பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறதாம். இந்தப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
முதலில் இந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் வெளியிடுவதாகச் சொல்லப்பட்டது. அதன்பின் இப்படவெளியீட்டிலிருந்து அந்நிறுவனம் விலகிக்கொண்டது. திருப்பதிபிரதர்ஸ் நிறுவனமே படத்தை வெளியிடும் என்று சொன்னார்கள். இப்போது படம் கைமாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படம் வெளியிடும் உரிமையைப் பெற வேந்தர்மூவிஸ் முன்வந்திருக்கிறது. எனவே அவர்களுக்குப் படத்தைக் கொடுப்பதென லிங்குசாமி தரப்பு முடிவு செய்துவிட்டதாம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் வெளியில் சொல்வார்களாம். விரைவில் அது நடக்கும் என்றும் அதன்பின் சரியான வெளியீட்டுத்தேதி பார்த்து படத்தை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment