சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2015

“ஹேய்... நான் அவள் இல்லை!”

ல்லா படிச்ச, நல்ல வேலையில இருக்கிற, அமைதியான தங்கமான பொண்ணு எங்க பொண்ணு. அவளுக்கு அழகான, நல்ல வேலையில இருக்கிற சொக்கத் தங்கமான பையன் வேணும்’ என இந்துஜா பிள்ளையின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை தேட, அடுத்து இந்துஜா செய்தது... அதிரடி தடாலடி!   
பாலினம்: டாம்பாய், சம்பளம்: ஒரு ஆளுக்கு ஜாஸ்தியாகவே இருக்கிறது. சுற்றுலாவுக்கு எனச் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். 'நான் கல்யாணப் பொருள் அல்ல’, 'பெண்மை நிரம்பிய பெண் அல்ல’, 'அரை மணி நேரத்துகாவது சுவாரஸ்யமாகப் பேசக் கூடியவனாக இருக்கும் மணமகன் வேண்டும்’, 'இந்தத் தகுதிகளுக்காக என்னை உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் பெற்றோரிடமும் இதைச் சொல்லி அனுமதி வாங்கிவிட்டு என்னைத் தொடர்புகொள்ளுங்கள்...’ என்றெல்லாம் செம கலாயாகத் தன் கல்யாணத் தகுதிகளைக் குறிப்பிட்டு ஒரு வலைதளத்தை உருவாக்கிய இந்துஜா, இப்போது 'குபீர் வைரல் புகழில்’ திளைக்கிறார். 'என்னம்மா இப்படிப் பண்றியேம்மா?’ என இந்துஜாவிடம் விசாரித்தால், கபகபவெனச் சிரிக்கிறார்.
''சொந்த ஊர் சேலம். இப்போ பெங்களூருல வேலை. பிடிக்காமலே இன்ஜினீயரிங் படிச்சேன். பிடிச்சது ஊர் சுத்திப் பார்க்கிறது, போட்டோகிராபி,  பைக் ஓட்டுறது. வாழ்க்கையில லட்சியம்... இந்த உலகம் மொத்தத்தையும்  சுத்திப் பார்த்திரணும். அது நிறைவேற ஒண்ணு நான் தனியா இருக்கணும்; இல்ல என்னை மாதிரியே ரசனை, விருப்பம் உள்ளவரைக் கல்யாணம் பண்ணிக்கணும். அதான் அப்பிடி ஒரு ஐடியா பிடிச்சேன்.''
''அதுக்காக சும்மா இப்படிப் பரபரப்பு கிளப்புவீங்களா?''
''சத்தியமா நம்புங்க... பரபரப்புக்காக நான் அப்படிப் பண்ணலை. அது நிஜம். எனக்கு 24 வயசு ஆகிருச்சு. சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாரும் 'எப்போ கல்யாணம்?’னு விசாரிக்கிறாங்க. அதான் அப்பா, அம்மா என்னைக் கேட்காமலேயே மேட்ரிமோனி சைட்ல என்னைப் பத்தின விவரத்தை அப்லோடு பண்ணிட்டாங்க. அதுல நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் அது இதுனு வேற நிறைய உடான்ஸ். அதான் அந்தக் கோபத்துல, 'இருங்க என்னைப் பத்தி உண்மையான விவரங்களை நானே சொல்றேன்’னு அந்த சைட் ஆரம்பிச்சேன்.''

''இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் வந்திருக்கு?''  
''100 பேராச்சும் ஆர்வத்தோடு விசாரிச்சிருப்பாங்க. சிலர் அவங்க டூர் போன போட்டோஸ் அனுப்பிவெச்சாங்க. ஆனா, சும்மா ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுன்ட் பார்த்து கல்யாணம் பண்ணிக்க முடியாதுல்ல. எப்போ பார்த்தாலும் எல்லாரும் கல்யாணம் பத்தியே கேட்டுட்டு இருக்காங்களே... இனி யாரும் அதை ஞாபகப்படுத்தக் கூடாதுனுதான் அப்படிப் பண்ணேன். ஆனா, இப்போ தினமும் கல்யாணத்தைப் பத்தி யாராவது எனக்கு ஞாபகப்படுத்திட்டே இருக்காங்க. எனக்கு என்னவோ இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் கல்யாணம் நடக்கும்னு நினைக்கிறேன்!''
''சரி... உங்க நிபந்தனைகளுக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் கிடைக்கிறார்னே வெச்சுக்குவோம். கல்யாணத்துக்குப் பிறகு ஒருவேளை அவர் தன் இயல்பு மாறிட்டா?''
''அப்படி நடக்காது. நான் 'எனக்காக இப்படி  மாறுங்க’னு சொல்லலையே. இதே மாதிரி தேடலோடு இருக்கிற ஒருத்தர் வேணும்னுதான் சொல்றேன். ஒருவேளை கல்யாணத்துக்குப் பிறகு நானே மாறினாகூட, அவர் என்னை மாறவிடக் கூடாது. அப்படி ஒரு ஆளைத்தான் தேடிட்டு இருக்கேன்.''  
''அம்மா-அப்பா, அலுவலக நண்பர்கள் இந்த முயற்சிக்கு என்ன சொன்னாங்க?''
''நான் இப்படித்தான் ஏதாவது பண்ணுவேன்னு அம்மா-அப்பா எதிர்பார்த்துட்டு இருந்தாங்கபோல. அதனால கண்டுக்கலை. ஃப்ரெண்ட்ஸ் 'ரொம்ப காமெடியா இருக்கு’னு சொன்னாங்க. செய்தி பரபரப்பாகி என்.டி டி.வி-ல இருந்து என்னைப் பேட்டியெடுக்க ரவிஷ் குமார்னு  பிரபல ஜர்னலிஸ்ட் வந்திருந்தார். என் ஆபீஸ்ல பலரும் அவருக்கு ஃபேன்ஸ். அவரே என்னைப் பேட்டி எடுக்க வந்ததைப் பார்த்து எல்லாருக்கும் செம ஷாக்.''
''ஒருவேளை நீங்க எதிர்பார்க்கும் குணங்களோடு ஒருத்தர் கிடைக்கலைன்னா?''
''தனியாவே இருக்கவேண்டியதுதான். ஆறு மாசம் வேலை பார்த்துட்டு, மூணு மாசம் ஊர் சுத்திட்டு, மூணு மாசம் அம்மா கையில சாப்பிட்டு... அப்படியே இருந்துர வேண்டியதுதான்!''
'''லிவிங் டுகெதர்’ பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
''ஹைய்யோ... நான் அவ்வளவு அல்ட்ரா மாடர்ன் பொண்ணு கிடையாது. ஆளை விடுங்க!'No comments:

Post a Comment