இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை, எக்கோ உள்ளிட்ட ஐந்து ஒலிப்பதிவு கம்பெனிகள் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தான் இசையமைத்த பாடல்களை காப்புரிமை பெறாத ரெக்கார்டிங் கம்பெனிகள் பயன்படுத்த நிரந்தர தடை" விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். சர்வதேச சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளேன். லண்டனில் சிம்பொனி இசையமைத்த முதல் இந்தியர் என்ற பெயர் பெற்றுள்ளேன். இசைக்காக நான்கு தேசிய விருதுகளை வாங்கியுள்ளேன்.
நான் மெட்டு அமைத்த இந்த பாடல்களின் ஒலிபரப்பு விற்பனை உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் எனது அறியாமையை பயன்படுத்தி எக்கோ ரெக்கார்டிங், யுனிசிஸ், அகி மியூசிக் மற்றும் கிரி டிரேடிங் ஆகிய ஒலிநாடா மற்றும் இசைத்தட்டு தயாரிக்கும் கம்பெனிகள் எனது பாடல்களை பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றன.
காப்புரிமை பெற்ற பாடல்களையும், சில பாடல்களுக்கான காப்புரிமை காலம் காலாவதியான பின்னரும், இந்த கம்பெனிகள் எனது பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. எனவே, மேற்கண்ட ரெக்கார்டிங் கம்பெனிகள் எனது பாடல்களை ஒலிப்பதிவு செய்திட, பயன்படுத்திட தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, மனுதாரரின் குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், அவரது பாடல்களை பயன்படுத்த மேற்கண்ட ஐந்து ரெக்கார்டிங் கம்பெனிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ரெக்கார்டிங் கம்பெனிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், ரெக்கார்டிங் கம்பெனிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment