சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

மேட்ச் பிக்சிங் ' வங்கதேச கேப்டனுடன் இணைந்து விளையாடிய பிரவீன் தாம்பேவுக்கு சிக்கல் !

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லுடன் இணைந்து, டி20 போட்டியில் விளையாடியதாக ராஜஸ்தான் அணியின் பிரவீன தாம்பே மீது புகார் எழுந்துள்ளது.

லிவர்பூல் லீக்கில் பங்கேற்று விளையாடிய பிரவின் தாம்பே, பின்னர் ஜுலை 23 முதல் 31ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருந்துள்ளார்.  நியூயார்க் நகரில் ஜுலை 26ஆம் தேதி ஹால்ம்டால் கிரிக்கெட் அணிக்காக அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.  இதே போட்டியில் மேட்ச் பிக்சிங்கில்  ஈடுபட்டதால் தடைக்குள்ளான வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லும் விளையாடியது தற்போது தெரிய வந்துள்ளது. 

இது குறித்து பிரவீன் தாம்பே கூறுகையில், '' விடுமுறை நாட்களை கழிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அப்போது நண்பர்கள் சிலர் பயிற்சி ஆட்டம் என்றார்கள். ஆனால் மைதானத்திற்கு சென்ற பிறகுதான் அது டி20 போட்டி என்று எனக்கு தெரிய வந்தது. அங்கீகரிக்கப்படாத போட்டி என்பதால் அதில் பங்கேற்றேன்.மேலும் அந்த போட்டியில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல் விளையாடியதும் எனக்கு தெரியாது. அவருடன் எனக்கு அறிமுகமும் இல்லை.  இது பற்றி யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை '' என்றார். 

இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க துணைச் செயலாளர் பி.வி ஷெட்டி , '' இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம் '' எனக் கூறியுள்ளார். 

வங்கதேச அணிக்காக 13 டெஸ்ட் மற்றும் 38 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள முகமது அஸ்ரபுல், கடந்த ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தது. முதலில் 8 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தடை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.  அண்மையில் சூதாட்ட நோக்கத்துடன்  ரஞ்சி கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை அணுகியதாக 43 வயது பிரவீன் தாம்பே புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பி.சி.சி.ஐ.,  மும்பை ரஞ்சி வீரர் ஹிஹென் ஷாவுக்கு தடை விதித்தது. 



No comments:

Post a Comment