சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

கல்விக் கடனுக்கான சிறப்பு இணையதளம்!

இந்திய வங்கிகளின் கல்விக் கடன் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்ட பிரத்யேக இணைய தளத்தை மத்திய அரசு துவக்கி வைத்துள்ளது. இந்த இணையதளத்திற்கு 'வித்யாலக்ஷமி.கோ. இன்' (https://www.vidyalakshmi.co.in/Students/) என பெயரிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இத்தளத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா உட்பட சில வங்கிகளின் தகவல் இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக அனைத்துப் பொதுத் துறை வங்கிகளையும் இதனுள் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின் தனியார் வங்கிகளும், இந்த தளத்தில் இணைக்கப்பட உள்ளது.

இந்த தளம், கல்விக்கடன்  குறித்த தகவல்களைச் சேகரிக்க முடியாமல் தவிக்கும் கிராம மற்றும் நகரப்புற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு அதிகளவில் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய இளைஞர்களுக்குச் சிறந்த கல்வியைக் கொண்டு சேர்க்கும் விதமாக மத்திய அரசு துவங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இணையதளத்தில், மத்திய அரசின் Pradhan Mantri Vidya Lakshmi Karyakram (PMVLK) திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவித்தொகை குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தளத்தில் கல்விக் கடன் குறித்த புகார்களையும் பதிவு செய்யலாம் . மேலும் யார்  யார் கல்விக் கடன் பெற தகுதியுடயைவர்கள், எந்தெந்த படிப்பிற்கு கல்விக்கடன் பெறலாம் என்பது போன்ற அடிப்படை விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது



No comments:

Post a Comment