சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Aug 2015

ஈவ் டீஸிங் ஆசாமியிடம் சண்டையிட்ட துணிச்சல் பெண்; டெல்லி போலீஸ் பாராட்டு!

ந்திய  நாட்டின் தலைநகரமாக விளங்கும் ’புதுடெல்லி’ நகரின் பெயரை எடுத்தாலே, பெண்களும், பெண்கள் மீது அக்கறை கொண்டவர்களும் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போகும் அளவிற்கு, சில மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நம் மனக்கண் முன் நிழலாடும். 

நாடு முழுவதும், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துக் குரலெழுந்த போதிலும் நிலைமையில் பெரிய  மாற்றம் இல்லை. இன்னமும் பாலியல் சீண்டல்களும், வன்முறைகளும் தொடரத்தான் செய்கின்றன டெல்லியில். அதே சமயம் நடக்கும் கொடுமையை சகித்துக்கொண்டு போகாமல், தைரியமாக தட்டிக்கேட்டு, சம்பந்தப்பட்ட கயவர்களை காவல்துறையில் பிடித்துக் கொடுக்கிற  துணிச்சலான பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அப்படியான ஒரு பெண்தான் டெல்லியைச் சேர்ந்த ஜஸ்லீன் கௌர்.
நேற்று மாலை 8 மணி அளவில், டெல்லி திலக் நகர் அருகிலுள்ள, சாலையில் நின்று கொண்டிருக்கையில், அங்கு ‘ராயல் என்ஃபீல்டு டி.எல். 4.எஸ். சி.இ. 3623’ வண்டியில் வந்த ஒரு நபர், கெளரை பார்த்து  ஆபாசமான சொற்களை பிரயோகித்திருக்கிறார்.
முதலில்  பயந்து, அதிர்ந்தபோதிலும், தன்னம்பிக்கையையும், துணிவையும் வரவழைத்துக்கொண்ட ஜஸ்லீன், அவனது செயலை தட்டிக்கேட்டபடி, தன் அலைபேசியில் அந்த நபரின் நடவடிக்கைகளைப் பதிவு செய்யத் தொடங்கி இருக்கிறார்.

 ஆனாலும் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் அந்த நபர், தொடர்ந்து, ஜஸ்லீனை ஈவ் டீஸிங் செய்திருக்கிறார். அப்போது கௌர், இந்தக் காணொளியைப் போலீஸில் கொடுத்துப்,  புகார் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட அந்த நபர், அவரை தகாத சொற்களால் திட்டியதோடு அல்லாமல், ‘போலீஸில் சொல்லிப்பார்.. அப்புறம் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வாய்!"  என்று மிரட்டியுள்ளார்’

 ஆனாலும் பயந்துவிடாத ஜஸ்லீன், அந்த வீடியோவை உடனடியாக தனது ஃபேஸ்புக் தளத்தில் பதவிட்டதோடு, அன்றே ‘திலக் நகர்’ காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்திருக்கிறார். இவரின் மன தைரியத்தைப் பாராட்டி காவல் துறை இவருக்கு 5000 ரூபாய் சன்மானம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஜஸ்லீனை ஈவ்டீசிங் செய்த நபரை டெல்லி போலீசார் இன்று மாலை கைது செய்தனர். 

இது குறித்துப் பேசிய ஜஸ்லீன் “பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள மற்றவரை நாடும் முன், தாங்களே போராட வேண்டும்; எனக்கு இந்த சம்பவம் நேர்கையில், சுற்றி 20க்கும் மேற்பட்டோர் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். இன்னமும் என் பாதுகாப்பு, கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது, இருந்த போதிலும், நான் பயந்து முடங்கி விட்டால் அது என் தோல்வியாகும். என் தோல்வி மட்டுமல்ல; கொடுமை வென்று, பெண்மைத் தோல்வி அடைந்ததாக அர்த்தமாகி விடும். எனவேதான் உடனடியாக இதை உலகுக்குக் கொண்டு சென்றேன்” என்றார். 

பயந்து மற்றவர்கள் ஒதுங்கி நிற்கும் அவலத்திலும், ’நிர்பயா’ வாகச் செயல்பட்ட இப்பெண்ணின் தைரியத்தை மெச்சியே ஆக வேண்டும்.



No comments:

Post a Comment