சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் சங்ககாராவுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஜெர்சி நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
இலங்கை அணியின் முன்னணி வீரராக கடந்த 15 ஆண்டுகளாக திகழ்ந்த சங்ககாரா இன்றுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். கொழும்பு நகரில் 2வது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சங்ககாராவை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி, சங்ககாராவுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஜெர்சியை நினைவுப்பரிசாக வழங்கினார். இந்திய அணியின் 269ஆம் எண் ஜெர்சியில் இந்திய வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர். 269 எண் ஜெர்சி கேப்டன் விராட் கோலிக்குரியது ஆகும். முன்னதாக இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், சங்ககாராவுக்கு பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாக்கூர் நினைவு பரிசு வழங்கியது நினைவு கொள்ளத்தக்கது.

மேலும் சங்ககாரா விடை பெறுவது குறித்து விராட் கோலி ஒரு கடிதமும் எழுதியுள்ளார் அதில் ‘‘அன்பு சங்கக்காரா, அற்புதமான மனிதரான உங்களுடன் கிடைத்த அறிமுகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் சம காலத்தில் எனக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிருஷ்டம்தான். கிரிக்கெட்டில் நீங்கள் படைத்துள்ள சாதனைகளை விளக்க வார்த்தைகளே கிடையாது.
பல இளம் வீரர்களுக்கு ஊந்துகோலாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ள நீங்கள் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக நன்றி. நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment