சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Aug 2015

மாமன்னர் ராஜேந்திரச் சோழனின் சாதனைகள்: பள்ளிகளில் கொண்டாட மத்திய அமைச்சகம் உத்தரவு!

டாரம் கெண்டான் என்றும், கங்கை கொண்டான் என்றும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட மாமன்னன் ராஜேந்திரச் சோழன் பதவியேற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
கி.பி. 1014ஆம் ஆண்டு,  ராஜ ராஜ சோழனுக்கு பிறகு அரியணையில் அமர்ந்த ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில், தமிழகம் உன்னத நிலையை அடைந்தது. இவரது ஆட்சி காலத்தில் தென்னாடு முழுவதும் ராஜேந்திர சோழனின் கட்டுப்பாட்டில் இருந்தது. 


கங்கை வரை சென்று பல போர்களை நடத்தி வெற்றி கண்டு, கங்கை நீரை கொண்டு வந்து, கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, வரலாற்றில் இடம் பெற்றவர் ராஜேந்திரச் சோழன். 'யுனெஸ்கோ' பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கங்கை கொண்ட சோழேச்ரம் கோயிலும்  ராஜேந்திரச் சோழன் ஆட்சி காலத்தில்  கட்டப்பட்டதுதான். இதனாலேயே கங்கை கொண்டான் என்ற சிறப்பு பெயரும் அவருக்கு உண்டு. 

இவரது ஆட்சி காலத்தில் வர்த்தகம், கட்டடக்கலை ,சிற்பக்கலை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறந்து விளங்கியது. இலங்கை, மியான்மர், இந்தோனேஷியா, மலேசியா, லாவோஸ், கம்போடியா நாடுகள் வரை சோழரின் புலிக் கொடி ராஜேந்திர சோழன் காலத்தில் பறந்தது. அந்த காலத்திலேயே ராஜேந்திர சோழனின் ராணுவத்தில் 10 லட்சம் வீரர்கள் இருந்ததாகவும், மிகவும் வலிமையான கப்பற்படை இருந்தாகவும் வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.
இத்தகைய பெருமை வாய்ந்த ராஜேந்திர சோழனின் வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார்  பள்ளிகளில் ராஜேந்திரச் சோழன் பதவியேற்று ஆயிரமாவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில், காலை அசெம்பிளியின் போது,  ராஜேந்திர சோழன் பற்றிய வரலாறு, அவரது சாதனைகளை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்படியும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 



No comments:

Post a Comment