சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Aug 2015

விஷாலுக்கு நோ... சரத்குமாருக்கு ஓகே...!- சிம்பு ஓபன் டாக்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கே தனது ஆதரவு என நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷால் தலைமையில் இன்னொரு அணியும் களத்தில் நிற்கிறது. இரு அணியினரும் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நடிகர் சங்கத்தில் நான் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகிறேன். விஜயகாந்த் தலைவராக இருந்த காலத்தில் இருந்து செயற்குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். இப்போதைய தேர்தலில் இரண்டு அணிகள் நிற்கின்றன. இது தேவை இல்லை என்பது என் கருத்து. அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. என்னைப் பொறுத்தவரை சரத்குமார், ராதாரவி அணியை நான் ஆதரிக்கிறேன்" என்று கூறினார். 
 

ரஜினியுடன் சரத்குமார் சந்திப்பு

இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சரத்குமார் நேற்று சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

இந்த சந்திப்பு குறித்து சரத்குமார் கூறுகையில், "ரஜினிகாந்தை நான் சந்தித்து பேசியது உண்மைதான். அவர் நடிக்கும் புதிய படமான ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு பற்றியும், இதற்காக அவர் வெளிநாடு செல்வது பற்றியும் அவரிடம் கேட்டறிந்தேன். அடுத்து, தமிழ் திரையுலகில் நிலவும் தற்போதைய பிரச்னைகள் பற்றியும், வர இருக்கும் நடிகர் சங்க தேர்தல் பற்றியும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்" என்றார்.



No comments:

Post a Comment