சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Aug 2015

சர்வே முடிவு: அடுத்த முதல்வர் யார்? கருணாநிதியை முந்தினார் ஸ்டாலின்!

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு 32 சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீதமும், கருணாநிதிக்கு 21.33 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக, லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. 28 மாவட்டங்களில், 80 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 3,320 பேரிடம்  நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு,  இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1 சதவீதம் பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6 சதவீதம் பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர். அதாவது அ.தி.மு.க.வை விட 1.5 சதவீதம்தான்  தி.மு.க.வுக்கு ஆதரவு குறைவு.

தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக தே.மு.தி.க. உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தே.மு.தி.க.வுக்கு 4 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

4வது இடத்தில் பா.ம.க. 3 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பா.ஜனதா கட்சிக்கு 2.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்பதில் ஜெயலலிதா முதலிடத்தையும், ஸ்டாலின் இரண்டாவது இடத்தையும், கருணாநிதி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஜெயலலிதாவிற்கு 32 சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீதமும், கருணாநிதிக்கு 21.33 சதவீதமும், விஜயகாந்திற்கு 6.24 சதவீதமும், அன்புமணிக்கு 2.27 சதவீதமும், வைகோவுக்கு 1.85 சதவீதமும், சீமானுக்கு 1.84 சதவீதமும், திருமாவளவனுக்கு 1.13 சதவீதமும், ஜி.கே.வாசனுக்கு 1 சதவீதமும், தமிழிசைக்கு 0.93 சதவீதமும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment