சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Oct 2015

சக மாணவர்களை காப்பாற்றி ஹீரோவான முன்னாள் ராணுவ வீரர்!

க்ரிஸ் மின்ட்ஸ், அமெரிக்காவின் ஆரகன் மாகாணத்திலுள்ள ரோஸ்பர்க் நகர மக்களின் இன்றைய ஹீரோ. கடந்த விழாயக்கிழமை ரோஸ்பர்க் நகரின் அம்ப்குவா கம்யூனிட்டி கல்லூரில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஏழு குண்டுகளை தன் உடலில் வாங்கி, பல மாணவர்களின் உயிரை காப்பாற்றியவர் தான் இந்த க்ரிஸ் மின்ட்ஸ்.

க்ரிஸ்டோஃபர் ஹார்பர் மெர்சர் என்பவரால் நடத்தப்பட்ட இந்த இரக்கமற்ற துப்பாக்கிச்சூட்டில் எட்டு மாணவர்களும், ஒரு ஆசிரியரும் உயிரிழந்தனர். ஒன்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் க்ரிஸ் மின்ட்ஸும் ஒருவர்.

அமெரிக்க ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவை புரிந்த க்ரிஸ், சமீபத்தில் தான் இந்த கல்லூரியில் மாணவராக சேர்ந்தார். கடந்த வியாழக்கிழமை அன்று, ஆட்டிசம் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்ட தன் ஆறு வயது மகன் டைரிக்குக்கு பிறந்த நாள் வாழ்த்தினை கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார் க்ரிஸ். மெர்சர் கையில் துப்பாக்கியுடன் மாணவர்களைசுட ஆரம்பித்தவுடன், உடனடியாக நூலகத்திற்கு சென்ற க்ரிஸ், அலாரத்தினை இழுத்து, மாணவர்களை ஓடுமாறு எச்சரித்துள்ளார்.

அதன்பின், மெர்சர் வகுப்பறைக்குள் செல்வதை தடுக்க, வகுப்பறையின் கதவுகளை மூடியுள்ளார் க்ரிஸ். இதனால் ஆத்திரமடைந்த மெர்சர், க்ரிஸ்சை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கீழே விழுந்த க்ரிஸ், இன்று என்னுடைய மகனின் பிறந்தநாள் என மெர்சரிடம் கூறியுள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாத மெர்சர், மீண்டும் நாங்கு முறை க்ரிஸ்சின் உடலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். படுகாயமடைந்த க்ரிஸ்சுக்கு ரோஸ்பர்க் நகரிலுள்ள மெர்ஸி மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காவல் துறையினருடனான போராட்டத்துக்கு பின், மெர்சர் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். காயமடைந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு மறுநாள் தன்னுடைய முகநூல் கணக்கில் ''காயமடைந்தவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக நம்புகிறேன். நான் நலமாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார் க்ரிஸ். மேலும், தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தன் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

க்ரிஸ்சின் சிகிச்சைக்காக நிதி திரட்ட “gofundme” எனும் வலைதளத்தில் ஓர் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது சிகிச்சைக்கு 10,000 டாலர்கள் தேவைப்பட்ட நிலையில் பலர் க்ரிஸ்சுக்காக அளித்த நிதியின் மொத்த மதிப்பு ஏழு லட்சம் டாலர்களை தாண்டிச் சென்றுள்ளது. ஆனால், இதைக்கூட விரும்பாத க்ரிஸ், தன் முகநூல் பதிவில் ''நான் எனக்கு சரி என்று தோன்றியதை மட்டுமே செய்தேன். எனக்காக மக்கள் யாரும் நிதி வழங்க வேண்டாம்" எனப் பெருந்தன்மையோடு பதிவிட்டுள்ளார்.

உண்மையான ராணுவ வீரன் என்பதை நிரூபித்துள்ள க்ரிஸ், தற்போது ரோஸ்பர்க் நகர மக்களின் ஹீரோவாகி உள்ளார்.


No comments:

Post a Comment