சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Oct 2015

இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்குச் செல்லும் கோர்ட் படம்- ஓரு பார்வை!

நமது நீதித்துறை மீதான பிம்பம் நம் கண் முன்னர் , சென்னை விமான கூரையைப் போல் அடிக்கடி நொறுங்கி விழத்தான் செய்கிறது.ஒரு சாதரண வழக்கை , நமது நீதித்துறை எப்படியெல்லாம்  கையாள்கிறது என்பதை கோர்ட் என்னும் மராத்திய திரைப்படத்தின் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் சைத்தன்ய தம்ஹனே.

88வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்காக நம் நாட்டில் இருந்து இப்படம் அனுப்பப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் சிறந்த படமாக தேசிய விருதையும் இப்படம் வென்று இருக்கிறது. 

சிறுவர்களுக்கு பாடம் நடத்தி முடித்துவிட்டு, முதியவரான நாரயண் காம்ப்ளே மேடையில் கம்யுனிச  பாடல் ஒன்றைப் பாடும் வேளையில் கைது செய்யப்படுகிறார்.துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கழிவுகளை அகற்றும் வேளையில், எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் செல்ல இறந்து போகிறார். 

அவரது மரணம் தற்கொலையாக்கப்படுகிறது, அதற்குக் காரணமாய் நாரயண் காம்ப்ளே பாடிய பாடல் என காவல் துறை முடிவு செய்து அவரைக் கைது செய்கிறார்கள்.படத்தில் நாரயண் காம்ப்ளேயாக நடித்து இருப்பவர்  வீர சத்திடர் . இவர் நிஜ வாழ்க்கையில் தலித்திய போராட்டங்களுக்காகப் பாடல்களும், கவிதைகளும் எழுதுபவர். 

இனி படம் நெடுக,நீதிமன்றக் காட்சிகளே வருகின்றன.நாம் எப்போதும் சினிமாவில் பார்க்கும் “ யுவர் ஆனர் சொல்வது,குற்றவாளியின் பெயரை மூன்று முறை கூப்பிடுவது,சத்யபிரமாணம் செய்யச் சொல்வது “ மாதிரியான  கிளிஷேக்கள் எதுவும் இல்லை.ஒவ்வொரு காட்சியிலும் நீதிமன்றத்திற்குள் அமர்ந்து அதை பார்க்கும் ஒரு பார்வையாளனாய் நமக்குக் காட்சிகள் சொல்லப்படுகிறது.படத்தின் பின்னணி இசையாக நிசப்தம் வரும் காட்சிகளில் எல்லாம் நீதிமன்றங்களுக்கு எதிராக நம் மனவோசைகள் எழுப்பப்படுகிறது.
அரசு தரப்பு வக்கீலாக வரும் கீதாஞ்சலி குல்கர்னி எப்படியாவது வழக்கை முடித்து காம்ப்ளேயை சிறையில் தள்ளப் பார்க்கிறார். காம்ப்ளே தரப்பு வழக்கறிஞராக வரும் விவேக் கோம்ப்ரே அட்டகாசமாய் நடித்து இருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. 

மராட்டிய மக்களின் வேலை வாய்ப்புகளைப் தட்டிப்பறிப்பதாக மேடை நாடகம் ஒன்றை பார்த்து கீதாஞ்சலி மகிழ்வது, வழக்கில் ஒரு குறிப்பிட்ட சாராரை அவதூறாய் பேச, விவேக்கை அந்த மக்கள் அடிப்பது என படத்தில் வரும் கதாபாத்திரங்களின் வாழ்கையையும் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 

கோர்ட் அறை,கதாபாத்திரங்களின் வீடுகள்,காவல் நிலையம் ஆகியவை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார், படத்தின் கலை இயக்குனர் நிலேஷ் வாக். படத்தின் ஒரு காட்சியில், துப்புரவுத் தொழிலாளிகள் எந்தவொரு பாதுகாப்புக் கருவியும் இல்லாமல் செல்வதால் தான் உயிர் இழக்கிறார்கள் என்பது சொல்லப்படும். ஆனால் அதைப்பற்றி நீதிமன்றம் எந்தவொரு எதிர்ப்பையும் பதிவு செய்யாது.

அதே போல், ஸ்லீவ்லெஸ் அணிந்த பெண் ஒருவரின் வழக்கை அவரின் உடையைக் காரணம் கூறி ஒத்திவைப்பது, செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு மாத கோடை விடுமுறை எனத் தெரிந்தும் காரணமே இல்லாமல் வழக்கை ஒத்திவைப்பது என நீதித்துறையில் நடக்கும் தகிடுதத்தங்களை முதல் முறையாக இந்திய சினிமாவில் பதிவு செய்து இருக்கிறார்கள். கோர்ட் விடுமுறை என சொல்லிவிட்டு, எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு இருள் சூழ சில நொடிகள் வரும் காட்சி சட்டம் ஒரு இருட்டறை என்பதைச் சொல்லாமல் அறைகிறது.

No comments:

Post a Comment