சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Oct 2015

பதுக்கியவர்கள் தானாகவே செலுத்தினர்: ரூ.3 ஆயிரத்து 777 கோடி கறுப்புப் பணம் வசூல்!

கறுப்புப் பணம் குறித்து அதை பதுக்கியவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ரூ.3,770 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த ஜூலை மாதம், கறுப்புப் பண சட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை எப்படி மதிப்பீடு என்பது குறித்த விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. அசையா சொத்துகள், நகைகள், மதிப்பு மிக்க கற்கள், ஓவியங்கள், பங்குகள் ஆகியவற்றை தற்போதைய சந்தை விலையில் அதற்கான மதிப்பு கணக்கிடப்படும் என்று மத்திய வரி ஆணையம் (சிபிடிடீ)  கூறிஇருந்தது. 


வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தாமாக முன்வந்து ஒப்படைப்பதற்காக 90 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தெரிவிக்கும்போது, வரி மற்றும் அபராதம் என 60 சதவீதம் மட்டுமே செலுத்தி பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிடலாம். மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிப்பவரிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்பட மாட்டாது. அவர்கள் அளிக்கும் தகவல் அப்படியே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், கடந்த 3 மாதங்களாக 638 பேர் தாமாக முன்வந்து தாக்கல் செய்துள்ளதன் அடிப்படையில், அரசு ரூ.3,770 கோடி வசூலித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரையில் தாமாக முன்வந்து கறுப்புப் பண விவரங்களை அளித்தவர்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை.


இதுவரை ரூ.3770 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாலும், இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment