சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Aug 2015

சில மணிநேரங்களில் சாதனை படைத்த புலி!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன் , ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா, தம்பி ராமையா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி செப்டம்பர் 17ம் நாள் வெளியாக உள்ள படம் ‘புலி’. இந்த படத்தின் டீஸர் , இசை என விஜய் பிறந்த நாள் சிறப்பாக வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. 
நள்ளிரவு 12 மணிக்கு புலி டிரெய்லர் வெளியிடப்பட்டது. வெளியிட்ட 15 நிமிடங்களில் 1 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் இதைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பலரும்#PuliTrailerCountdownBegins என ட்ரெண்ட் செட் செய்து கொண்டாடினர். இந்நிலையில் புலி மிகச்சில மணிநேரங்களில் 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் முழுமையாக 12 மணிநேரங்கள் கூட முழுமை பெறாத நிலையில் 4 லட்சம் பார்வையாளர்களை கடப்பது அவ்வளவு எளிதல்ல. மேலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. 
புலி படத்தின் அதிகாப்பூர்வ டிரெய்லரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்ட தருணத்தில் ரசிகர்கள் ஏகொபித்த வரவேற்புகளை கொடுத்துள்ளனர். குள்ளர்கள், கம்பீர மகாராணியாக ஸ்ரீதேவி, விஜய்யின் மாஸ் எண்ட்ரி என டிரெய்லர் பிரம்மாண்டமாகவே இருக்கிறது. எனினும் இதிலும் கதையை அந்த அளவிற்கு நிர்ணயம் செய்ய முடியவில்லை. 
No comments:

Post a Comment