அமெரிக்காவிலுள்ள மேற்கு விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர் அரவிந்த் திருவேங்கடம்.
அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32. தானியங்கித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அரவிந்துக்கு, அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம் மேற்கொள்ளுவது பிடித்தப் பொழுதுபோக்கு. குறிப்பாக, சோதனை ஓட்டத்திற்கென்று கொடுக்கப்படும் வாகனங்களைச் சோதிப்பதற்காக நெடுந்தூரம் ஓட்டிச் செல்வது இவரது வாடிக்கை.

அப்படித்தான் அண்மையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச் சென்ற அரவிந்திற்கு, அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
தற்செயலாக, அந்த வாகனத்தின் புகை வெளியிடும் அளவைச் சோதித்த அரவிந்தும், அவரது நண்பர் மார்க் பெஸ்சும் அதிர்ந்து போனார்கள். காரணம் புகை வெளியிடும் அளவை நிர்ணயிக்கும் ஈ.பி.ஏ கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச அளவை விட, இந்த வாகனத்தின் புகை வெளியேற்ற அளவு 20 மடங்கு அதிகமாக இருந்தது.

இதேபோல ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ’ஜெட்டா’ விலும் 15 முதல் 35 விழுக்காடு அதிகப் புகை வெளியேறியிருக்கிறது.
ஆனால் தர நிர்ணயச் சோதனைகளிலெல்லாம் மிக எளிமையாகத் தேர்வு பெற்றவை இந்த கார்கள். அது எப்படி? என்ற குழப்பத்திற்கான விடையைத் தேடுகையில்தான் அரவிந்த், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மாபெரும் ஊழலைக் கண்டறிந்திருக்கிறார்.

காற்றில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும், மோனோ நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற காரீயத்தை (Lead) சுற்றுச்சூழலில் அளவிற்கு அதிகமாக வெளியிடும் போதிலும், அந்த அளவைக் குறைத்துக் காட்டுமாறு, ஏமாற்றுத் திறன் வாய்ந்த ஒரு மென்பொருளை இந்த வாகனங்களில் பொருத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.
இதைக் கண்டறிந்த உடன், தன்னம்பிக்கையும் துணிச்சலும் கொண்டவராக, உடனடியாக புகார் பதிவு செய்துள்ளார் அரவிந்த்.
இதைத் தொடர்ந்து, உலக ஊடக வெளியில் பட்டவர்த்தனமாக அம்பலமானது ஃபோக்ஸ்வாகன் ஊழல். இந்த அவமானத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான மார்ட்டின் விண்டர்கோர்ன், இந்த மோசடிக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகினார்.
மேலும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், 18 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கட்டவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து 5 நாட்களில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், பங்குச்சந்தையில் தன் மதிப்பில், 25 பில்லியன் யூரோக்களை இழந்து, அடிமட்டத்தை அடைந்துள்ளது.
ஒரு ராட்சத கார்ப்பரேட் நிறுவனத்தை, தனி மனிதனாக நின்று ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பது போல வீழ்த்திய தமிழரான அரவிந்த் திருவேங்கடம், உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார்.

No comments:
Post a Comment