கடந்த 1980ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகர் நடிகைகளின் சந்திப்பு தொடர்ந்து 6வது ஆண்டாக நடைபெற்றது. ஆனால் இந்த முறை ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் சில நடிகர் -நடிகைகள் பொறுப்பேற்று நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நடிகைகள் லிசி, குஷ்பூ, சுகாஷினி ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பேற்றிருந்தனர்.
சென்னையை அடுத்த ஓலீவ் கடற்கரை சாலையில் நீனா ரெட்டி விடுதியில் நேற்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு கூடிய ஹீரோ- ஹீரோயின்கள் கூடி பழங்கதைகள் பேசி மகிழ்ந்தனர். இந்த முறை முழுக்க சிவப்பு நிறத்திலான ஆடைகள் அணிந்து கொண்டு நடிகர், நடிகைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்னக நடிகர்கள் மோகன்லால், சீரஞ்சிவி, வெங்கடேஷ் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களான ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான் ஆகியோரும், நடிகர்கள் சத்யராஜ், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் பார்வதி, ஜெயசுதா ஆகியோர் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
No comments:
Post a Comment