சூர்யா இப்போது விக்ரம்குமார் இயக்கும் 24 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தில் அவர் மூன்றுவேடங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
விக்ரம்குமார் ஏற்கெனவே தெலுங்கில் எடுத்த மனம் படத்தில் நாகார்ஜூனா, அவரது தந்தை நாகேஸ்வரராவ் மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் நடித்திருந்தார்கள்.
அந்தப்படம் போலவே இந்தப்படத்தில் தாத்தா, தந்தை, மகன் ஆகிய மூன்றுவேடங்களில் சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அப்படியில்லையாம். படத்தில் அவர் மூன்றுவேடங்களில் நடிப்பது உண்மை என்கிறார்கள்.
அந்தப்படம் போலவே இந்தப்படத்தில் தாத்தா, தந்தை, மகன் ஆகிய மூன்றுவேடங்களில் சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அப்படியில்லையாம். படத்தில் அவர் மூன்றுவேடங்களில் நடிப்பது உண்மை என்கிறார்கள்.
அண்ணன் தம்பி என இரண்டுவேடங்களிலும், அண்ணனுக்கு ஒரு மகன் உண்டு, அவரும் சூர்யாதான் என்று சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் மூன்றுவேடங்களில் அவர் நடிக்கிறாராம்.
இம்மூவரில் ஒருவர் வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானால் படத்தில் நாயகனும் அவர்தான் வில்லனும் அவர்தான் என்று சொல்கிறார்கள். சொல்லப்படுகிற இந்தக்கதை உண்மையானதா என்பதை அறிய சில வாரங்கள் பொறுத்திருக்கவேண்டும்.
No comments:
Post a Comment