பெற்ற மகளையே கொலை செய்த வழக்கில் கைதான இந்திராணி 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றி வாழ்க்கை நடத்தியது தெரிய வந்துள்ளது.
‘ஸ்டார் இந்தியா’ தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி பெற்ற மகளையே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற என்ஜீனியரின் மகள்.
பெற்ற மகள் ஷீனா போராவை, கணவரிடம் மற்றவர்களிடமும் தங்கை என்றும் மகன் மிக்கேலை தம்பி என்றும் அறிமுகம் செய்து 3வதாக பீட்டர் முகர்ஜியை இந்திராணி திருமணம் செய்துள்ளார். முதல் கணவரான சித்தார்த்தாசுக்கும் இந்திராணிக்கும்தான் ஷீனா போராவும், மிக்கேல் என்ற மகனும் பிறந்துள்ளனர். இதில் ஷீனா போராவைத்தான் இந்திராணி கொலை செய்து காட்டில் வீசியுள்ளார்.
முதல் கணவரான சித்தார்தாசிடம் இருந்து விவாகரத்து பெற்ற இந்திராணி, கொல்கத்தாவை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சீவ் கண்ணாவை அடுத்ததாக மணம் முடித்தார். இந்த திருமணத்தின் வழியாக இந்திராணிக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு பின் மும்பையில் குடியேறிய இந்திராணி, முதல் இரு திருமணங்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதை மறைத்து , தொலைக்காட்சி நடத்தி வந்த பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தார்.

பீட்டர் முகர்ஜி ஏற்கனவே சப்னம் என்பரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ராகுல், ராபின் என இரு மகன்கள் இருந்தனர். இதில் ராகுலுக்கும், ஷீனா போராவுக்கும் இடையே காதல் மலர்ந்ததால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. உறவு முறையில் அவர்கள் அண்ணன்- தங்கை ஆவர். அவர்களது காதல் இந்திராணிக்கு கடும் ஆத்திரத்தை தந்தது. தாய் சொல்லை மீறிய ஷீனா போரா, ராகுலுடன் தனி வீட்டில் வசிக்க தொடங்கினார். என்னை இடையூறு செய்தால், நான்தான் உனது மகள் என்பதை பீட்டர் முகர்ஜியிடம் சொல்லி விடுவேன் என்றும் தாயாரை ஷீனா போரா மிரட்டினார்.
இந்த பிரச்னை தொடர்பாக தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கண்ணாவுடன் இந்திராணி பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கொலை செய்து விடலாம் என்று இருவரும் திட்டமிட்டுள்ளனர். பாந்திரா நேஷனல் கல்லூரி அருகில் காருக்குள் வைத்து ஷீனா போராவை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். கொலைக்கு சஞ்சீவ் கண்ணாவும், டிரைவர் ஷாம் மனோகர் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். பின்னர் ராய்காட் காட்டுப்பகுதியில் ஷீனாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இது தொடர்பாக இந்திராணி உள்ளிட்ட 3 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திராணியின் மகன் மிக்கேல் தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியில் தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

'' எனது அக்காவுக்கு 2 வயதாகும் இருக்கும் போதே தாயார் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். அப்போது நான் 3 மாத குழந்தையாக இருந்தேன்.தாத்தா-பாட்டிதான் எங்களை வளர்த்து வந்தனர். எனினும் தாய் இந்திராணிதான் எங்களை படிக்க வைத்தார். மும்பையில் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் இதனால்தான் என்னை தம்பி என்றும் அக்காவை தங்கை என்றும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். அவர்தான் எங்களுக்கு பணமும்,படிக்கவும் உதவி செய்து வந்தார். இதனால் அவரது திட்டத்திற்கு நாங்களும் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அக்கா பற்றி கேட்ட போது அமெரிக்கா போய் விட்டதாக என்னிடம் கூறினார். நான்தான் தற்போது தாத்தா பாட்டியை கவனித்து வருகிறேன்''
ஷீனாவுக்கும் ராகுலுக்குமிடையே மலர்ந்த காதல் குறித்து பீட்டர்முகர்ஜி (தாயாரின் 3-வது கணவர்) என்னிடம் கூறினார். உடனே நான் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்றேன். ஷீனாவை கடந்த 2012-ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன். அப்போது அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். எனது தாயார் பற்றிய ஆதாரங்களை போலீசில் கொடுப்பேன்'' என்றார்.

No comments:
Post a Comment