சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

நீ நல்ல மனசுக்காரன்யா; வெற்றியோடு வருவ': ஆ.ராசாவை வாழ்த்திய பொதுமக்கள்!

நீ நல்ல மனசுக்காரன்யா, உனக்கு ஒண்ணும் ஆகாது, வெற்றியோடு வருவ' என ஆ.ராசாவை அவரின் சொந்த ஊர் மக்கள் வாழ்த்தியுள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஆ.ராசா, அவரின் அண்ணன், நண்பர் சாதிக் பாட்சா உள்ளிட்டோர் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆ.ராசா உள்பட 17 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஆ.ராசா விளக்கம் அளிக்கையில், ''தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் என் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்துள்ளனர்'' என்றார்.

இந்நிலையில், ஆ.ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு இன்று (23ஆம் தேதி) காலை வந்தார். அவருக்கு பெரம்பலூரில் எல்லையான திருமாந்துறை டோல்கேட்டில் 500க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, 'தர்மம் வெல்லும்', 'தி.மு.க. மலரும்', 'உன்னால் தான் தி.மு.க. வளர்கிறது' என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இதனால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்து தி.மு.க. நகரமன்ற தலைவர் பாரியின் திருமணத்தில் கலந்து கொண்டு ஆ.ராசா பேசுகையில், ''என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை நீதிமன்றங்கள் வாயிலாக அணுகுவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை'' என்றார்.

இதன் பின்னர், லாடபுரத்தில் மரணம் அடைந்த குலோத்துக்கன், பிட்டர் மணிவேல் ஆகியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அங்கிருந்த வயதான பெண்கள் சிலர், ஆ.ராசாவிடம், நல்லா இருக்கியா என கேட்டனர். அதற்கு அவர், உங்க புண்ணியத்தில் நல்லாருக்கேன் என்று சொன்னார். அதற்கு அந்த பெண்கள், ''நீ நல்ல மனசுக்காரன்யா, உனக்கு ஒண்ணும் ஆகாதுய்யா. நீ வெற்றியோடு வருவ' என்று வாழ்த்தினார்கள். இதைக்கேட்ட ஆ.ராசா புன்னகையோடு, என்னையே நம்பியிருக்கும் இந்த மக்களுக்கு நல்லது செய்ய மீண்டு வருவேன் என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டார்.

ஆ.ராசா வருகை குறித்து அக்கட்சி வட்டாரத்தில் கேட்டபோது, ''ராசா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இதனால் தன் செல்வாக்கு குறைந்து விடக்கூடாது என்பதற்காக இன்று தனது சொந்த ஊரான பெரம்பலூர் முழுவதும் சுமார் 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்தார்" என்றனர்.



No comments:

Post a Comment