சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

பீனிக்ஸ் பெண்ணாய் சிலிர்த்தெழுந்த அருணிமா!

த்தர பிரதேசத்தை சார்ந்த அருணிமா சின்ஹா, சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உயர்ந்த மலையான 'மான்டே ரோசா' என்ற மலைப்பயணத்தை, கடந்த சுதந்திர தினத்தன்று நிறைவேற்றியிருக்கிறார். இந்திய தேசியக் கொடியை ஏற்றி ஜனகனமண பாடியும் வந்திருக்கிறார்.

அருணிமா கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டவர். இனி இவரது வாழ்க்கை முடங்கிவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், பீனிக்ஸ் பெண்ணாய் சிலிர்த்தெழுந்து வந்திருக்கிறார் அருணிமா.

தேசிய அளவிலான வாலிபால் மற்றும் புட்பால் விளையாட்டு வீராங்கனையான இவர், ஹெட் கான்ஸ்டபிள் வேலைக்கான எழுத்துத்தேர்வு எழுதுவதற்காக, கடந்த ஏப்ரல் 11, 2011 ஆம் ஆண்டு பத்மாவதி எக்ஸ்பிரஸில் பயணித்திருக்கிறார். அப்போது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவம் நடந்தது.


இவரிடமிருந்து உடைமகளை பறிக்க வேண்டும் என்று திட்டமிட்ட திருடர்களுடன் இவர் போராட,  ஓடும் ரயிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அந்த விபத்தில் இவரது காலில் பலத்த அடிபட்டு ஒரு காலையே அகற்ற வேண்டிய நிலைமை. இதனைத் தொடர்ந்து, ஆல் இந்தியா இன்ஸ்ட்டியூட் ஃஆப் மெடிக்கல் சைன்ஸில் நான்கு மாத சிகிச்சையை தொடர்ந்த இவருக்கு, தனியார் நிறுவனமொன்று செயற்கை கால் வழங்க முன் வந்தது. போலீஸ் விசாரணையின் போது, 'இவர் தற்கொலைக்கு முயன்றிருப்பார் அல்லது ரயில்வே ட்ராக்கை கடக்கும் போது விபத்து ஏற்பட்டிருக்கும்!' என்று சொல்ல, அவர்களை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து  வெற்றி பெற்றார்.

மருத்துவமனையில் இருந்த போது கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கதையை கேட்ட அருணிமாவுக்கு, தானும் இதிலிருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு தட்டியது. அப்போது தான் அவருக்கு மலையேற வேண்டும் என்ற எண்ணம் உதித்திருக்கிறது.

இதற்காக,  2011 ஆம் ஆண்டு எவரஸ்ட்டை அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேன்திரி பாலை தொடர்பு கொண்டு,  தனக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொள்ள, அவரும் பயிற்சி வழங்கினார். மேலும், மலையேற்றத்தின் அடிப்படை விசயங்களை கற்றுக் கொள்ள, உத்ரகாஷியில் இருக்கும் Nehru Institue of Mountaineering ல் தன் மூத்த சகோதரன் ஓம் பிரகாஷ் உதவியுடன் படித்தார்.
முதல் முயற்சியாக 6150 மீட்டர் உயரமுடைய ஐஸ்லாண்ட் பீக் சென்று வந்தார். தன்னுடைய இன்ஸ்ட்ரெட்க்டர் சூசனுடன் 6622 மீட்டர் உயரமுடைய மவுண்ட் சாம்செர் என்று அடுத்தடுத்து பயணங்கள் சென்று வர, பச்சேன்திரி பால் உதவியுடன் மவுண்ட்  எவரெஸ்ட் பயணத்தை தொடர்ந்தார். 52 நாட்களில் தன் இலக்கை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்.
செயற்கை காலுடன் மலையேறி சாதனை படைக்கும் முதல் இந்தியப் பெண்ணும் இவரே. ஏழு கண்டங்களில் இருக்கும் உயரமான மலைகளுக்கு பயணிக்க வேண்டும் என்பதே இவரது இலக்கு. ஆப்ரிக்காவில் இருக்கும் மவுண்ட் கிளிமாஞ்சரோ, ரஷ்யாவில் இருக்கும் எல்பிரஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் கோசைஸ்கோ போன்ற மலைப்பிரதேசங்களில் எல்லாம் பயணித்த இவரது அடுத்த பயணம், சவுத் அமெரிக்காவில் இருக்கும் 6960 மீட்டர் உயரமுடைய அகோன்ககுவா.

தொடர்ந்து இவர், தன் சுயசரிதையை 'பார்ன் எகைன் த மவுன்டெயின்' என்ற புத்தகமாக எழுத, அதனை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கிறார். இவருக்கு 2015 ஆம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதும் கிடைத்திருக்கிறது. இவரது சுயசரிதை கதையை திரைப்படமாக எடுக்கும் வேலையில் நடிகரும், இயக்குனருமான ஃபர்கான் அக்தர் முனைந்துள்ளார்.

அருணிமாவின் கனவு என்ன தெரியுமா?

''நான் எனது இலக்கை அடைந்தாலும், என்னைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும். அவர்கள் தங்களது இலக்கை அடைந்திட உதவி செய்ய வேண்டும். இதனால் மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் சுயமாக நிற்க முடியும். இவர்களுக்காக ஒரு விளையாட்டு பயிற்சிப் பள்ளி தொடங்கலாம் என்றிருக்கிறேன். இதற்காக உத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டதில் நிலமும் வாங்கிவிட்டேன். என்னுடைய கனவு, உடல் ஊனமுற்றோர் தங்களது இலக்கினை அடைய வேண்டும் என்பதே. அவர்களுக்கான ஒரு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். சுதந்திரமாக இந்த சமுதாயத்தின் ஒரு அங்கமாக வளம் வர வேண்டும். அதுவே என் கனவு'' தீர்க்கமாய் முடிக்கிறார் அருணிமா.



No comments:

Post a Comment