சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Aug 2015

கருணாநிதி கையில் திமுக இல்லை: யாரிடம் இருக்கிறது என கூறும் முல்லைவேந்தன்!

கருணாநிதி கையில் தி.மு.க. இல்லை. பெயர் அளவில் தான் அவர் தலைவராக உள்ளார் என்று முன்னாள் தி.மு.க. அமைச்சர் முல்லைவேந்தன் கூறி உள்ளார்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியில், கடந்த 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.முல்லைவேந்தன். இவர் 1996 ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டதால், இவர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.


கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை, அவர்களை உடனடியாக சஸ்பெண்டு செய்தது. அதற்கு, பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்ததால், அவர்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. ஆனால், முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அவர் விரைவில் அ.தி.மு.க.வுக்கு தாவுவார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் முல்லைவேந்தன், எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் அவர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் முல்லைவேந்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''உண்மையாக உழைப்பவர்களை தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. கருணாநிதி கையில் அந்த கட்சி இல்லை. பெயர் அளவில் தான் அவர் தலைவராக உள்ளார். மற்றதை எல்லாம் மு.க.ஸ்டாலின் தான் கவனித்து வருகிறார். மு.க.அழகிரி எனது வீட்டிற்கு வந்தார் என்பதற்காக அவரது ஆதரவாளர் என்று என்னை கூறினார்கள். விரைவில் நான் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் தே.மு.தி.க.வில் இணைய உள்ளேன். அதில் 90 சதவீதம் பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்" என்றார்.




No comments:

Post a Comment