சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2015

சச்சினுக்கு பிறகு சங்ககாராவுக்கு நடுவர்களும் மரியாதை!


லங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கராவுக்கு இந்தியாவுக்கு எதிரான இந்த 2வது டெஸ்ட் போட்டியோடு தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
கொழும்பு சாரா ஓவல் மைதானத்தில் சொந்த மண்ணில்  கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சங்கக்காரா, தனது சொந்த மண்ணிலே உறவினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் விடைபெறுகிறார். போட்டி முடிந்ததும்  இலங்கை கிரிக்கெட் வாரியம் இவருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா சார்பில் பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் கொழும்புவுக்கு நேரில் சென்று சிறப்பு பரிசு வழங்கி சங்ககாராவை கவுரவப்படுத்தினார்.

கொழும்புவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து 2வது நாளான இன்று இலங்கை அணி பேட் செய்ய களமிறங்கியது. கருணரத்னேவும் குஷால் சில்வாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். இதில் கருணரத்னே 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, தனது கடைசி போட்டியில் பேட் செய்ய சங்ககாரா களம் கண்டார்.
மைதானத்திற்குள் சங்ககாரா வரும் போது இந்திய அணியின் அனைத்து வீரர்களும் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். இதில் போட்டி நடுவர்கள் ஆஸ்திரேலியாவின் ஆக்ஜென்போர்டும் டியூக்கரும் கூட கலந்து கொண்டு சங்ககாராவுக்கு மரியாதை செய்தனர்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் சச்சின் தெண்டுல்கருக்கு பிறகு நடுவர்களிடம் இத்தகையை மரியாதையை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் சங்ககாராதான். தற்போது 37 வயதான சங்கக்காரா இதுவரை 133 டெஸ்டில் விளையாடி 38 சதத்துடன் 12,350  ரன்கள்  (சராசரி 57.71) எடுத்துள்ளார். 




No comments:

Post a Comment