சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Aug 2015

சிறைக்கு அனுப்பிவைத்த செல்ஃபி மோகம்!

டந்த சில வருடங்களில் இளைஞர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல் ‘செல்ஃபி’ யாகதான் இருக்கும். நின்றால் செல்ஃபி, நடந்தால் செல்ஃபி, பல் விளக்கினால் செல்ஃபி என செல்ஃபி மோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர் இளசுகள். 

நம் பிரதமர் மோடியும் கூட, நாடுவிட்டு நாடு போகும்போது கடைசியில் அந்நாட்டு அதிபர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட பின்னர்தான் விமானம் பிடிக்கிறார் சொந்த ஊருக்கு. அந்தளவுக்கு செல்பி மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்தோடு விட்டார்களா? அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி பல பேரை பாடாய் படுத்தினார்கள்.
‘ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி’ என இப்போதெல்லாம் பல பேர்  நினைத்துப் பார்க்க முடியாத இடங்களுக்கு எல்லாம் பயணப்பட்டு, ஏன் உயிரையும் இழந்து ’செல்ஃபி புள்ள’ என மார் தட்டுகிறார்கள். (விட்டா, ’ஆவிகள் உலகத்தில் பரவச பயணம்’-னு கூட செல்ஃபி தட்டுவாங்க, யார் கண்டது?) 


காரை ஓட்டும் போது செல்ஃபி, உயரமான கட்டடத்தில் செல்ஃபி என விதவிதமாக வித்தை காட்டும் செல்ஃபி பிரியர்களின் அடுத்த கட்ட நகர்வு, அதிர்ச்சியாக உள்ளது. 

இந்த அதிர்ச்சிக்கு காரணம், ரஷ்யாவில் ஒரு பிரபல இணைய தளம் வெளியிட்ட போட்டி அறிவிப்புதான். ‘மாயம் இல்லை, மந்திரம் இல்லை, சூப்பர் செல்ஃபிக்கு, 5 ஆயிரம் ரூபா பரிசு தொகை’ என்று செல்ஃபி எடுப்பவர்களை ஊக்குவிக்க(?) வெளியான அறிவிப்பு, இளைஞர்களை சுறுசுறுப்பாக்கிவிட்டது.
’இறந்தவர்களுடன் செல்ஃபி’. ‘அய்யய்யோ…’ என நாம் தான் பதறுகிறோம். ஆனால், அங்கு போட்டி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ‘த்தோ, வந்துட்டோம்ல!(?)’ என பலர் களத்தில் இறங்கி அதகளப்படுத்தியுள்ளனர்.

இறந்தவர்களுடன் செல்ஃபி எடுக்கிறோமே என துக்கப்படாமல், துயரப்படாமல் இறந்த தங்களது தாத்தா, மாமா என ரவுண்டு கட்டி கலக்கியுள்ளனர் செல்ஃபியாளர்கள். 

இதில் பரிசு தட்டிச் சென்றவரது செல்ஃபி பின்னணியைக் கேட்டால் மனம் பதறுகிறது. 13 வயது சிறுமி ஒருவர் விபத்தில் இறந்து விட்டார். அந்த சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் அந்த இளைஞர் செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் அந்த இளைஞரால் தான் பரிசு பெற்ற மகிழ்ச்சியை யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியவில்லை.
காரணம் அவர் செல்ஃபி எடுத்ததை இறந்த சிறுமியின் பெற்றோர் எதிர்பாராத விதமாக பார்த்துவிட , அவர் மீது வழக்கு பதிந்து உள்ளனர். இப்போது செல்பி புள்ள சிறைக்காவலில்.
விசாரணையின்போது போலீஸ்காரருடன் அவர் செல்ஃபி எடுக்காமல் இருக்கவேண்டும்.



No comments:

Post a Comment