சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Aug 2015

உலகிலேயே முதல் முறை : சூரிய சக்தியில் இயங்கும் கொச்சி விமான நிலையம்!

 உலகிலேயே சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல்  விமான நிலையம் என்ற பெருமையை கொச்சி விமான நிலையம் பெற்றுள்ளது.

கேரளாவின் பொருளதாரத் தலைநகரான கொச்சியில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை முழுவதுமாக சூரிய சக்தி மூலம் இயங்க வைக்க கேரள அரசு முயற்சி எடுத்து வந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று  பணிகளை மேற்கொண்டு வந்தது.
கொச்சி விமான நிலையத்தின் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் 46 ஆயிரத்து 150 சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு, இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் கொச்சி விமான நிலையம், முற்றிலும் சூரிய ஒளி சக்தி  மூலம் இயங்கத் தொடங்கியது. 

இதனை கேரள முதலமைச்சர் உம்மண் சாண்டி  நேற்று தொடங்கி வைத்தார். உலகிலேயே முற்றிலும் சூரிய சக்தி மூலம் இயங்கும் ஒரே விமான நிலையம் கொச்சி விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 No comments:

Post a Comment