சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

சென்னையை விட்டு நடிகர் பார்த்திபன் வெளியேறியது ஏன்?

சென்னையை விட்டு வெளியேறி மரக்காணத்தில் குடியேறி விட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மய்யம்'. இந்த படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பார்த்திபன் பங்கேற்று பேசினார். அவர் கூறுகையில், " தற்போது சென்னையில் நான் வசிக்கவில்லை. நான் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  மரக்காணம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் வீடு கட்டி அங்கேயே வசிக்கிறேன்.

கிராமத்து சூழலில் பசுமையான மரங்களுக்கும் மத்தியில் வாழ்கிறேன். தற்போது நானும் மரம், செடி கொடிகளை அங்கு வளர்த்து வருகிறேன். அந்த கிராமத்தில் மனித மற்றும் விலங்கு கழிவுகள், குப்பைகளைக் கொண்டு உரம் தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள். 

அதுபோல் கூவம் ஆற்றில் உள்ள கழிவுகளை பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. கூவத்தில் உள்ள கழிவுகளை உரமாக பயன்படுத்துவதுகுறித்த ஒரு புதிய திட்டம் என்னிடம் உள்ளது. இயற்கை உரம் தேவைப்படுகிற அனைவரும்  இந்தமுறையை பின்பற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதனால் கூவத்தின் கழிவுகளும் குறையும், இயற்கை உரமும் ஆகும் என்றார்.No comments:

Post a Comment