சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Aug 2015

நிர்வாக மாற்றத்துடன் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல்.லில் தொடரும்?

டை விதிக்கப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகத்தை மாற்றிவிட்டு,  ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூதாட்ட விவகாராத்தால் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கத் தடை விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டது. இந்த அணிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ஐ.பி.எல். அமைத்துள்ள குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

ஐ.பி.எல். தொடரை பொறுத்த வரை சென்னை, ராஜஸ்தான் அணிகள் முக்கிய இடம் வகிப்பவை. இந்த அணிகள் தொடரில் இடம் பெறாவிட்டால் ஐ.பி.எல். தொடரின் மவுசு பாதிக்கப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகக் குழு கருதுகிறது. 

எனவே இந்த இரு அணிகளின் நிர்வாகத்தை மட்டும் மாற்றி விட்டு, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரில்  வருகிற 28ஆம் தேதி பி.சி.சி.ஐ. செயற்பாட்டுக்குழு கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது. 



No comments:

Post a Comment