சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Aug 2015

சிறந்த நடிகையாக பெயர் வாங்கணும்: சொல்கிறார் த்ரிஷா

சினிமாவில் 10 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கும் நான், ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே நீடிக்க விருப்புகிறேன் என்றும், சிறந்த நடிகை என்று பெயர் வாங்கவும் விரும்புகிறேன் என்றும் நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

‘அரண்மனை 2ம் பாகம்’ பேய் படத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் நடிகை த்ரிஷா, இந்த படத்தின் தொடக்க விழா நேற்று வடபழனியில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட த்ரிஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விக்கும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:

திகில் படத்தில் மீண்டும் நடிக்கிறீர்களே?

எனது மானேஜர் கிரிதர் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே என்னை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். அப்புறம் பார்க்கலாம் என்றேன். இப்போது அதற்கான நேரம் அமைந்துள்ளது. இயக்குனர் கோவி ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் நான் இருந்தபோது என்னை சந்தித்து நாயகி படத்தின் கதையை சொன்னார். கதை கேட்ட 5வது நிமிடத்திலேயே பிடித்துப்போனது. நடிக்க சம்மதித்தேன். இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் என் சொந்த குரலில் ஒருபாடலையும் பாடுகிறேன்.

‘நாயகி’ படத்துக்கான போஸ்டரில் கையில் கத்தியும், ரத்தமுமாக இருக்கிறீர்கள். உங்களை வசீகர அழகியாக பார்த்த ரசிகர்கள். இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வார்களா?


நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். இதில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறேன். இதற்கு முன் இதுபோல் நடித்தது இல்லை.

10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். கனவுக்கன்னியாகவே நீடிக்க விரும்புகிறீர்களா?, அல்லது சிறந்த நடிகை என்று பெயர் வாங்க விரும்புகிறீர்களா?

கனவுக்கன்னியாகவே நீடிக்க விரும்புகிறேன். சிறந்த நடிகை என்று பெயர் வாங்கவும் விரும்புகிறேன்.

நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போடுவீர்கள்?

யாருக்கு ஓட்டுப்போடுவேன் என்பதை சொல்ல முடியாது. ஆனால், கண்டிப்பாக ஓட்டுப்போடுவேன் என்று கூறினார்.No comments:

Post a Comment