சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Aug 2015

மின்னல்வேகத்தில் 8 ஆயிரம் ரன்களை கடந்த டி வில்லியர்ஸ் :கங்குலி சாதனை தகர்ப்பு

ர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் மிக விரைவாக 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.

தென்ஆப்ரிக்க அணி நியூசிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரு அணிகளுக்கிடையே 3வது ஒருநாள் போட்டி, டர்பனில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. இதில் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் 48 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். இதில் 8 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். 

மேலும் இதன் மூலம் சர்வதேச அரங்கில் 8 ஆயிரம் ரன்களையும் டி வில்லியர்ஸ் கடந்தார். 190 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள,  டி வில்லியர்ஸ் இதுவரை 8 ஆயிரத்து 45 ரன்களை எட்டியுள்ளார். இதனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் டி வில்லியர்ஸ் பெற்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 200 இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்களில் கடந்தே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஏபிடி நேற்று முறியடித்தார்



No comments:

Post a Comment