தாயின் மருத்துவச் செலவுக்காக ரூ.5 லட்சத்தை திருடிய மாணவர், தாயார் மரணமடைந்ததால், அந்த பணத்தை திருடியவரிடமே திரும்ப ஒப்படைத்த சம்பவம் புதுக்கோட்டை அருகே நடந்துள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர். இவரது மனைவி கார்த்திகாயினி. இவரும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இவர்கள் இருவரும் வங்கிக்கு சென்று ரூ..5லட்சம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். அந்த சமயத்தில் ராஜமாணிக்கம் வீட்டுக்கு வந்த இளைஞர் ஒருவர் குடிக்க குடிநீர் கேட்டுள்ளார்.
பணப்பையைஹாலில் வைத்து விட்டு கார்த்திகாயினி வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வர சென்றுள்ளார். அதற்குள் அந்த பணப்பையை எடுத்து கொண்டு இளைஞர் மாயமாகி விட்டார். இது குறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று கார்த்திகாயினி வீட்டுக்கு இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் தனது கையில் வைத்திருந்த பணம் 4 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு, செலவழித்த பணம் 49 ஆயிரத்துக்காக தனது மோட்டார் சைக்கிளை வைத்து கொள்ளுமாறு கூறி கெஞ்சியுள்ளார். இது குறித்த தகவல் போலீ£சருக்கு கிடைத்தது.
போலீசார் விசாரணையில் பணத்தை திருடியவரின் பெயர் மன்சூர் என்றும் திருச்சி அருகே தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரது மருத்துவச் செலவுக்காக பணத்தை திருடியதாகவும் மன்சூர் விசாரணையில் கூறியிருக்கிறார்.
ஆனால் மன்சூர் பணத்தை திருடிய அடுத்த நாளே அதாவது கடந்த 25ஆம் தேதி அவரது தாயார் இறந்து போய் விட்டார். இதனால் திருடிய பணத்தை வைத்திருக்க மன்சூருக்கு மனமில்லாமல் திருப்பி கொடுத்துள்ளார்.
எனினும் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment