மெரிக்காவில் தமிழ் தம்பதியினரின் 19 மாத குழந்தையை கொடூரமாக அடித்து கொன்ற குஜராத் பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சிவகுமார்- தேன்மொழி தம்பதி அமெரிக்காவில் கனெடிக்ட் மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு அத்தியன் என்ற 19 மாத குழந்தை இருந்தது. குழந்தையை கவனிக்க, குஜராத்தை சேர்ந்த கின்ஜால் படேல் என்ற பெண்ணை சிவகுமார் தம்பதியினர் வேலைக்கு வைத்திருந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை கீழே விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 3 நாட்கள் கழித்து குழந்தை இறந்து போனது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடல் முழுவதும் காயம் இருந்ததும், மண்டை உடைந்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். வேலைக்கார பெண் கின்ஜால் பாதுகாப்பில் குழந்தை இருந்ததால், அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கின்ஜால் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
குழந்தை அத்தியன் சாப்பிடாமல் அடம் பிடித்ததால், ஆத்திரத்தில் குழந்தையை அடித்து மாடிப்படியில் இருந்து தள்ளியதாகவும் பின்னர் தலையை பிடித்து சுவற்றில் மூன்று முறை மோதியதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் நேற்று நியூஹெவன் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கொலையாளி கின்ஜால் படேலுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பின், கின்ஜால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்.
ஏற்கனவே கின்ஜால், குழந்தை அத்தியனை ஒரு முறை அடித்து காயப்படுத்தியுள்ளார். அப்போதே அவரை வேலையை விட்டு நீக்கியிருந்தால், குழந்தை அத்தியன் உயிரிழந்திருக்காது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கின்ஜால் படேலை பாவம் பார்த்து சிவகுமார் தம்பதி வேலையை விட்டு நீக்காமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக சிவகுமார்- தேன்மொழி தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment