கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தாக முதியவர் இக்லாக், 200 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது மகனும் படுகாயமடைந்தார்.
போலீஸ் அவரது வீட்டில் இருந்த மாட்டிறைச்சி என்று சொல்லப்பட்ட இறைச்சியை சோதனைக்காக அனுப்பியது. ஆய்வில் அது ஆட்டிறைச்சி என்று தெரிய வந்தது.
மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா, இது எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவம் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இக்லாக்கின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். முதலில் அவரை கிராமத்திற்குள் அனுமதிக்க மறுத்த உத்தரபிரதேச அரசு, பின்னர் அனுமதித்தது.
அக்டோபர் 3-ம் தேதி இந்த வழக்கின் முதல் குற்றவாளிகளான விஷால் மற்றும் ஷ்யாமை போலீஸ் கைது செய்தது. இதில் விஷால் அந்த பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா பிரமுகரான, சஞ்சய் ரானாவின் மகன் . இவர்கள் கைது செய்யப்பட்ட போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பெண்கள் தாக்கினர். ஒரு தலைபட்சமாக செய்தி வெளியிடுவதாக பத்திரிகையாளர்களின் வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. இரு செய்தியாளர்கள் காயமடைந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கொலை செய்யப்பட்ட இக்லாக்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
உத்தரபிரதேச அரசு, கொலை செய்யப்பட்ட இக்லாக்கின் குடும்பத்துக்கு 45 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தது.
இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும் இக்லாக்கின் மூத்த மகன் சர்தார்ஜ், 'இன்னமும் இந்த தேசத்திடம் நம்பிக்கை இருப்பதாகவும், தொடர்ந்து தேசத்திற்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது எழுத்தாளர்கள், தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment