சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2015

கிரிக்கெட்: இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்!

கிரிக்கெட் விளையாட்டை இந்தியா, ஆஸ்திரேலிய நாடுகளின் வாரியங்கள் அழித்து வருவதாக, ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ஓவல் மைதானத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன், இங்கிலாந்து எம்.பி டெமியன் கோலின்ஸ் தலைமையில், 100க்கும் மேற்பட்டவர்கள் ஓவல் மைதானத்திற்கு வெளியே திரண்டனர்.
பின்னர் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாட்டு வாரியங்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தலா ஒரு நாட்டுக்கு ஒரு நிமிடம் வீதம் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும்,  தற்போதைய ஐ.சி.சி. சேர்மனுமான ஸ்ரீநிவாசன், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் கில்ஸ் கிளார்க், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் வேல்லி எட்வர்ட்ஸ் ஆகியோர் கிரிக்கெட்டை அழித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். 



No comments:

Post a Comment