சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் : இடுப்பு வலி சிறுத்தையின் வேகத்தை குறைக்கவில்லை !

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர்  உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார். 

கடந்த சில மாதங்களாக உசேன் போல்ட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் 100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிகளுக்குள் அவர் கடந்து விடுவாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இதனால் ஜஸ்டின் காட்லீன் தங்கம் வெல்ல வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. ஆனால் உசேன் போல்ட் தீவிர பயிற்சியின் பலனாக 100 மீட்டர் பந்தயத்தை 9.79 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை மீண்டும் கைப்பற்றினார். 


இந்த போட்டியில் அமெரிக்க வீரர்  ஜஸ்டின் காட்லீன்  9.80 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும் ட்ரேவான் பிரம்மால்,ஆன்ட்ரே டி கிராஸ்சஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். No comments:

Post a Comment