சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Aug 2015

ரஜினி சரத்குமார் சந்திப்பில் நடந்ததென்ன?

நடிகர்சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் அணியினர் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் சரத்குமார் அணி ஒன்றுமே செய்யவில்லை. ஒரேநாளில் ரஜினி கமல் ஆகியோரைச் சந்தித்து விஷால் அணியினர் பரபரப்பைக் கிளப்பினார்கள்.

உடனே சரத்குமார் ரஜினியைச் சந்தித்து ஒரு மணிநேரம் பேசினார் என்று செய்தி வருகிறது. இதுபற்றி சரத்குமார் சொல்லும்போது, அவரைச் சந்தித்தது உண்மைதான், சந்திப்பின்போது பல விசயங்கள் பேசினோம் நடிகர்சங்கத்தேர்தல் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம் என்று சொல்லியிருக்கிறார். என்ன கருத்து? என்பதைப் பற்றிச் சொல்லவில்லை. 

விஷால் அணியினர் சந்தித்தபோது, நிச்சயம் சரத் அணி பற்றி நிறையக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் ரஜினி, சரத்தைச் சந்தித்தபோது அதுபற்றிய விளக்கங்களைக் கேட்டிருக்கலாம் என்றும் சிக்கலை மேலும் பெரிதாக்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இன்னொருபக்கம், ரஜினி சரத் சந்திப்பு புகைப்படம் இல்லாமல் செய்தியாக மட்டும் வெளியாகியிருப்பதால் சந்திப்பு நடந்ததா அல்லது போனில் மட்டும் பேசினார்களா? என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள்.No comments:

Post a Comment