சென்னை திருவேற்காட்டில் தனது கணவரை 2-வது திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையை நடத்திய கல்லூரி பேராசிரியையை ஒருவரை மனைவி தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரின் மனைவி ராஜலட்சுமி(வயது 33), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அதேபோல் திருவேற்காடு பகுதியை சேர்ந்த சாம்பசிவராவ் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுருதி என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். சம்பசிவாராவும் ராஜலட்சுமியும் நண்பர்கள்.
கடந்த திங்கட்கிழமை ராஜலட்சுமிக்கும் அவரது கணவர் சுரேசுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ராஜலட்சுமி, நண்பரான சாம்பசிவராவ் வீட்டிற்கு வந்து தங்கினார். நேற்று முன்தினம் சாம்பசிவராவ் வேலைக்கு சென்று விட்ட நிலையில், ராஜலட்சுமி குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கி கிடப்பதாக சுருதி சத்தம் போட்டார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ராஜலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜலட்சுமியின் இறப்பு குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்துபோன ராஜலட்சுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ராஜலட்சுமியின் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன. கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளமும் காணப்பட்டது.
பொறி தட்டிய போலீசார் சுருதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் வந்தது. இதனால் சுருதி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதற்கிடையே ராஜலட்சுமி பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பலமாக தாக்கப்பட்டும், கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுருதியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது தனது கணவர் ராஜலட்சுமியை 2வதாக திருமணம் செய்து வீட்டிற்கே அழைத்து வந்ததால் அவரை கொலை செய்ததாக சுருதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேராசிரியரின் மனைவி சுருதி போலீசாரிடம் கூறிய வாக்குமூலம் வருமாறு:-
எனது கணவர் சாம்பசிவராவ் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். சந்தோஷமாக சென்ற எங்களது வாழ்க்கையில் இடையில் புகுந்த ராஜலட்சுமியால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த ராஜலட்சுமி, எனது கணவர் வேலைபார்க்கும் அதே கல்லூரியில் தான் முதலில் வேலைபார்த்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே உறவு இருந்துள்ளது.
பின்னர் ராஜலட்சுமி தனது உறவினரான சுரேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். தொடர்ந்து சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிக்கு சேர்ந்தார். ஆனால் எனது கணவருக்கும், அவருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பை அவர் கைவிடவில்லை. இந்த விவகாரம் சுரேசுக்கு தெரிந்ததால், அவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் எனது கணவர் சாம்பசிவராவ், ராஜலட்சுமியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு ராஜலட்சுமியை வீட்டிற்கு அழைத்துவந்த சாம்பசிவராவ் என்னிடம், ‘உன்னுடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. இவளுடன் தான் இனி வாழப்போகிறேன். நீ என்னை விட்டு ஒதுங்கிவிடு அல்லது விவாகரத்து பெற்றுக்கொண்டு என்னை விட்டு சென்றுவிடு’ என்று கூறினார்.
ஒரே வீட்டில் என்னுடனும், சுருதியுடனும் சாம்பசிவராவ் குடும்பம் நடத்தியதால், எனது வாழ்க்கையை பங்குபோட வந்த ராஜலட்சுமி மீது தீராத கோபம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சாம்பசிவராவ் வேலைக்கு சென்றவுடன் எனக்கும் ராஜலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் குளியலறைக்கு சென்ற ராஜலட்சுமியை பின் தொடர்ந்து சென்று சரமாரியாக தாக்கினேன். ராஜலட்சுமி கீழே விழுந்தார்.ஆத்திரம் தீராத நான் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கினேன். இதில் மூச்சுத்திணறி ராஜலட்சுமி இறந்துபோனார்'' என்று தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர்.
No comments:
Post a Comment