சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Aug 2015

திருடர்களை பிடிக்க 'உசேன் போல்ட்' ஆன மதுரை ஆசிரியை!

நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய திருடர்களை விரட்டிச் சென்று பிடித்த ஆசிரியை, அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை எஸ்.கொடிக்குளத்தை சேர்ந்தவர் சுமதி (33). ஆசிரியையான இவர் கடந்த 14ஆம் தேதி சக ஆசிரியையுடன் தெற்குமாசிவீதி கடை ஒன்றில் ஜவுளி வாங்கிக்கொண்டு நேதாஜி சாலையில் இரவு 7.45 மணிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், சுமதியின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, சத்தம் போட்டவாறே அவர்களை பின்தொடர்ந்து ஓடியுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு வாகனங்களில் வந்தவர்கள் ஆங்காங்கே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் திருடர்கள் தப்பி செல்ல முடியாமல் திகைத்து நின்றனர். அப்போது, பின்னால் வேகமாக ஓடி வந்த ஆசிரியை சுமதி, வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 34 வயதுடைய திருடனை பிடித்து திடீர்நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவனது பெயர் பொதும்பு பிரபாகரன் என தெரியவந்தது. அவன் கொடுத்த தகவல்படி, கூட்டாளி விராட்டிபத்து ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, துணிச்சலாக செயல்பட்டு திருடர்களை பிடிக்க உதவிய ஆசிரியை சுமதியை மதுரை காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் பாராட்டி பரிசு வழங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சைலேஷ்குமார், "சுமதி போல் ஒவ்வொருவரும் தைரியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர் மற்ற பெண்களுக்கு ஒரு முன்உதாரணம்" என்றார்.


No comments:

Post a Comment