாம், தொண்டு செய்ய வேண்டாம் .நாங்கள் கட்டி ,நாங்கள் வடித்த சிலையை நாங்கள் தொட்டால் தீட்டு என்றும், எங்கள் உலகின் உன்னத மொழியாம் தமிழை நீச மொழி என்று கூறுவதை நிறுத்துங்கள். முன்னாள் முதல்வர் .கலைஞர் அவர்கள் கொண்டுவந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கினீர்கள் அல்லவா? அதை திரும்பப் பெறுங்கள். அவர்கள் திருச்சபை மூலம் கல்வி தந்தார்கள். எத்தனை, எத்தனையோ மக்கள் கல்வி பெற்றார்கள். ஆங்கிலேயரால். நீங்கள் என்ன செய்தீர்கள்? சமீப காலத்தில் சின்மயா போன்ற கல்விக்கூடங்கள் திறந்து எங்கள் தமிழனை, தமிழ் உங்கள் தாய் மொழி. அதனால் தன்னாலேயே வரும். நீங்கள் சமஸ்கிருதம் படியுங்கள். ஞாபக சக்தி பெருகும் என்று சொல்லி சம்ஸ்கிருத வியாபாரம் செய்கிறீர்கள். இதையெல்லாம் நிறுத்திவிட்டு எல்லோரும் ஓர் குலம் என்று சொல்லுங்கள். பின் எதற்கு மதம் மாறப்போகிறார்கள்?
IRUNGOVEL A P: ஐரோப்பாவிலேயே மிக ஏழ்மை மிகுந்த நாடு அல்பேனியா.அந்நாட்டில் பிறந்த தெரசா அம்மையார் தனது தாய் நாட்டின் வறுமையை போக்க போராடாமல் இந்தியாவின் வறுமையை போக்க கிளம்பி வந்தது சர்ச்சைக்குரியது மட்டுமல்ல அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். எனக்கு சமூக சேவை செய்யும் ஆர்வம் உண்டானால் நான் பிறந்த ஊரான உறையூருக்கு செய்வேன். அல்லது என் ஊர் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் செய்வேன்.அல்லது என் மாவட்டம் அமைந்துள்ள தமிழ்நாட்டுக்கு செய்வேன். அல்லது என் மாநிலம் அமைந்துள்ள பாரத நாட்டிற்கு செய்வேன். அதை விட்டுவிட்டு அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் வாழும் ஏழைகளுக்கு நான் சமூகசேவை செய்யப்போகிறேன் என்று நான் சொன்னால் அது எவ்வளவு மோசடி. அதைப்போலத்தான் இருக்கிறது தெரசா அம்மையாரின் செயலும் ஆகும். இந்த மோசடியை அம்பலப்படுத்துவது எப்படி மதவெறியாகும்.
-இது எனது ஃபேஸ் புக் நண்பர் திரு உறையூரில் வந்தியத்தேவன் தனது சுவறில் போட்டிருந்த ஒரு நிலைத் தகவல்.
சட்டசபை கூடும்போதெல்லாம் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லை! தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அ.தி.மு.க உறுப்பினர் கடம்பூர் ராஜு பேசியபோது, 'குடிமகன்’ என்று குறிப்பிட்ட வார்த்தை தே.மு.தி.கவினரை கொந்தளிக்க வைத்தது. இதையடுத்துப் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க), 'முன்னாள் முதல்வர் குறித்து சொன்ன ஒரு வார்த்தை’ அ.தி.மு.க உறுப்பினர்களை அலற வைத்தது. அதன்பின், அ.தி.மு.க - தே.மு.தி.க உறுப்பினர்கள் இடையே நடந்த காரசார விவாதம் களேபரமாகிப் போனது.
தே.மு.தி.க உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். தே.மு.தி.க உறுப்பினர்களான மோகன்ராஜ், சந்திரகுமார், வெங்கடேசன், பார்த்திபன், தினகரன், சேகர் ஆகியோர் 'சபாநாயகரைத் தாக்க முயன்றது, சபைக் காவலர்களைத் தாக்கியது, சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது’ குறித்து விளக்கம் அளிக்க சட்டமன்ற உரிமைக்குழு உத்தரவிட்டுள்ளதாம்.
அன்றைய தினம் சட்டமன்றத்தில் நடந்தது என்ன? மோகன்ராஜ் விவரிக்க ஆரம்பித்தார். ''கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள், மக்களுக்குரிய கருத்துகளைச் சொல்லாமல் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 'மக்களின் முதல்வர்’ என்று புகழ்பாடும் மன்றமாக சட்டமன்றத்தை மாற்றிவிட்டனர். இவர்கள், அனைத்து எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் குறை சொல்லும் வகையிலேயே பேசுகின்றனர். அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரினால் அதை சபாநாயகர் ஏற்க மறுக்கிறார்.
நான் பேச ஆரம்பித்தபோது, முன்னாள் முதல்வர் பற்றி ஒரு வார்த்தை சொன்னேன். உடனே அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்களும் என்னை அடிக்கப் பாய்ந்தனர். முன்னாள் முதல்வரை நான் விமர்சிக்கவில்லை. சபாநாயகரும், சட்டசபை செயலாளர் ஜமாலுதீனும் கையெழுத்திட்டு, 'ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் ரங்கம் தொகுதி காலியாக உள்ளது’ என்று அறிவிக்கை மூலம் அவர்கள்தான் தெரிவித்தனர். அதைத்தான் நான் சொன்னேன். அதை நான் பேசக் கூடாது என்று சபாநாயகர் என்னை வெளியேறச் சொன்னார். அதை எங்களது உறுப்பினர்கள் கேட்டபோது சபைக் காவலர்கள் சட்டையைப் பிடித்துக் கீழே தள்ளினர். இதுபோன்ற போக்கு வேறு எங்கும் நடைபெற்றது இல்லை.
எங்களைப் பொறுத்தவரை மக்கள் பிரச்னைகளைப் பேசி அதற்குத் தீர்வு கண்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடும் லட்சியத்தோடும்தான் சட்டசபைக்கு வருகிறோம். தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அ.தி.மு.கவினர் வம்புக்கு இழுக்கும்போது அதற்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. தகாத வார்த்தைகளைப் பேசிய அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை. எங்களை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடியுமே தவிர, மக்கள் மனதில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடியாது'' என்று நீண்ட விளக்கம் அளித்தார்.
இதுபற்றி தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ ராதாபுரம் மைக்கேல் ராயப்பனிடம் கேட்டோம். ''தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதையே அவர்களது நடவடிக்கைகள் காட்டுகிறது. 'மக்கள் பிரச்னைகளைச் சொல்லி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்; அரசிடம் பதில் பெற வேண்டும்’ என்ற நோக்கம் சிறிதளவும் இல்லாமல் வெற்று விளம்பரத்துக்காக குஸ்தி அடிக்கிறார்கள். அரசின் பதிலில் உடன்பாடு இல்லை என்று எதிர்ப்பு தெரிவிக்க, வெளிநடப்பு செய்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து மன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டு மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசலாம். ஆனால், இவர்களது நோக்கமே சட்டமன்றத்தில் தகராறு செய்துவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதுதான். அரசு மீது, அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது, அவர்கள் அதற்குப் பதில் சொல்வார்கள். அதை லாகவமாக எதிர்கொண்டு பதில் அளிக்கும் ஆற்றல் இல்லாததால்தான் தே.மு.தி.கவினர் கலாட்டா செய்கிறார்கள். ஒரு தடவை, இரண்டு தடவை என்றால் சபாநாயகர் மன்னிப்பார். ஆனால், தே.மு.தி.கவினர் வேலையே ரகளை செய்வதுதான் என்கிறபோது வெளியேற்றம், சஸ்பெண்ட் என்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது ஆகிறது.
அ.தி.மு.க எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு பேசும்போது, 'சிட்டிசன் என்றால் குடிமகன்’ என்று பொதுவாகத்தான் சொன்னார். அவர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், தே.மு.தி.க உறுப்பினர்களுக்கு கோபம் வந்தது ஏன் என்று தெரியவில்லை. அதற்குப் போட்டியாக, மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மாவைக் குறிப்பிடும் வகையில் சில வார்த்தைகளை தே.மு.தி.க உறுப்பினர் சொன்னார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு சம்பந்தமில்லாத அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதற்காக, சபாநாயகரை அடிக்கப் பாய்வது, தகாத வார்த்தைகளைச் சொல்வது, சபைக் காவலர்களைத் தாக்குவது என்பதெல்லாம் அத்துமீறிய செயல்கள். இது முதல் தடவை அல்ல. ஏற்கெனவே, அவர்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த், அமைச்சர்களைப் பார்த்து நாக்கை துருத்தி பேசி, வம்புக்கு இழுத்தார். இரண்டாவது தடவையாக எம்.எல்.ஏவாக இருக்கும் அவருக்கு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னையை எப்படி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை. அரசியல் அனுபவம் இல்லாததுதான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம்.
இவர்களோடு இருந்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்றுதான் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களைச் சந்தித்தோம். அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் பேசிய தமிழழகன் எம்.எல்.ஏ, 'ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்களோடு வாருங்கள்’ என்றார். அதற்கு அவரை சட்டமன்றத்திலேயே அடிக்கப் பாய்ந்தனர் தே.மு.தி.க. உறுப்பினர்கள்.
தமிழழகனைப் பாதுகாக்கும் வகையில் நான் அவர்களைத் தடுத்தேன். அப்போது, என்னைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல் சட்டையையும் கிழித்தனர். அப்போதும் தே.மு.தி.கவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இப்போது, சபாநாயகரை அடிக்கப் பாய்ந்து அமளிதுமளி ஏற்படுத்தியதால் குறைந்தபட்ச தண்டனைதான் கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் முறையாகப் பேசி அரசிடம் பதிலை வாங்குகிறார்கள். ஆனால், தே.மு.தி.க மட்டும்தான் ஜனநாயக மரபுகளுக்கு எதிராகச் செயல்பட்டு பிரச்னையை திசை திருப்புகிறார்கள். தெருச் சண்டை என்று சொல்வார்களே அதைப்போல மாண்புமிக்க சட்டமன்றத்தில் ரகளை செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்த வேண்டிய அந்தக் கட்சியின் கொறடா சந்திரகுமார், அதிரடியாக அடிக்கப் பாய்கிறார். அவரை அவர்களது உறுப்பினர்களே அடக்கியும் அடங்காமல் துடிக்கிறார். தொகுதிப் பக்கமே போகாமல்... தொகுதிக்கு எதையும் செய்யாமல் அங்கே போனால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்களே என்றுதான் இத்தனையையும் நடத்துகிறார்கள்’ என்று விரிவாகப் பேசினார்.
தாங்கள் இருக்கும் இடம் சட்டசபை என்பதை அனைவரும் உணர்ந்து நடக்கவேண்டும்!