சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Aug 2015

இன்னமும் நடிப்பது ஏன்? - இயக்குனர் ரஞ்சித்திடம் மனம் திறந்த ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படமான கபாலி க்கு டைட்டில் அறிவித்த கையோடு, படப்பிடிப்புக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டார் இயக்குனர் ரஞ்சித்.

டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர்  'காளி' என்ற பெயர்தான் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் ரஜினி நடித்த கேரக்டரின் பெயர்தான் காளி. இதில் இன்னொரு சுவராஸ்யமான விஷயம் இயக்குனர் ரஞ்சித்திற்கும் பிடித்தமான படம் முள்ளும் மலரும். அதனாலேயே காளி என்ற டைட்டிலுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 

இருப்பினும் ரஞ்சித் கதை மற்றும் கதாபாத்திரங்களை தனக்கு விருப்பமான வகையில் எடுக்கவே விரும்புவார் என்பதால், கதைக்கு ஏற்றவாறு 'கபாலி' என பெயர் வைக்க விரும்பியதாகவும், ரஜினியும் அதற்கு ஓகே சொன்னதாகவும் தெரிகிறது. 

இப்படத்தில் தாதா கேரக்டரில் ரஜினி நடிக்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில், கதை தொடங்கி உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் வரை யாரை தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்யவும் ரஞ்சித்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளாராம் ரஜினி.  

இது தொடர்பாக அவரை அழைத்துப் பேசும்போது, "  நான் ஒன்றும் பெரிய ஸ்டார் கிடையாது. மக்களின் ஆசிர்வாதத்தாலும், அவர்கள் என்னை நேசிப்பதாலும்தான் நான் இன்னமும் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த  (கபாலி) படத்தில் நீங்கள் விரும்பியபடி செயல்படலாம். எல்லா சுதந்திரமும் உங்களுக்கு உண்டு. மேலும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வது முதல் டெக்னீஷியன்கள் வரை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளுங்கள். அதேப்போன்று கதாபாத்திரங்களையும் நீங்கள் விரும்பியபடி உருவாக்கிக்கொள்ளலாம்" என சொன்னாராம். 

இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ் ராஜ்,  அட்டக்கத்தி தினேஷ் மற்றும் (மெட்ராஸ்) கலையரசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பது உறுதியாகி உள்ளது. 

படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் ஆரம்பகால வாழ்க்கை குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையிலும், மற்ற காட்சிகள் வெளிநாட்டிலும் நடக்க உள்ளது. No comments:

Post a Comment