சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Aug 2015

தனுஷ் ஜோடி வித்யாபாலன்?

தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் துரைசெந்தில்குமாரின் படத்தில் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப்படத்துக்கான மற்ற நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் அவருக்கு இரட்டைவேடம் என்பதால் நாயகிகளும் இரண்டுபேர் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். இதில் அண்ணன் வேடத்தில் நடிக்கவிருக்கும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவைக்க இந்தியில் இருந்து ஏதாவதொரு நடிகையை அழைத்து வந்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.

தனுஷூக்கு இணையாக வித்யாபாலனை நடிக்கவைத்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்களாம். தனுஷூம் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டாராம். அதனால் வித்யாபாலனைத் தொடர்புகொள்ளும் திட்டத்தில் இருக்கிறார்களாம். 

வித்யாபாலன் ஒப்புக்கொண்டால் படத்துக்கு விளம்பரம் மட்டுமின்றி வியாபாரமும் பெரிதாகும் என்று நம்புகிறார்கள். படத்தை இந்தியிலும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்களோ என்னவோ?No comments:

Post a Comment