சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

அஜித் செய்வது நியாயமா?

ஒரு சாதாரண வேலை செய்யும் இடத்திலேயே உடன் வேலை செய்யும் நண்பரின் திருமணம் எனில் அலுவலகம் முழுவதும் விடுமுறை எடுத்துக்கொண்டோ, அல்லது அரை நாள் விடுப்பிலோ கண்டிப்பாக அந்தத் திருமணத்தில் கலந்துகொள்வோம். 
நமக்கு திரும்ப மொய் வரும், அன்பளிப்பு வரும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம், முதலில் மனிதர்கள் வரவேண்டும்,. நமக்கும் நாலு மனிதர்கள் வேண்டும் என்பதே. ஆனால் திரையுலகின் ஜாம்பவான்களில் முக்கியஸ்தரான அஜித்தோ. திரைப்படவிழாக்கள் எதிலும் கலந்துகொள்ளமாட்டார் என்பது மட்டுமல்ல அவரது பட விழாக்களில்கூட கலந்து கொள்ளமாட்டார். இது தொழில் சார்ந்து அவர் எடுத்திருக்கும் முடிவு.
ஆனால் ஒரு தொழில் ரீதியான நண்பர்கள் திருமணம், சினிமா சார்ந்த பொதுவான முக்கிய விழாக்களில் கூட கலந்துகொள்ளாது இருப்பது நியாயமா. திருமணம் போன்ற சந்தோஷ தருணங்கள் மட்டுமின்றி , எம்.எஸ்.வியின் மறைவு, பாலசந்தரின் மறைவு  போன்ற துக்க நிகழ்வுகளைக் கூட தவிர்ப்பது என்ன நியாயம்? நாங்கலெல்லாம் ஒரே குடும்பம் என பல நடிகர்கள் சொல்லி வரும் வேளையில் அஜித் எதிலும் கலந்துகொள்ளாமல் இருக்கிறார். 

இப்படிப்பட்ட தருணங்களில் அஜித் ரசிகர்கள் அஜித் அந்த குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டதாக பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து சர்ச்சையை உருவாக்கி விடுகிறார்கள். சரிதான் தனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருக்காக எதையும் செய்யத் துணியும் ரசிகர்கள் தன் விருப்ப நடிகரை யாரும் தவறாக பேசி விடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்வது பிரச்னையில் முடிந்துவிடுகிறது.
ரசிகர்களுக்கே தன் நடிகரைப் பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது என்னும் எண்ணம் இருக்கையில், தன்னைப் பற்றி யாரும் தவறாக எண்ணக் கூடாது என்ற எண்ணம் ஏன் அஜித்துக்கு இல்லை. இதில் விஜய்க்கு ஆதரவு, அஜித்துக்கு ஆதரவு என்று இங்கே எதுவும் இல்லை. 
சில விஷயங்களில் அஜித் தனது கட்டுப்பாடுகளைத் தவிர்த்தால் நன்று. பாக்கியராஜின் மகன் சாந்தனு திருமணத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற மொழி சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். சென்னையில் அஜித் இருந்தும் அவர் கலந்துகொள்ளாதது அனைவருக்கும் ஏமாற்றமே. 
No comments:

Post a Comment