சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Oct 2015

விஷ்ணு ஹேப்பி மச்சான் !

''இவர், எம்.பி.ஏ-வில் எனக்கு சீனியர்; அப்ப நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான். திடீர்னு 'சினிமாவுல நடிக்க ட்ரை பண்ணிட்டிருக்கேன்’னு சொன்னார். எனக்குச் சிரிப்பு வந்தது. ஏன்னா, அப்ப விஷ்ணு செம வெயிட் பார்ட்டி. நல்லா கொழுக்மொழுக்னு குண்டா இருப்பார். அதுவும்போக ரொம்ப வெட்கப்படுவார். நிறையத் தயக்கம், கூச்சம். 'இப்படி எல்லாம் இருந்துட்டு எப்படி சினிமாவுல நடிக்க முடியும்?’னு நான் அதை சீரியஸாவே எடுத்துக்கலை. ஆனா, சொன்னமாதிரியே சினிமாவுக்கு வந்துட்டார்'' - காதல் கணவரின் வாழ்க்கை கிராஃபில் சஸ்பென்ஸ் கட் செய்கிறார் மனைவி ரஜினி. உற்சாகத்தில் பூரிப்பாகச் சிரிக்கிறார் விஷ்ணு விஷால். 'முண்டாசுப்பட்டி’, 'ஜீவா’, 'இன்று நேற்று நாளை’ என ஹேட்ரிக் ஹிட் மகிழ்ச்சி. 
''ஹேய்... கதையை முடிப்பா, நான் குண்டா இருக்கேன்னு சொல்லி நிறுத்திட்ட'' என விஷ்ணு சொல்ல... தொடர்கிறார் ரஜினி.
''அப்படியே பேசிப் பேசிப் பழகினதுல ஜஸ்ட் ஃப்ரெண்ட்ல இருந்து கொஞ்சம் நெருக்கமாகி பாய் ஃப்ரெண்ட் ஆனார். என் அப்பா நட்ராஜ்தான் 'அன்புள்ள ரஜினிகாந்த்’, 'வள்ளி’ படங்களின் இயக்குநர். ரஜினி சாருக்கு ரொம்ப க்ளோஸ். அதனாலதான் எனக்கு 'ரஜினி’னு பேர் வெச்சார். 'யாரையாவது காதலிச்சா, சொல்லு. சினிமா ஆளு மட்டும் வேண்டாம்’னு அப்பா சொல்லியிருந்தார். விஷ்ணு சினிமாவுக்குப் போக மாட்டாருங்கிற தைரியத்துல நானும் அவரைக் காதலிச்சுட்டேன். பார்த்தா ஒரே பாட்டுல லைஃப் மாறுற மாதிரி, ஒரே சினிமாவுல எங்க வாழ்க்கையே மாறிடுச்சு'' - ரஜினிவிட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார் விஷ்ணு.
''எனக்கு கிரிக்கெட் விளையாடத்தான் ஆசை. தமிழ்நாட்டுக்காக பல போட்டிகள் விளையாடியிருக்கேன். திடீர்னு சினிமா மேல் ஆர்வம். ஜிம், டயட்னு உடம்பைக் குறைச்சு, முடி வளர்த்து, ஸ்கின் டோன் சேர்த்துனு பல முயற்சிகள். ஆனா, சொல்லிக்கிற மாதிரி எந்த வாய்ப்பும் கிடைக்கலை. வெறுத்துப்போய் வேற வேலையில சேர்ந்துட்டேன். 'ஹப்பா... சினிமாவை விட்டுட்டான்’னு இவங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். ஆனா, வேலையில சேர்ந்த ஒரே மாசத்தில், ஒரு சினிமா அழைப்பு... அதான் 'வெண்ணிலா கபடிகுழு’!
சினிமாவுல நடிக்கப்போறேன்னு சொன்னதும், மேடம் ரொம்ப அப்செட். 'நீ ஹீரோயின்கூட டான்ஸ் ஆடுறது, கட்டிப்பிடிக்கிறது எல்லாம் என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. என் அப்பாவும் ஒப்புக்க மாட்டார்’னு ஒரே அழுகாச்சி. 'சரி... நான் சினிமா வாய்ப்பை உனக்காக விடுறேன்’னு சொல்லவும் சமாதானமாகிட்டாங்க. 'சரி... நடி. ஆனா, இந்த ஒரு வருஷம் நிச்சயம் உன்கூட அடிக்கடி சண்டை போடுவேன். கொஞ்சம் பொறுத்துக்க. நான் திட்டினாக்கூட சீரியஸா எடுத்துக்காத. எனக்கு இதெல்லாம் பழக கொஞ்சம் டைம் ஆகும்’னு சொன்னாங்க. சொன்ன மாதிரியே பழகிக்கிட்டாங்க. எந்த அளவுக்குன்னா அவங்களே நான் ஸ்பாட்ல ஒழுங்கா ரொமான்ஸ் பண்றேனானு பார்த்து கரெக்ஷன் சொல்ற அளவுக்கு...'' என விஷ்ணு சிரிக்க, ரஜினி முகத்தில் உஷ்ணம்.
'' 'யாருக்கும் முத்தம் கொடுக்கக் கூடாது, நோ ரெய்ன் டான்ஸ்’னு அப்பப்போ  சொல்லிட்டிருப்பேன். ஆனா, 'நீர்ப்பறவை’யில் அதெல்லாம் என் கண் முன்னாடியே நடந்தது. ஏன்னா, அந்தப் படத்துல நானும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர். 'எதெல்லாம் நான் செய்யக் கூடாதுனு சொன்னேனோ, அது எல்லாத்தையும் என் முன்னாடியே பண்ணிட்டிருக்க?’னு கிண்டலா சொல்வேன். 'கன்டினியூட்டி கரெக்டா இருக்காங்க?’னு கேட்டுட்டுப் போயிட்டே இருப்பார் ஹீரோ'' என சட்டென ஜில்லாகிறார் ரஜினி.
''ஓ... மனைவி உதவியோடுதான் நச் நச்னு ஸ்க்ரிப்ட் பிடிக்கிறீங்களா?''
''முதல் படம் ஹிட். ஆனா, அடுத்தடுத்த படங்கள் அப்படிப் போகலை. குழப்பமா இருந்தது. 'இது நமக்கு நல்ல படமா இருக்கும். ஓடுதா இல்லையானு தெரியலை’னு 'வெண்ணிலா கபடிகுழு’ கதை கேட்டதும் ஒரு நம்பிக்கை வந்துச்சு. அந்த மாதிரி நம்பிக்கை கொடுக்கிற ஸ்க்ரிப்ட்களை மட்டும் தேர்ந்தெடுக்கணும்னு முடிவுபண்ணேன். அதுதான் இப்போ வரை கைகொடுக்குது. ரஜினியும் என் முடிவு சரியா, தப்பானு தீர்மானிக்க உதவுவாங்க. அப்படியும், 'இன்று நேற்று நாளை’ கதையைக் கேட்டுப் பிடிச்சிருந்தாலும் சின்ன சந்தேகம். 'என்னது டைம் மெஷினா... இப்பதான் கேரியர் ஸ்டெடி ஆகியிருக்கு. பார்த்துப் பண்ணு மச்சான்’னு பசங்க சொன்னாங்க. ரஜினி ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு, 'நல்லா இருக்கு. ஆனா, இதுல இருக்குற மாதிரி அப்படியே எடுத்துருவாங்களா?’னு கேட்டாங்க. அப்போ சுசீந்திரன் சார், கேமராமேன் மதி சார்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். 'உனக்குக் கதை பிடிச்சிருக்கா? அப்போ நடி. ஒரு புது முயற்சின்னா, அதை மத்தவங்க பண்றதுக்கு முன்னாடி நாம பண்ணிடணும். நீ பண்ணிடு’னு சொன்னாங்க. தைரியமா படத்துல கமிட் ஆனேன். இயக்குநர் ரவிக்குமார், சொன்னதைவிட படத்தை பெட்டரா எடுத்துட்டார்.''
''தமிழ் சினிமாவின் சேட்டை ஹீரோஸ் செட்ல விஷ்ணுவும் மெம்பர். எப்படிச் சமாளிக்கிறீங்க?'' - இது ரஜினிக்கான கேள்வி.
''அச்சோ... அது செம கேங். செட்டு சேர்ந்துட்டா, யாராலயும் சமாளிக்க முடியாது. அதுவும் ஆர்யா இருக்காரே... முதல் தடவை இவர் என்னை அறிமுகப்படுத்தினப்ப, எனக்குக் கிறுக்குப் பிடிக்கவெச்சுட்டார். 'நீதான் அந்த அப்பாவியா? உனக்குத் தெரியுமா... இந்தந்த ஹீரோயின்கூட இப்படி எல்லாம் பேசிட்டிருக்கான்’னு சீரியஸா லிஸ்ட் சொன்னார். அப்புறம், 'என்னடா நாளைக்கு அந்த ஷூட்டிங்கா..? ம்ம்ம்... என்ஜாய் பண்ணு’னு அவர்கிட்ட சொல்லிட்டே, 'என்னம்மா நீ ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் போறதே இல்லையா? ரொம்பத் தப்பு... ரொம்பத் தப்பு. அப்பப்போ போ. இவன் அவ்வளவு நல்லவன் கிடையாது’னு அவர் சொன்னதை எல்லாம் நான் நம்பிட்டேன். ஒவ்வொரு தடவை இப்படிக் கலாய்க்கும்போது அடுத்த லெவலுக்குப் போவார். இதனால, 'எங்களுக்கு டைவர்ஸ்னு ஒண்ணு நடந்தா, அது உங்களாலதான் பிரதர் நடக்கும். தயவுசெஞ்சு எதுவும் சொல்லாதீங்க’னு
அவர்கிட்ட சொல்லிட்டேன். இப்படி விஷால், விக்ராந்த்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சேட்டை பண்ணுவாங்க. ஆனா, அவங்க இல்லாம இவர் இல்லை!''
''ஆமாங்க... செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் சமயம் எல்லாரோடயும் நல்ல நட்பு வந்திருச்சு. சில தோல்விகளால் நான் சங்கடத்தில் இருந்தப்ப, எனக்கு எனர்ஜி கொடுத்ததே அந்த நண்பர்கள்தான். 'கொஞ்சம் பொறுமையா இரு. இதைவிடவும் பெரிய தோல்விகள்ல இருந்து மீண்டுவந்தவங்க இருக்காங்க. நீ இப்பத்தானே வந்திருக்க. சினிமாவுல ஒவ்வொரு வாய்ப்பும் அவ்வளவு முக்கியம். ஒரு வாய்ப்புகூட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுரும். அதனால நல்ல நேரம் வர்ற வரை, தப்பான படம் எதுவும் பண்ணிடாத’னு தோளோடு அணைச்சு வழிகாட்டிட்டே இருந்தாங்க... இருக்காங்க.
அவ்ளோ ஏன்... ரஜினி சார்கிட்ட இருந்துகூட பாடம் கத்துட்டிருக்கேன். என் கல்யாணப் பத்திரிகை கொடுக்க ரஜினி சார் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்ப 'எந்திரன்’ ரிலீஸாகி ஹிட். 'சார்... 'எந்திரன்’ செமயா இருந்துச்சு. சான்ஸே இல்லை’னு சொன்னேன். 'தேங்க்ஸ்... தேங்க்ஸ்’னு சொன்னவர், 'அடுத்து என்ன பண்ணப் போறேன்னுதான் தெரியலை’னு சொன்னார். எனக்குத் திடுக்னு தூக்கிப்போட்டது. சூப்பர் ஸ்டாருக்கே அந்தச் சிக்கல் இருக்கும்போது, நம்ம கவலை எல்லாம் தூசுனு நினைச்சுக்கிட்டேன். பொறுமையா, நிதானமா முடிவெடுக்கக் கத்துக்கிட்டேன். அடுத்தடுத்து வந்த 11 பட வாய்ப்புகளை 'வேணாம்’னு சொல்லிட்டு வீட்ல இருந்தேன். ஒரு பெரிய படம். பேர் சொல்ல விரும்பலை. அதையும் வேணாம்னு சொல்லிட்டேன். 'எவ்வளவு பெரிய வாய்ப்பு. நீ ரொம்பத் தப்பு பண்ற’னு அப்பா சண்டை போட்டார். பிரமாண்ட பூஜை, ரிலீஸ்னு மிரட்டிட்டாங்க. படம் ரிலீஸாச்சு. மதியம் 3 மணிக்கே அப்பாகிட்ட இருந்து போன். 'நீ சொன்னது சரிடா. படம் நல்லா இல்லை’னு சொன்னார். ஆக, ஸ்லோ அண்ட் ஸ்டெடிதான் நம்ம பாலிசினு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டேன்.''
கணவரின் சக்சஸ் சீக்ரெட்டுக்கு மனைவியிடம் உற்சாக தம்ஸ்-அப்!

No comments:

Post a Comment