சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Aug 2015

நடிகை அனுஷ்கா அதிகரித்த உடல் எடை எவ்வளவு தெரியுமா?

புதிய படத்துக்காக நடிகை அனுஷ்கா 20 கிலோ எடை கூடி, குண்டு பெண்ணாக காட்சி அளிக்கிறார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை அனுஷ்கா, ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் இரு வேடங்களில் வந்து, பேயுடன் சண்டை போட்டதோடு, 'வானம்' படத்தில் விலைமாது வேடத்தில் துணிச்சலாக நடித்தார். 

மேலும், 'தெய்வத்திருமகள்' படத்தில் தோன்றிய வக்கீல் கதாபாத்திரம் பேசப்பட்டது. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் வாள் சண்டை போட்டு அதிரடி வேடத்தில் கலக்கினார். ‘பாகுபலி’யிலும் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு, அரண்மனையின் பாதாள குகைக்குள் அடைபட்டு கிடக்கும் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் குண்டு பெண்ணாக இன்னொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உடல் பருமனாக இருக்கும் பெண் கேலி, கிண்டலுக்கு ஆளாகி, பிறகு வைராக்கியத்தோடு கடும் உடற்பயிற்சிகள் செய்து எப்படி தன் உடம்பை ஒல்லியாக மாற்றுகிறார் என்பதே கதை.

இந்த படத்துக்காக அனுஷ்கா, 20 கிலோ எடை கூடி குண்டு பெண்ணாக மாறியிருக்கிறார். இதற்காக தினமும் நிறைய சாப்பிட்டாராம். புரோட்டீன் உணவுகளையும் அதிக அளவு சாப்பிட்டு, எடை கூட்டி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது 

அனுஷ்கா குண்டாக இருப்பது போன்ற படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. 



No comments:

Post a Comment