இந்திய சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பில் பதிவு செய்யாத அல்லது நிதி திரட்ட தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாமென்று செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல நிறுவனங்கள் செபி நிபந்தனைகளின்படி செயல்படாமலும், செபியின் "கூட்டு முதலீட்டு திட்டங்கள்"-இன் கீழ் சேர்ப்பதற்கான சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காமலும் இயங்கி வருகின்றன.
இதனால் இவற்றில் முதலீடு செய்யப்படும் மக்களின் பணம் தவறான வழியில் செல்ல வாய்ப்பிருப்பதால், முதலீட்டாளர்கள் அத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாமென செபி எச்சரித்துள்ளது. மேலும் அத்தகைய நிறுவனங்கள் மீதும், அதன் இயக்குனர்கள் மீதும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
2011, ஜனவரி 1லிருந்து இதுவரை 91 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்களுக்கு எதிராக செபி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதன்படி இந்த நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் சம்பந்தப்பட்ட, இப்போது உள்ள திட்டங்கள் அல்லது புதிய திட்டங்கள் என எதன் மூலமும் நிதி திரட்ட தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே திரட்டிய நிதி மற்றும் சொத்துக்களையும் மாற்றவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் "கிஃப்ட் கலெக்டிவ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிட்டெட்" தவிர வேறு எந்த ஒரு நிறுவனமும் செபியின் "கூட்டு முதலீட்டு திட்டங்கள்"-இன் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
செபி அமைப்பிடம் பதிவு செய்யாத அந்த நிறுவனங்களில் பி.ஏ.சி.எல், என்.ஐ.சி.எல் இந்தியா, சுமங்கல் இண்டஸ்ட்ரீஸ், அடெல் லாண்ட் மார்க்ஸ் லிட் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
மற்ற நிறுவனங்களின் பட்டியல் கீழே உள்ள லிங்க்கில் தரப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் அல்லது அதன் இயக்குனர்கள் சார்ந்த எந்தவொரு நிதி திரட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அதில் பொது மக்கள் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதோடு உடனடியாக உரிய ஆதாரங்களுடன் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.
மேலும் முதலீட்டாளர்களும், பொது மக்களும் முதலீடு செய்வதற்கு முன் கீழ்வரும் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1. அந்த நிறுவனம் செபியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்
2. அந்த நிறுவனம் செபியின் "கூட்டு முதலீட்டு திட்டங்கள்"-இன் கீழ் தன்னை ஆவணப்படுத்தியுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
3. மேலும் "கூட்டு முதலீட்டு திட்டங்கள்"-இன் கீழ் செய்யப்படும் முதலீடு வங்கி மூலமான பரிவர்த்தனை மூலம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக பரிவர்த்தனைச் செய்ய அனுமதியில்லை.
4. எந்த உத்திரவாதமான உறுதியான வருமானமும் இந்தத் திட்டங்களில் இல்லை (ஆனால், குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்கும்)
No comments:
Post a Comment