சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Aug 2015

ஜாமீனில் வந்த 3 பேரும் படுகொலை: ஒருவரின் தலையை துண்டித்து எடுத்து சென்ற கும்பல்!

கோவையில் 3 பேரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஜாமீனில் வந்த 3 பேரை அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறியுடன் சரமாரியாக வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூரை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மணிகண்டன், வடமலை அய்யப்பன், ராமராஜ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜாமீனில் விடுதலையான அவர்கள் 4 பேரும் நேற்று ஒரு காரில் கோவையில் இருந்து கடலூர் புறப்பட்டனர். காரை தஞ்சையைச் சேர்ந்த ரவி (43) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, அந்த காருக்கு பின்னால் 5 மோட்டார் சைக்கிள்களும், ஒரு காரிலும் சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். கோவையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் இருகூர் பிரிவு எல் அண்டு டி பைபாசில் மணிகண்டன் இருந்த கார் மீது மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு காரை நிறுத்தி உள்ளது. இதில் காரை ஓட்டி வந்த ரவி மீது 2 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் அவர் காரில் இருந்து ரோட்டில் விழுந்துள்ளார்.
இதை தொடர்ந்து நடக்கப்போகும் விபரீதத்தை அறிந்த மற்றவர்கள், காரில் இருந்து இறங்கி ஓட முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 14 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை சரமாரியாக வெட்டியது. இதில் காரின் பின் பக்கம் இருந்த வடமலை அய்யப்பன், ராமராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் பலத்த வெட்டு காயம் விழுந்து சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர்.


இதையடுத்து, கொல்லப்பட்ட ஒருவரின் தலையை துண்டாக வெட்டி எடுத்து கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது. அப்போது, இந்த சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்திருக்கின்றனர். ஆனால், மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியபடியே மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டு கூச்சலிட்டபடி கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளது.
இந்த தாக்குதலில் மணிகண்டன் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். மேலும், கார் ஓட்டுனர் ரவி படுகாயங்களுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முன்விரோதம் காரணமாக, மணிகண்டன் என்பவரை குறிவைத்து இந்த கொலை சம்பவம் நடந்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படுகொலை சம்பவத்தை தொடர்ந்து, 3 பேரின் சொந்த ஊரான கும்பகோணத்தில் உள்ள திருவிடைமருதூரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய மற்ற குற்றவாளிகளை பிடிக்க 6 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.No comments:

Post a Comment